மேலும் அறிய

சமையலில் கில்லாடி.. ஒரு கோடி பரிசு.. ஆஸி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் கலக்கிய இந்தியர்!

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முக்கியக்காரணம் நான் எனது தாத்தா மற்றும் பாட்டியுடன் சேர்ந்து பார்த்த சமையல் நிகழ்ச்சிகள் தான்

ஆஸ்திரேலியா மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியைச்சேர்ந்த ஐஸ்டின் நாராயணன், தனது சொந்த உணவகத்தை விரைவில் தொடங்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 உலகளவில் மிகவும் பிரபலமான சமையல் நிழ்ச்சிகளில் ஒன்று மாஸ்டர் செஃப். பல்வேறு நாடுகளில் பிரபலமாகி வரும் நிலையில், தமிழிலும் தற்போது ஒளிப்பரப்பாகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 27 வயதான ஜஸ்டின் நாராயணன் வெற்றி பெற்றார். இதோடு மட்டுமில்லாமல் இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் மதிப்பிலான 2,50,00 ஆஸ்திரேலியன் டாலரை பரிசுத்தொகையாக வென்றார். இந்த வெற்றிக்குறித்து பேசிய ஜஸ்டின் நாராயணன், இந்த சமையல் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவேன் என ஒருபோதும் நினைத்தது இல்லை என்றும் ஆனால் என் குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்பார்ப்பினை நிறைவேற்றியதாக தெரிவித்திருந்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும் இந்த வெற்றியினைப் பெரிதாக கொண்டாடவில்லை என்றும், பல மணி நேரம் நன்றாக தூங்கினேன். அதன்பிறகு எனது மனைவியுடன் சிறிது நேரம் செலவிட்டேன் என்றும் இதனையடுத்து குடும்ப உறுப்பினர்கள் மட்டும் நண்பர்களுடன் இரவு நேர உணவிற்கு வெளியில் சென்றோம் என கூறினார். இது ஒரு எளிமையான கொண்டாட்டமாகவே அமைந்திருந்தது எனவும் ஜஸ்டின் நாராயணன் கூறினார்.

  • சமையலில் கில்லாடி.. ஒரு கோடி பரிசு.. ஆஸி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் கலக்கிய இந்தியர்!

இதோடு இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முக்கியக்காரணம் நான் எனது தாத்தா மற்றும் பாட்டியுடன் சேர்ந்து பார்த்த சமையல் நிகழ்ச்சிகள் தான். இவை தான் என்னை சமைப்பதற்கான ஆர்வத்தினைத் தூண்டியது. இதோடு ஒவ்வொரு சமையல் நிகழ்ச்சிகளைப்பார்த்து வீட்டில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்களுக்கு சமைத்து தருவேன்.  இதனைக்கண்ட என்னுடைய உறவுகள் ஏன் நீ சமையல் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் செல்லக்கூடாதா? என்று கேள்வி எழுப்பியதோடு மாஸ்டர் செஃப்“ நிகழ்ச்சிக்கு விண்ணப்பிக்க வைத்தனர். இதனையடுத்து அவர்களின் நம்பிக்கை மற்றும் என்னுடைய ஆர்வம் தான் இந்த நிகழ்ச்சியில் என்னை வெற்றி பெற வைத்தது எனக் கூறினார்.

  • சமையலில் கில்லாடி.. ஒரு கோடி பரிசு.. ஆஸி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் கலக்கிய இந்தியர்!

மேலும் இந்த மாஸ்ட் செஃப் நிகழ்ச்சியின் வெற்றிக்குப்பின்னர், அடுத்து என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? என்ற அனைவரின் கேள்விக்கு தற்போது  பதிலளித்துள்ளார் ஜஸ்டின் நாராயணன். அதில் எனக்கென்று ஒரு சொந்த உணவகத்தைத் திறக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் அதற்கு முன்னதாக இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் அதிகளவில் உள்ளது என ஜஸ்டின் கூறுகிறார். மேலும் YouTube ல் பல வேடிக்கையான சமையல் வீடியோக்களை செய்து அப்லோட் செய்ய விரும்புவதாகம் அவர் கூறுகிறார். எனவே விரைவில் ஜஸ்டின் நாராணயன் உணவகம் பலருக்கு நல்ல விருத்தளிக்கும் விதமாக அமையவுள்ளது.

.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

எங்க பாத்தாலும் கட்சிக்கொடி...இத மட்டும் பண்ணாதீங்க..தனுஷ் முகத்திற்கு நேராக சொன்ன சாய் பல்லவி
எங்க பாத்தாலும் கட்சிக்கொடி...இத மட்டும் பண்ணாதீங்க..தனுஷ் முகத்திற்கு நேராக சொன்ன சாய் பல்லவி
தனுஷைப் பார்த்து பொறாமை பட்டேன்...ஓம் படத்திற்கு மம்மூட்டி கொடுத்த மாஸ் பில்டப்
தனுஷைப் பார்த்து பொறாமை பட்டேன்...ஓம் படத்திற்கு மம்மூட்டி கொடுத்த மாஸ் பில்டப்
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 'அறிவு' திரைப்படம்
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 'அறிவு' திரைப்படம்
கூகுள் குட்டப்பா இயக்குநரின் அடுத்த படம் பத்து நாள் ராஜா! விரைவில் திரையரங்கில்
கூகுள் குட்டப்பா இயக்குநரின் அடுத்த படம் பத்து நாள் ராஜா! விரைவில் திரையரங்கில்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
லஞ்சம் பெற்று போலியாக போக்சோ வழக்குப்பதிவு! - பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்!
லஞ்சம் பெற்று போலியாக போக்சோ வழக்குப்பதிவு! - பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்!
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
Embed widget