மேலும் அறிய

இமான் அண்ணாச்சியை போனில் கலாய்த்த ஜி.பி.முத்து... பிக்பாஸ் எண்ட்ரிக்கு முன் நடந்த சுவாரஸ்யம்!

‛ஜிபி முத்து பிக்பாஸ் போறீங்களா...’ எனக்கேட்கிறார் இமான் அண்ணாச்சி... அதற்கு ஜிபி முத்து கூறிய பதில் இது தான்...

ஜி.பி.முத்து பிக்பாஸ் போகிறார்... ஆடி கார் வாங்கினார்... ஆஹா ஆகிறார்... ஓஹோ ஆகிறார்... என்றெல்லாம் தகவல்கள் உலா வந்த நிலையில், நேற்றோடு ஜி.பி.முத்துவின் பிக்பாஸ் நுழைவு இல்லை என்பது உறுதியானது. ஜி.பி.முத்து போலவே பேசும் இமான் அண்ணாச்சி, பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது தான் கடைசி நேர ட்விஸ்ட். எந்த வீட்டுக்கு போனாலும், போகாமல் போனாலும் வீடு தேடி மொபைல் போன் வழியே ஊடுருவி வரும் ஜி.பி.முத்துவின் கலாட்டாக்கள் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. அந்த வகையில் இயக்குனர் சக்தி சிதம்பரத்தின் பேய் மாமா படம் ரீலிஸ் ஆனதும், அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்த ஜிபி முத்து, அவருடன் சேர்ந்து அந்த படத்தில் நடித்த நடிகர்களை பிராங்க் செய்ய முயற்சித்தார். அதில் முதலாவதாக படத்தில் நடித்த இமான் அண்ணாச்சிக்கு போன் செய்தார் ஜி.பி.முத்து... இதோ... அவர்களின் உரையாடல்...


இமான் அண்ணாச்சியை போனில் கலாய்த்த ஜி.பி.முத்து... பிக்பாஸ் எண்ட்ரிக்கு முன் நடந்த சுவாரஸ்யம்!

ஜி.பி.முத்து: உங்க படம் பேய் மாமா பார்த்தேன் நல்லா இருந்துச்சு. 

இமான் அண்ணாச்சி: ஓ... அப்படியா... சூப்பர் சூப்பர்!

ஜி.பி.முத்து: ஆமாண்ணே... எனக்கு ஒரு உதவி வேணும்....!

இமான் அண்ணாச்சி: ம்... சொல்லுங்கண்ணே...!

ஜி.பி.முத்து: என் தம்பி மணிக்கு பேய் பிடிச்சிருக்கு... கொஞ்சம் பேய் ஓட்டணும்ணே...!

இமான் அண்ணாச்சி: என்னது... பேய் ஓட்டணுமா...ஹலோ யாரு நீங்க... எங்கேயோ கேட்ட குரலா இருக்கு!

ஜி.பி.முத்து: அண்ணாச்சி... ரொம்ப சங்கடப்படுறான்... தம்பிக்கு பேய் ஓட்டணும்... அவனை கூட்டிட்டு வரட்டுமா!

இமான் அண்ணாச்சி: ஏய்... ஜிபி முத்தா...

ஜி.பி.முத்து: அண்ணாச்சி கண்டுபிடிச்சிட்டீங்களே...?

இமான் அண்ணாச்சி: ஜிபிமுத்து நல்லா இருக்கீங்களா... பிக்பாஸ் போறீங்களா?

ஜி.பி.முத்து: இல்ல... இல்ல... போகல அண்ணாச்சி... உங்க படம் பார்த்தேன்... நல்லா இருந்துச்சு!

(உண்மையில் அந்த நொடியில் இமான் அண்ணாச்சி தான் பிக்பாஸ் போவதற்கு தயாராக, தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்)


இமான் அண்ணாச்சியை போனில் கலாய்த்த ஜி.பி.முத்து... பிக்பாஸ் எண்ட்ரிக்கு முன் நடந்த சுவாரஸ்யம்!

இவ்வாறாக அவர்களின் உரையாடல் முடிந்தது. பின்னர் யோகிபாபு மற்றும் நடிகை ரேகா, மொட்டை ராஜாந்திரன் ஆகியோருக்கும் போன் செய்து ப்ராங்க் செய்தார் ஜி.பி.முத்து. 

அப்போது முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான நடிகை ராதா, ‛ஜிபி முத்துவிடம் பிக்பாஸ் போகிறீர்களா...’ என்று கேட்டார். அதற்கு ஜி.பி.முத்து, ‛இல்லை மேடம்... எனக்கு பிள்ளைகளை பார்க்காமல் இருக்க முடியாது... அதான் நான் போகல’ என்றார். 

இயக்குனர் சக்தி சிதம்பரம், ஜி.பி.முத்துவின் பக்கத்து ஊர்காரர் என்பதால் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, பேய் மாமா இரண்டாம் பாகம் எடுக்கப் போவதாகவும், அதில் ஜிபி முத்து நடிக்கப் போவதாகவும் சக்தி சிதம்பம் தெரிவித்தார். 

இதோ ஜிபிமுத்து ப்ராங்க் செய்த வீடியோ:

 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget