மேலும் அறிய

இசைபோலவே ரம்மியமாய்! ஹங்கேரி நாட்டிற்கு சுற்றுலா சென்ற இளையராஜா வெளியிட்ட பால்கனி வியூ போட்டோஸ்

Ilayaraaja Hungary Tour Photos; ஹங்கேரி நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள இசைஞானி இளையராஜா அங்கு எடுத்த புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Ilayaraaja Hungary Tour Photos;  இசைஞானி இளையராஜா என்றாலே நமக்கு தோன்றுவது இசை...இசை..இசை. இசை மட்டும் தான். நமது மனதை வருடும் இசையை அமைத்த இளையராஜாவின் மனதை வருடிய புகைப்படங்களைத் தனது சமூக வலைதளமான டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உலகின் மிகவும் அழகான நகரங்களில் ஒன்று புத்தாபெஸ்ட். இது ஹங்கேரி நாட்டின் தலைநகர். மிகவும் அழகான நகரமான இந்த நகரத்திற்கு ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள். உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா விரும்பிகள் நிச்சயம் செல்ல விரும்பும் நகரங்களில் ஒன்று புத்தபெஸ்ட். இப்படி பல குணங்களைக் கொண்ட இந்த நகரம் தான் ஹங்கேரி நாட்டின் சினிமா நகரமாகவும் உள்ளது. இந்த நகரத்திற்கு இசைஞானி இளையராஜா சுற்றுலா சென்றுள்ளார். 

புத்தபெஸ்ட் நகரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள இசைஞானி இளையராஜா, தான் தங்கியுள்ள அறையின் பால்கனியில் இருந்து மிகவும்  அழகிய நகரமான புத்தபெஸ்ட் நகரத்தினை புகைப்படங்களை எடுத்து தனது சமூகதள பக்கமான டிவிட்டர் பக்கத்தில், ’’ எனது அறையில் இருந்து அழகிய புத்தபெஸ்ட் நகரம்’’ என கேப்சன் இட்டு பகிர்ந்துள்ளார்.  ரோமர்களின் கட்டிடக்கலையில் மிகவும் அழகாக உள்ள அந்த நகரின் புகைப்படம் கட்டிடங்கள் நிறைந்ததாக உள்ளது. இதனை இசைஞானி இளையராஜாவை டிவிட்டரில் பின் தொடரும் அவரது ரசிகர்கள் லைக் செய்து கமெண்ட் செய்தும் வருகிறார்கள். குறிப்பாக கமெண்ட் செக்‌ஷனில் இசைஞானியிடம் புத்தபெஸ்ட் நகரில் தங்கியிருக்கும் அவரது ரசிகர்கள் அவரை தங்களது வீட்டிற்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்தும், தங்களுக்காக ஒரு பாடலை இசைக்கும் படியும் வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர். 

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட படங்களில் 7000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் மாமனிதன் திரைப்படம் இவரது இசையில் வெளியாகி பாடல்கள் பெறும் வரவேற்பை பெற்றன.  இதனிடையே கடந்த ஜூலை 6 ஆம் தேதி இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் பதவியேற்று கொண்டார். குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு முன்னிலையில் அவர் பதவியேற்று கொண்டார். அப்போது அவர் கடவுளின் பெயரால் ஆணை எடுத்து கொள்கிறேன் என்று கூறி பதவி பிரமானம் எடுத்து கொண்டார். மேலும், தான் மாநிலங்களவை உறுப்பினராக தேஎர்வு செய்யப்பதற்கு பலதரப்பில் இருந்தும் வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர். இதற்கு, ’’என்மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள் இந்திய அரசு எனக்களித்த கௌரவமான அங்கீகாரத்திற்காகப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த வண்ணமிருக்கின்றனர் . உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாதாகையால் எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி’’ என கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
Embed widget