Bhimaa 2024: டீச்சர் போடுற டிரெஸ்ஸா இது? பீமா படத்தை விமர்சிக்கும் இணையவாசிகள்
கடந்த மார்ச் 8 ஆம் தேதி இயக்குநர் ஹர்ஷா இயக்கத்தில் கோபிசந்த் நடிப்பில் வெளியான படம் “பீமா”. இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர், மாளவிகா ஷர்மா என பலரும் நடித்திருந்தனர்.
![Bhimaa 2024: டீச்சர் போடுற டிரெஸ்ஸா இது? பீமா படத்தை விமர்சிக்கும் இணையவாசிகள் