மேலும் அறிய

உஷார்..! வாய்ப்பு தேடி செல்லும்போது சுதாரிப்புடன் இருங்கள் - இளம் நடிகைகளுக்கு நடிகர் விஷால் அறிவுரை

திரையுலகில் 20% நடிகைகளுக்கு தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதாகவும் மற்ற 80% பேர் சினிமாவில் நடிப்பதற்காக பல இடங்களில் ஏமாற்றப்படுகிறார்கள்

நடிகர் விஷாலின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கம்  ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில்  5 வது ஆண்டாக முதியோர்களுக்கு காலை உணவினை  வழங்கி தனது பிறந்தநாள் விழாவை நடிகர் விஷால் கொண்டாடினார்.

1 மணி நேரம் தாமதமாக நடிகர் விஷால் வந்ததால் முதியோர்கள் பசியோடு காத்திருந்தனர். 8 மணிக்கு வருவதாக கூறிய விஷால் 9 மணி வந்து முதியவர்களுக்கு உணவினை வழங்கினார்.

பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த விஷால்

என் பிறந்த நாளை எப்போதும் இந்த இடத்தில் வந்து தான் தொடங்குவேன், இவர்களை சந்திப்பது மிகப்பெரிய பாக்கியம் அவர்களுடைய ஆசிர்வாதம் மிகப்பெரிய பாக்கியம்.நான் உணவு வழங்கவில்லை என்றாலும் அவர்கள் என்னை வாழ்த்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன் அவர்கள் மனசார வாழ்த்தினார்கள் என்றார்.

கேரளா ஹேமா கமிட்டி குறித்து பேசிய விஷால், தமிழ்நாட்டில் நடிகைகளுக்கு பாதுகாப்பான சூழல் உள்ளது. அவரவர்கள் பொறுப்பில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். நடிகைகள் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பாளர்கள் வைத்துள்ளார்கள்.

20% தான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மற்றவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் நிறைய அலுவலகங்களில் ஏமாற்றம் அடைகிறார்கள். எந்த கம்பெனிக்கு செல்கிறார்கள் அவர்கள் சொல்வது உண்மையா? திரைப்படம் எடுக்கிறவர்களா? என்பது குறித்து சுதாரிப்பு கொள்ள வேண்டும்.

ஹேமா கமிஷன் போன்று தமிழ் திரைப்பட சங்கம் சார்பிலும், தமிழ் திரைப்பட உலகில் 10 பேர் கொண்ட ஒரு குழு அமைக்க நடிகர் சங்கம் சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது விரைவில் அமைக்கப்படும்

யாரோ ஒருவர் பைத்தியக்கார தனமாக ஒரு பெண்ணை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்வார்கள். ஒரு வியம் என்ன என்றால் அந்த பெண்ணுக்கு தைரியம் வேண்டும், அப்படி கேட்கிறவர்களை செருப்பால் அடிக்க வேண்டும், யாராக இருந்தாலும் பெண்களை இதுபோன்று பயன்படுத்த நினைப்பவர்களுக்கு தண்டனை கிடைத்தாக வேண்டும்.

தமிழ் சினிமாவிலும் காலம் காலமாக குற்றச்சாட்டு இருந்து கொண்டு தான் உள்ளது இங்கும் அது போல் பிரச்சினைகள் இருக்கலாம்.

உப்மா கம்பெனிகள் ஒரு ஆபிஸ் போட்டு போட்டோ ஷூட் எடுத்து பெண்களை பயன்படுத்தி கொள்கிறார்கள். அதை நான் மறுக்கவில்லை.

தமிழ் திரையுலகில் இப்படி இருப்பதை கண்டுபிடிக்க நாங்கள் போலீஸ் இல்லை. நடிகைகள் யாராவது தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்

தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக் குறித்த கேள்விக்கு ; 

ஸ்ட்ரைக் செய்து என்ன செய்யப் போகிறீர்கள்? எதற்கு ஸ்ட்ரைக் ? அதனால் என்ன பயன். பணம் இருக்கிறவர்கள் படம் எடுப்பார்கள். எல்லா தயாரிப்பாளர்களும் விமானம் பிடித்து பாம்பேக்கு சென்று அமேசான், நெகட்பிலிப்ஸ் நிறுவனத்திடம் பேசி முடிவெடுங்கள் என்றார்.

