மேலும் அறிய

ஒரு பாடலுக்கு குத்தாட்டம்! கோடிகளில் புரளும் பிரபல ஹீரோயின்கள்! யாருக்கு எவ்வளவு?

இந்திய திரையுலகில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவதில் பிரபல ஹீரோயின்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்திய சினிமாவைப் பொறுத்தவரை அதிகளவு வசூலை வாரித்தரும் படங்களில் ஆக்‌ஷன் படங்களுக்கு என்று தனி இடம் உண்டு. நாயக அரிதாரத்தை நம்பியே பெரும்பாலான ஆக்ஷன் படங்கள் எடுக்கப்படுகிறது. அந்த படங்களின் திரைக்கதையுடன் சேர்ந்து இசையும், அதில் வரும் குத்து பாடல்களும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைகிறது.

அந்த வகையில், அந்த காலம் முதல் இந்த காலம் திரைப்படங்களில் ஐட்டம் சாங் எனப்படும் ஒரு பாடலுக்கு மட்டும் நடிகைகள் ஆடும் வழக்கம் இருந்து வருகிறது. அந்த காலகட்டத்தில் இதற்காகவே சில நடிகைகள் இருந்து வந்தனர். ஆனால், இன்று திரையுலகின் முன்னணி நடிகைகளே இதுபோன்று ஒரு குத்து பாடல்களுக்கு நடனம் ஆடி வருகின்றனர். அதற்காக படத்தின் நாயகியை விட அவர்கள் அதிகளவு சம்பளம் பெறுகின்றனர்.

அந்த வகையில், இந்தியாவில் தற்போது இதுபோன்ற குத்து பாடல்களுக்கு மட்டும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் யார்? என்று காணலாம்.

சமந்தா:

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்ற படம். இந்த படத்தில் இடம்பெற்ற ம்ம் சொல்றியா.. ம்ம்ஹ்ஹ்ம் சொல்றியா பாடல் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் என பாடல் வெளியான அத்தனை மொழிகளிலும் ஹிட். அந்த பாடலுக்கு பிரபல நடிகை சமந்தா ஆடியிருப்பார். படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு அந்த பாடலே மிகப்பெரிய பலமாக அமைந்தது. அந்த பாடலுக்காக படத்தின் நாயகியை விட சமந்தா அதிக சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. சமந்தா அந்த பாடலுக்காக மட்டும் ரூபாய் 5 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

தமன்னா:

சமந்தாவின் புஷ்பா பட பாடலுக்கு இணையாக இந்திய அளவில் ட்ரெண்டான பாடல் காவாலா பாடல். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்ற பாடல் ஆகும். படத்தில் ஓரிரு காட்சிகளில் நடித்த தமன்னா இந்த பாடலுக்கு நடனம் ஆடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். படத்தில் அதிக காட்சிகள் வந்த நடிகர்களை விட தமன்னாவிற்கு இந்த பாடலுக்காக அதிக தொகை ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் ஜெயிலர் படத்திற்காக மட்டும் ரூபாய் 3 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

கத்ரீனா கைஃப்:

பாலிவுட்டின் மிகவும் பிரபலமான நடிகை கத்ரீனா கைஃப். இவர் 2012ம் ஆண்டு ஹ்ரித்திக்ரோஷன் – சஞ்சய் தத் நடிப்பில் வெளியான அக்னிபத் படத்தில் இடம்பெற்ற சிக்னி சாமெளி பாடலுக்காக கத்ரீனா நடனம் ஆடியிருப்பார். அந்த பாடல் இந்தியில் மிக மிக பிரபலமான பாடலாக அமைந்தது. அந்த பாடலுக்காக அப்போதே அவருக்கு கோடியில் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கரீனா கபூர்:

பாலிவுட் உலகின் பிரபல நடிகை கரீனா கபூர். இவருக்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கான் நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள இவர் பெவிகால் சே என்ற பாடலுக்காக ரூபாய் 1.5 கோடி சம்பளம் வாங்கினார். 2012ம் ஆண்டு வெளியான தபாங் 2ம் பாகத்தில் கரீனா கபூர் இந்த ஒரு பாடலில் கலக்கியிருப்பார்.

மலைகா அரோரா:

பாலிவுட்டின் பிரபல நடிகையான மலைகா அரோராவும் குத்துப்பாடல்களுக்கு நடனம் ஆடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் ஒரு பாடலுக்கு ரூபாய் 50 லட்சம் வரை ஊதியமாக பெறுகிறார்.

தற்போது திரையுலகில் குத்து பாடல்களுக்கு நடனம் ஆடுவதற்கு தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அணுகும் நபர்களில் சமந்தா, தமன்னா போன்ற ஹீரோயின்களே முன்னணியில் உள்ளனர். இவர்களின் பட்டியலில் விரைவில் பிரபல ஹீரோயின்களும் இணைவார்கள் என்று கருதப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Embed widget