மேலும் அறிய

இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் பத்தாவது திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் 1540வது படமாக  உருவாகும் இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தை தரவுள்ளது

‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ போன்ற வெற்றி திரைப்படங்கள் கொடுத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தொடங்கிய தனது பத்தாவது படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளார். இப்படத்தை, ஆஸ்கர் விருது பெற்ற சிக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் குனீத் மோங்கா கபூர் மற்றும் அசின் ஜெயின் தலைமையில், ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. உலகளவில் பாராட்டப்படும் இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் கார்த்திக் சுப்புராஜ் முதன்முறையாக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இது அவருடைய 1540 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இணைவது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இசைஞானி இளையராஜா பகிர்ந்து கொண்டதாவது, "எனக்கு சினிமாவும் இசையும் உணர்வுப்பூர்வமானவ. ஒரு கதையின் நேர்மையும், அதை சொல்லும் மனிதர்களின் உண்மையும் தான் முக்கியம். கார்த்திக் சுப்புராஜ் உடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சினிமா மீதான அவரது ஆர்வம் அவருடைய பணிகளில் தெளிவாக தெரிகிறது. ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனி உணர்வும், இசையும் உண்டு. இந்தப் படத்தின் பின்னணி இசை அமைக்கும் போது, அந்த இசையை தனி ஆல்பமாகவே வெளியிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அந்த அளவுக்கு சிறப்பாக உருவாகியுள்ளது. என் ரசிகர்கள் அதை மிகவும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்”

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்து கொண்டதாவது, "கலையை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. கலைதான் நம்மை தேர்ந்தெடுக்கிறது என்று பலர் சொல்வார்கள். என் பயணமே அதற்கு சான்று. இசைஞானி இளையராஜா சார் உடன் பணியாற்றுவது என் வாழ்நாள் கனவு. அது என் பத்தாவது படத்தில் நனவாகியிருப்பது சிறப்பான தருணம். பல ஆண்டுகளாக அவரது இசையை கொண்டாடி வந்த ஒருவனாக அவருடன் இணைந்திருப்பது எனக்கு தனிப்பட்ட முறையிலும், தொழில்ரீதியாகவும் உணர்வுப்பூர்வமான தருணம். சிக்யா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸுடன், குனீத் மோங்கா கபூர் மற்றும் அசின் ஜெயின் ஆகியோருடன் இணைவதிலும் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்தப் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க ஆவலுடன் உள்ளேன்".

ஜியோ ஸ்டுடியோஸ் பிரசிடெண்ட்  ஜோதி தேஷ்பாண்டே கூறியதாவது, "கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இசைஞானி இளையராஜா போன்ற கலைஞர்களுடனும், சிக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடனும் இந்தப் படத்தை உருவாக்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். கதை சொல்லலும் இசையும் இணையும் இந்த திரைப்படத்தை, பெரிய திரையில் ரசிகர்களுக்கு கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம்" என்றார். 

சிக்யா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர், "இந்தப் படம் எங்களுக்கு மிகவும் நெருக்கமானது. இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். பல தலைமுறைகளை இசையால் கவர்ந்த இளையராஜாவுடன் அவர் இணைந்திருப்பது உற்சாகமான விஷயம். ஜியோ ஸ்டுடியோஸூடன் நாங்கள் முதன்முறையாக இணைந்திருக்கிறோம். நிச்சயம் சிறந்த படமாக இது அமையும்" என்றார். 