யாராவது வந்து அட்ஜெஸ்மெண்ட்க்கு அழைத்தால் செருப்பால் அடியுங்கள். நடிகர் சங்கம் போலீஸ் ஸ்டேசன் கிடையாது, எங்களிடம் புகார் வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Vijayakanth: ஜோசப் விஜய்யாக நடித்த கேப்டன் விஜயகாந்த்..! ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த அந்த படம் என்ன தெரியுமா?
Vijayakanth: ஜோசப் விஜய்யாக நடித்த கேப்டன் விஜயகாந்த்..! ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த அந்த படம் என்ன தெரியுமா?
Rajinikanth: பாரதிராஜா எப்படி கதை கேட்பாரு தெரியுமா? சூப்பர்ஸ்டார் பகிர்ந்த ரகசியம்!
Rajinikanth: பாரதிராஜா எப்படி கதை கேட்பாரு தெரியுமா? சூப்பர்ஸ்டார் பகிர்ந்த ரகசியம்!
Karthigai Deepam: கருப்பு ஆட்டம் ஆடும் ராஜராஜன்.. பிரசவ வலியில் துடிக்கும் ரோகிணி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கருப்பு ஆட்டம் ஆடும் ராஜராஜன்.. பிரசவ வலியில் துடிக்கும் ரோகிணி! கார்த்திகை தீபத்தில் இன்று
Thalapathy Vijay: தளபதி தெரியும்.. இளைய தளபதி தெரியும்..! இளந்தென்றல் விஜய்யைத் தெரியுமா?
தளபதி தெரியும்.. இளைய தளபதி தெரியும்..! இளந்தென்றல் விஜய்யைத் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Police Announcement : காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
India Vs America: மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
Trump about Hormuz: “ஹார்முஸ் ஜலசந்திய ‘ட்ரம்ப் ஜலசந்தி‘-ன்னு மாத்திடலாமா.?“: அமெரிக்க அதிபரின் சேட்டையான பதிவு
“ஹார்முஸ் ஜலசந்திய ‘ட்ரம்ப் ஜலசந்தி‘-ன்னு மாத்திடலாமா.?“: அமெரிக்க அதிபரின் சேட்டையான பதிவு
ஹூண்டாய் புது SUV: வென்யூவை விடப் பெரிசா.. க்ரெட்டாவை விட மலிவா! சிஎன்ஜி, ADAS வசதிகளுடன்!
ஹூண்டாய் புது SUV: வென்யூவை விடப் பெரிசா.. க்ரெட்டாவை விட மலிவா! சிஎன்ஜி, ADAS வசதிகளுடன்!
iPhone Air Vs Galaxy S25 Edge: ஆப்பிள் ஐபோன் ஏர்-ஆ? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-ஆ.? எது சக்தி வாய்ந்தது.? முழு ஒப்பீடு இதோ
ஆப்பிள் ஐபோன் ஏர்-ஆ? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-ஆ.? எது சக்தி வாய்ந்தது.? முழு ஒப்பீடு இதோ
Apple Vs Xiaomi: ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த சியோமி.! ஐபோன் அல்ட்ராவிற்கு முன்பாக மடிக்கும் போன் அறிமுகம்; எப்போது தெரியுமா.?
ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த சியோமி.! ஐபோன் அல்ட்ராவிற்கு முன்பாக மடிக்கும் போன் அறிமுகம்; எப்போது தெரியுமா.?
பட்ஜெட் கார், கிரெட்டாவுக்கு சவால்; டாடா கர்வ் சீரிஸ் எக்ஸ் அறிமுகம்: விலை, டிசைன், அம்சங்கள்!
பட்ஜெட் கார், கிரெட்டாவுக்கு சவால்; டாடா கர்வ் சீரிஸ் எக்ஸ் அறிமுகம்: விலை, டிசைன், அம்சங்கள்!
Embed widget