Watch video : பேத்தியின் திருமணக்கோலம்.. குழந்தையாய் மாறிய அழுத பாட்டி.. வைரலாகும் க்யூட் வீடியோ
மணமகள் தனது சொந்த வீட்டை விட்டு , மணமகனின் வீட்டிற்கு குடியேறும் நிகழ்வை 'bidai ceremony' என அழைக்கின்றனர்.
சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் திருமண கொண்டாட்டங்கள் தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது . சிலவற்றை பார்க்கும் பொழுது ஆட்டம் , பாட்டம் , கேளி , கிண்டல் என கொண்டாட்டங்கள் நிறைந்ததாகவும் சிலவற்றை பார்க்கும் பொழுது அம்மா - மகள் , அப்பா- மகள் , தம்பி - அக்காள் என உறவுகளின் உணர்ச்சி ததும்பலாகவும் இருக்கின்றது. இந்தியாவில் திருமண கொண்டாட்டங்களுக்கு முன்பைவிட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
View this post on Instagram
திருமணம் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் சற்று வித்தியாசமனாதும் உணர்ச்சிகள் மற்றும் உறவுகள் நிறைந்ததும் கூட. தாங்கள் ஆசையாக வளர்க்கும் மகளை , மணமகன் வீட்டில் வாழ வைப்பதற்காக அனுப்பி வைக்கும் சம்பிரதாயம் இந்திய கலாச்சாரத்தில்தான் காலம் காலமாக பின்பற்றப்படுகிறது. இது மணமகளுக்கும் , அவரது வீட்டாருக்கும் உணர்ச்சி மிக்க தருணம்தானே! என்றாலும் கூட அதனை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறார்கள் . தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் திருமணத்தை ஒரு வாரம் கொண்டாடுவார்கள் . நலங்கு, மருதாணி விழா , வரவேற்பு விழா, திருமண விழா , விருந்து என ஒவ்வொரு நாளும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மணமகள் தனது சொந்த வீட்டை விட்டு , மணமகனின் வீட்டிற்கு குடியேறும் நிகழ்வை 'bidai ceremony' என அழைக்கின்றனர்.
View this post on Instagram
அப்படித்தான் மணமகள் ஒருவர் தனது திருமண லெஹங்கா ஆடையுடன் , மணமகன் வீட்டிற்கு செல்ல தயாராகிறார். அவரை முழு அலங்காரத்துடன் கண்ட மணமகளின் பாட்டி , அவர் வீட்டை விட்டு செல்வதை நினைத்து விம்மி அழத்தொடங்குகிறார். உடனே அதை கண்ட மணமகள் , பதிலுக்கு அழாமல் தனது பாட்டியை கட்டிப்பிடித்து “ அழாதீங்க பாட்டி .. பக்கத்துலதான் இருப்பேன்..ஒரு ஃபோன் பண்ணுனா வரப்போறேன் “ என ஆறுதல் கூறுகிறார் . இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.