சிக்யா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் அசின் ஜெயின் பகிர்ந்து கொண்டதாவது, "கார்த்திக் சுப்புராஜ் தனித்துவமான படங்களை கொடுப்பவர். இளையராஜா சாரின் இசை காலங்களையும், மொழிகளையும் தாண்டி என்றும் நிலைத்திருப்பது. ஜியோ ஸ்டுடியோஸுடன் நாங்கள் முதல் முறையாக இணைந்திருக்கிறோம்.  இப்படிப்பட்ட ஜாம்பவான்களுடன் இணையும் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிய திரையில் பார்ப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்" என்றார்.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Bigg Boss: மக்கள் செல்வன் என்றும் பாராமல்..! விஜய் சேதுபதியை நக்கல் செய்த ஜேசன்! பிக்பாஸில் பரபரப்பு
Bigg Boss: மக்கள் செல்வன் என்றும் பாராமல்..! விஜய் சேதுபதியை நக்கல் செய்த ஜேசன்! பிக்பாஸில் பரபரப்பு
எங்க பாத்தாலும் கட்சிக்கொடி...இத மட்டும் பண்ணாதீங்க..தனுஷ் முகத்திற்கு நேராக சொன்ன சாய் பல்லவி
எங்க பாத்தாலும் கட்சிக்கொடி...இத மட்டும் பண்ணாதீங்க..தனுஷ் முகத்திற்கு நேராக சொன்ன சாய் பல்லவி
தனுஷைப் பார்த்து பொறாமை பட்டேன்...ஓம் படத்திற்கு மம்மூட்டி கொடுத்த மாஸ் பில்டப்
தனுஷைப் பார்த்து பொறாமை பட்டேன்...ஓம் படத்திற்கு மம்மூட்டி கொடுத்த மாஸ் பில்டப்
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 'அறிவு' திரைப்படம்
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 'அறிவு' திரைப்படம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: டபுள் கேம் ஆடும் காங்கிரஸ்.. ராகுல், சோனியாவிடம் தீர்வு கேட்பாரா விஜய்? அதிரும் அரசியல்களம்
CM Vijay: டபுள் கேம் ஆடும் காங்கிரஸ்.. ராகுல், சோனியாவிடம் தீர்வு கேட்பாரா விஜய்? அதிரும் அரசியல்களம்
CHN-BLR Highway: 10KM-க்கு 90 நிமிடங்களா..! தவிக்கும் வாகன ஓட்டிகள், ஸ்ரீபெரும்புதூர் - சுங்குவார்சத்திரத்திற்கு தீர்வு எப்போது?
10KM-க்கு 90 நிமிடங்களா..! தவிக்கும் வாகன ஓட்டிகள், ஸ்ரீபெரும்புதூர் - சுங்குவார்சத்திரத்திற்கு தீர்வு எப்போது?
TN Weather News: அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை, காஞ்சிக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை, காஞ்சிக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
கந்த சஷ்டி விரதம் இன்று முடிக்கிறீர்களா? விரதத்தை நிறைவு செய்யும் சரியான முறை இதுதான்!
கந்த சஷ்டி விரதம் இன்று முடிக்கிறீர்களா? விரதத்தை நிறைவு செய்யும் சரியான முறை இதுதான்!
ICC Worldcup: மீண்டும் இந்தியாவில் ODI உலகக் கோப்பை..! பட்டியலை வெளியிட்ட ஐசிசி - சாம்பியன்ஸ் ட்ராபி எப்போது?
மீண்டும் இந்தியாவில் ODI உலகக் கோப்பை..! பட்டியலை வெளியிட்ட ஐசிசி - சாம்பியன்ஸ் ட்ராபி எப்போது?
Weekly Rasipalan: மேஷம் முதல் கடகம் வரை.. எந்த கிழமையில் என்ன வழிபாடு செய்தால் பணவரவு அதிகரிக்கும்?
Weekly Rasipalan: மேஷம் முதல் கடகம் வரை.. எந்த கிழமையில் என்ன வழிபாடு செய்தால் பணவரவு அதிகரிக்கும்?
IND vs NZ: வாவ்... இப்படி ஒரு பவுலிங்கை பார்த்து எவ்ளோ நாளாச்சு? நெருக்கடியில் வென்று கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள்!
IND vs NZ: வாவ்... இப்படி ஒரு பவுலிங்கை பார்த்து எவ்ளோ நாளாச்சு? நெருக்கடியில் வென்று கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள்!
Car Accident: ஜீப் மீது மோதி அந்தரத்தில் பறந்த கார்..! தப்பித்து ஓட முயன்ற பெண் படுகாயம் - வைரல் வீடியோ
ஜீப் மீது மோதி அந்தரத்தில் பறந்த கார்..! தப்பித்து ஓட முயன்ற பெண் படுகாயம் - வைரல் வீடியோ
Embed widget