மேலும் அறிய

Actor Michael Douglas: வாவ்! தஞ்சை பெரியகோவிலின் அழகை நேரில் ரசித்த ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகர்!

Actor Michael Douglas: தஞ்சை கோவிலில் கழுத்தில் மாலையணிந்தபடி மைக்கேல் டக்ளஸ் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Michael Douglas: பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ் தஞ்சை பெரியகோவிலை பார்வையிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. 
 

ஆஸ்கர் விருது வென்ற நடிகர்:

பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதுளை பெற்று பிரபலமானவர். இவர் கோவாவில் நடைபெற்ற 54வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்றிருந்தார். இவருக்கு சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 
 
இந்த விருதை பெறுவதற்காக மைக்கேல் டக்ளஸ் தனது மனைவி கேத்ரின் மற்றும் மகன் டைலனுடன் இந்தியா வந்தார். சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்ற மைக்கேல் டக்ளஸ், இந்தியாவின் சுற்றுலா தளங்களை பார்வையிட்டார். அதன் ஒருபகுதியாக தமிழகத்திற்கு வருகை தந்த அவர் தஞ்சை பிரதீஸ்வரர் கோயிலை பார்வையிட்டார். தஞ்சை பெரியகோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற மைக்கேல் டக்ளஸ் தமிழர்களின் பாரம்பரிய கட்டிடக்கலையை பார்த்து ரசித்தார். கோவிலில் அவருக்கு பூஜை செய்த மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தஞ்சை கோவிலில் கழுத்தில் மாலையணிந்தபடி மைக்கேல் டக்ளஸ் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

சர்வதேச திரைப்பட விழா:

54வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) கோவாவில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதன் தொடக்க விழா டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் திரைப்பட விழாவை தொடங்கி வைத்தார். சர்வதேச திரைப்பட விழாவில் மாதுரி தீக்சித், ஷாகித் கபூர், ஸ்ரேயா சரண், நுஷ்ரத் பரூச்சா, பங்கஜ் திரிபாதி, சாந்தனு மொய்த்ரா, ஸ்ரேயா கோஷல் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோர் கலந்துகொண்டு நடனமாடினர். 

மேலும் இந்நிகழ்வில் சல்மான் கான், வித்யா பாலன், ஆயுஷ்மான் குரானா, அனுபம் கெர், விக்கி கவுஷல், சித்தார்த் மல்ஹோத்ரா, அதிதி ராவ் ஹைதாரி, ஏ.ஆர்.ரஹ்மான், அமித் திரிவேதி உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலந்துகொண்டனர். மொத்தம் 9 நாட்கள் நடைபெற்ற விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

மேலும் படிக்க: 

தலைப்பு செய்திகள்

Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Karthigai Deepam: ஒர்க் அவுட்டான ரோகிணியின் ஆக்டிங்.. அசிங்கப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஒர்க் அவுட்டான ரோகிணியின் ஆக்டிங்.. அசிங்கப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
Sharanya Turadi : ‘புத்தகங்களை தூக்கி எறிந்துவிட்டு Make-Up வீடியோ போடணுமா?’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா துராடி ஆவேச பதிவு.!
'Make-Up வீடியோ போடனுமா’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா ஆவேசம்..!
"நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வார்த்தையை மாற்றிச் சொல்கிறேன்" - முதல்வர் விஜய்யின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திட்டத்திற்கு அஜித் வாழ்த்து

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kamarajar Death Controversy : ‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ கார் லைட் வெளிச்சத்தில் காமராசருக்கு இடம் தேடிய வரலாறு..!
‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ காமராஜர் இறந்தநாளில் நடந்தது இதுதான்..!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Nepal Flood: நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
Kia Sorento: ப்ராண்டின் முதல் ஹைப்ரிட்,டீசல் SUVயை இறக்கிய கியா - சொரெண்டோவின் விலை, அம்சங்கள், வசதி, மைலேஜ்
ப்ராண்டின் முதல் ஹைப்ரிட்,டீசல் SUVயை இறக்கிய கியா - சொரெண்டோவின் விலை, அம்சங்கள், வசதி, மைலேஜ்
Volkswagen: ஃபோக்ஸ்வாகன் கொடுத்த ஷாக்..! பாதி வண்டிகள் கட், ஒரு லட்சம் பேரின் வேலை பறிப்பு - என்ன காரணம்?
ஃபோக்ஸ்வாகன் கொடுத்த ஷாக்..! பாதி வண்டிகள் கட், ஒரு லட்சம் பேரின் வேலை பறிப்பு - என்ன காரணம்?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலேஜ்.. ஏதரின் Konarc இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டில் அப்படி என்ன இருக்கு?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலேஜ்.. ஏதரின் Konarc இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டில் அப்படி என்ன இருக்கு?
GOLD AND SILVER RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - ஒரு சவரனுக்கே இவ்வளவா.!!
GOLD AND SILVER RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - ஒரு சவரனுக்கே இவ்வளவா.!!
Cheapest Electric Cars: 421KM ரேஞ்ச், 6 ஏர் பேக்குகள், சன்ரூஃப்..! 5 மலிவான மின்சார கார்கள் - ரூ.4.69 லட்சத்துகே ஸ்டார்ட்
421KM ரேஞ்ச், 6 ஏர் பேக்குகள், சன்ரூஃப்..! நாட்டின் 5 மலிவான மின்சார கார்கள் - ரூ.4.69 லட்சத்துகே ஸ்டார்ட்
Embed widget