![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Indian 2 First Single: தாய்மண் மேல் ஆணை! குதிரையில் வெறித்தனமாய் வந்த சேனாபதி! - இந்தியன் 2 பாடல் ரிலீஸ்!
கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது
![Indian 2 First Single: தாய்மண் மேல் ஆணை! குதிரையில் வெறித்தனமாய் வந்த சேனாபதி! - இந்தியன் 2 பாடல் ரிலீஸ்! Indian 2 First Single PAARAA Song Out Watch Lyric Video Kamal Haasan Shankar Anirudh Indian 2 First Single: தாய்மண் மேல் ஆணை! குதிரையில் வெறித்தனமாய் வந்த சேனாபதி! - இந்தியன் 2 பாடல் ரிலீஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/22/9f267f918acfb021b68bfe1522b860eb1716377904292572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியன் 2
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருது இசையமைத்துள்ளார்.கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, ஜெகன், காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர், ஜாகீர் உசேன், பியூஷ் மிஸ்ரா அகிலேந்திர மிஸ்ரா உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். தமிழ் , தெலுங்கு , மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படத்தில் வெளியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இப்படத்தின் திரையரங்க வெளியிட்டு உரிமத்தை ரெட் ஜயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. கேரளாவில் இப்படத்தை வெளியிடுவதற்கான உரிமத்தை கோகுலம் பிக்ச்சஸ் மற்றும் கர்னாடகாவில் ரோமியோ பிக்ச்சர்ஸ் வெளியீட்டு உரிமத்தை பெற்றுள்ளது.
இந்தியன் 2 முதல் பாடல்
The warrior has arrived! 🔥 1st single #PAARAA from INDIAN-2 is OUT NOW! 🤩🥁 Echoing the fearless spirit and the power of an Indian. 🇮🇳💪
— Lyca Productions (@LycaProductions) May 22, 2024
▶️ https://t.co/9VwuOyW2zm
Rockstar @anirudhofficial musical 🎹
Lyrics @poetpaavijay ✍🏻
Vocals @anirudhofficial #ShruthikaSamudhrala 🎙️… pic.twitter.com/OoAkIOFKhU
இந்தியன் 2 படத்தின் முதல் பாடலான் பாரா தற்போது வெளியாகியுள்ளது. பாரா பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். அனிருத் மற்றும் ஷ்ருதிகா சமுத்ரலா இருவரும் இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)