மேலும் அறிய

Daniel Balaji: பாலாஜி எப்படி டேனியல் பாலாஜி ஆனார் தெரியுமா? சித்திதான் காரணம்!

Daniel Balaji: மாரடைப்பு காரணமாக உயிரிழந்த டேனியல் பாலாஜிக்கு அந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான வில்லனாக வலம் வந்தவர் நடிகர் டேனியல் பாலாஜி. மறைந்த நடிகர் முரளியின் உடன் பிறவா சகோதரர் ஆவார். ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு கதாபாத்திரங்களாக தேர்வு செய்து அதை தனித்துமான மேனரிஸதோடு நடித்து அந்த கதாபாத்திரத்துக்கு வலு சேர்ப்பார்.

அதற்காகவே அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருக்கு வயது 48. 

Daniel Balaji: பாலாஜி எப்படி டேனியல் பாலாஜி ஆனார் தெரியுமா? சித்திதான் காரணம்!

சின்னத்திரை டூ வெள்ளித்திரை:

சித்தி, அலைகள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த டேனியல் பாலாஜி 'ஏப்ரல் மாதத்தில்' திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து காக்க காக்க, பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்து பிரபலத்தின் உச்சம் சென்றார்.  

ராதிகாவின் சித்தி சீரியலில் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் அதுவே அவரின் அடையாளமாகவே மாறி டேனியல் பாலாஜி என பிரபலமானார். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட்டான சித்தி சீரியலில் 'டேனியல்' என்ற பெயரில் வில்லனாக  அறிமுகமானார். கலைந்த நீண்ட தலைமுடியுடன் எப்போதும் கண்ணில் மிரட்டலான கோபத்துடன்  வெறித்தனத்துடன் நடித்திருந்தார். அனைவரும் அவரை டேனி என்றே அழைத்தனர். அந்த சீரியலுக்கு பிறகு அவர் பல படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் பேசப்பட்டாலும் சித்தி சீரியலில் அவர் நடித்த 'டேனியல்' பெயர் தான் கடைசி வரை அவருடன் ஒட்டிக்கொண்டது. 

Daniel Balaji: பாலாஜி எப்படி டேனியல் பாலாஜி ஆனார் தெரியுமா? சித்திதான் காரணம்!

டேனியல் பாலாஜி பெயர்:

இந்த பெயர் காரணம் குறித்து அவர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தார். அனைவரும் என்னை டேனி டேனி என அழைத்ததால் நானும் அவர்களுக்கு ரெஸ்பாண்ட் செய்ய ஆரம்பித்தேன். பின்னர் ஒரு முறை ஒரு ப்ராஜெக்டில் நான் நடித்த போது என்னுடைய பெயரை போடவே இல்லையே என என்னுடைய நண்பர்கள் அனைவரும் என்னிடம் கேட்டார்கள். அப்போது நான் புரொடக்ஷன் மேனேஜரிடம் சென்று கேட்டதற்கு உங்கள் பெயர் போட்டு இருக்கே. உங்களுக்கு என தனி டி.ஆர்.பி ரேட்டிங் இருப்பது உங்களுக்கு தெரியுமா? அப்படி இருக்கும்போது எப்படி உங்களுடைய பெயரை போடாமல் இருப்போம் என சொல்லி வீடியோவை காட்டினார்.

அதில் டேனியல் பாலாஜி என வந்தது. அது என்னுடைய பெயரையே இல்லையே யாரு இப்படி சொன்னது என கேட்டேன். அப்படியா உங்களை அனைவரும் டேனி என அழைக்கிறார்கள், நீங்கள் கையெழுத்து போடும்போது பாலாஜி என போடுறீர்கள். அதனால் உங்களுடைய பெயர் டேனியல் பாலாஜி என நினைத்தேன். இது நன்றாக தானே இருக்கு. நீங்க அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்ததால் தான் உங்களை அனைவரும் அப்படி அழைக்கிறார்கள். அது அப்படியே இருக்கட்டும் என புரொடக்ஷன் மேனேஜர் கூறியுள்ளார். இப்படித்தான் பாலாஜி, டேனியல் பாலாஜியாக மாறினார்.  

தலைப்பு செய்திகள்

எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
Suzuki e-Access Vs Yamaha EC-06: சுசுகி இ-ஆக்சஸா.? யமஹா இசி-06-ஆ.? எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? ரேஞ்ச், பவர், விலை ஒப்பீடு இதோ
சுசுகி இ-ஆக்சஸா.? யமஹா இசி-06-ஆ.? எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? ரேஞ்ச், பவர், விலை ஒப்பீடு இதோ
New Duster Hybrid Launch: கிரெட்டா, விதாராவுக்கு தலைவலி தான்.! டஸ்டரில் ஹைப்ரிட் மாடலை இறக்கும் ரெனால்ட்; லாஞ்ச் தேதி இதோ
கிரெட்டா, விதாராவுக்கு தலைவலி தான்.! டஸ்டரில் ஹைப்ரிட் மாடலை இறக்கும் ரெனால்ட்; லாஞ்ச் தேதி இதோ
Tata Aeris Variants: ‘Tough Guy'-ஆக வந்த டாடா ஏரிஸ் வாங்க பிளான் இருக்கா.? அப்போ அதோட வேரியண்ட்டுகள தெரிஞ்சுக்கோங்க
‘Tough Guy'-ஆக வந்த டாடா ஏரிஸ் வாங்க பிளான் இருக்கா.? அப்போ அதோட வேரியண்ட்டுகள தெரிஞ்சுக்கோங்க
Embed widget