மேலும் அறிய

ANUPAMA: சித்திக்கு பெரியம்மா... பாக்கியலட்சுமிக்கு மகாலட்சுமி... இந்தியாவின் நம்பர் 1 சீரியலான அனுபமா... வருவாய் தெரியுமா?

40 வயது பெண் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஒரு சீரியலை ஆண்கள் அனைவரும் விரும்பி பார்ப்பது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக உள்ளது.இந்த கண்ணோட்டத்தை முற்றிலுமாக திருப்பி போட்டு விட்டது 'அனுபமா'

பொதுவாக சீரியல் என்றாலே ஆண்களின் முகத்தில் இனம் புரியாத கசப்பும் முகச்சுழிப்பும் ஏற்படும். வீட்டில் அம்மாவோ, மனைவியோ சீரியல் பார்க்கும் நேரங்கள் ஆண்களின் அத்தியாயங்களில் வெறுக்கப்படும் நேரங்களாகவே பெரும்பாலும் கருதப்படும். ஆனால் இந்த கண்ணோட்டத்தை முற்றிலுமாக திருப்பி போட்டு விட்டது ஹிந்தி சீரியலான அனுபமா…

2019 இல் வெளிவந்த லீனா கங்கோபத்யாயின் 'ஸ்ரீமோயே' என்ற பெங்காலி சீரியல் ஒன்றின் தழுவலே அனுபமா சீரியல். இந்த கால சீரியல்கள் அனைத்தும்  ஒரு ஆண் கை தவறி குங்குமத்தை ஒரு பெண்ணின் நெற்றியில் போட்டுவிடுவதால் அவர்கள் இருவருக்கும் எதிர்பாராத விதத்தில் திருமணம் முடிந்தது போன்ற கதைக்களம், மாமியார் அடித்ததில் மருமகள் சுருண்டு விழும் காட்சிகள், திருமணமான ஆண் மீது மோகம் கொள்ளும் முறைப்பெண், இதுபோன்ற க்ரிஞ்சு கதைக்களத்தை கொண்டுள்ள நிலையில், அனுபமா இந்திய சின்னத்திரை உலகின் புரட்சி என்றே கூறலாம்.

ANUPAMA: சித்திக்கு பெரியம்மா... பாக்கியலட்சுமிக்கு மகாலட்சுமி... இந்தியாவின் நம்பர் 1 சீரியலான அனுபமா... வருவாய் தெரியுமா?

நம்பர் 1 ரேட்டிங் 

ஒளிபரப்பான 89 வாரங்களில் 85 வாரங்கள் டெலிவிஷன் ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலை வகுத்துள்ளது. ஒடிடி தளத்தில் இந்த சீரியலின் ஒரு நிமிடத்திற்கு 150 லிருந்து 170 ரூபாய் வரை (cost per minute) மானியம் செய்யப்பட்டு வருகிறது. இரவு 10 மணியிலிருந்து 10.30 மணிவரை ஒளிபரப்பாகும் அனுபவமா சீரியலின் 10 வினாடி விளம்பர ஸ்லாட்டிற்கு 2.50 லட்சத்திலிருந்து 2.25 லட்சம் வரை கொடுக்க விளம்பரதாரர்கள் முன்வருவதாக பிரபல நாளிதழ் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. டிஸ்னி ஸ்டாரில் இந்த சீரியலை மாதந்தோறும் 100 மில்லியன் பார்வையாளர்கள் பார்க்கின்றனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

ஆண் ரசிகர் பட்டாளத்தை பெற்ற இந்திய சீரியல் :

ANUPAMA: சித்திக்கு பெரியம்மா... பாக்கியலட்சுமிக்கு மகாலட்சுமி... இந்தியாவின் நம்பர் 1 சீரியலான அனுபமா... வருவாய் தெரியுமா?

இந்த சீரியலின் தொடர் வெற்றியைத் தொடர்ந்து பிரபல இந்தி நாளிதழ் ஒன்று, அதன் ரசிகர்களிடம் பேட்டி எடுத்திருக்கிறது. அதில் சிலர் கூறிய சுவாரசியமான கருத்துக்கள் பின்வருமாறு:

சௌத்ரி என்பவர், அனுபமா சீரியல் வெளியாகி ஓராண்டிற்கு பிறகு நான் பார்க்க ஆரம்பித்தேன். நான் ஐபிஎல் தொடர் பார்க்கும் நேரத்தில் என் அம்மா இரவு 10 மணி முதல் 10.30 மணி வரை ரிமோட்டை வாங்கி இந்த சீரியல் பார்ப்பார். அப்போது நானும் இதை பார்க்க நேர்ந்தது.இந்திய சீரியல்களின் வழக்கமான சதிகள் நிறைந்த கதைக்கருவில் இருந்து மாறுபட்ட கதைகளத்தில் இந்த சீரியல் உருவாக்கப்பட்டு இருந்தது என்னை மிகவும் ஈர்த்தது. மேலும் அதில் மனச்சோர்வு, சிகிச்சை பற்றி எல்லாம் பேசப்பட்டது. இந்த சீரியல், பார்க்கும் இல்லத்தரசிகளின் மனதில் நேர்மறையான கருத்துக்களை விதைக்கும். மேலும், அவர் நெட் ஃப்ளிக்சில் ஒளிப்பரப்பாகும் பிரபல ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீரிஸிற்கு இணையாக அனுபமா சீரியலையும் விரும்புவதாக கூறியுள்ளார். 

இன்னொருவர் கூறுகையில், என் மனைவி இந்த சீரியலை பார்க்கும் பொழுது, வெறுப்புடன் நானும் பார்க்க தொடர்ந்து இரண்டு நாட்களில் எனக்கு பிடித்து போய்விட்டது. ஒரு பெண் சமூகத்தில் இருக்கும் சிக்கல்களை எவ்வாறு கையாள்கிறார், அதிலிருந்து எப்படி விடுபட்டு வாழ்க்கையை முன்னோக்கி எடுத்துச் செல்கிறார் என்ற கதைக்களம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. கடந்த வருடத்தில் எனக்கு தெரிந்த நான்கு ஐந்து ஆண்கள் இந்த சீரியலை பார்க்கின்றனர் என்ற செய்தியையும் நான் அறிந்து கொண்டேன். ஒவ்வொரு நாள் மாலையிலும் நாங்கள் இந்த சீரியல் குறித்து பேசிக் கொள்வோம். முன்னதாக, என் மனைவி பார்க்கும் பொழுது வெறுப்பாகும் நான், தற்பொழுது 10 முதல் 10:30 மணி வரை என்னை யாரும் தொந்தரவு செய்யாமல் விட்டுக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.

40 வயது பெண் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஒரு சீரியலை ஆண்கள் அனைவரும் விரும்பி பார்ப்பது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக உள்ளது. பொதுவாக ஆண் கதாநாயகர்கள் தங்களை விட பாதி வயதில் இருக்கும், ஏன் அதற்கும் கீழுள்ள பெண்களுடன் காதல் கொள்வது போன்ற காட்சிகளை பார்த்து பழகிய நமக்கு, இது போன்ற அதிசயங்களை பார்ப்பது ஆகாய தாமரை போல் இருக்கிறது அல்லவா! 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget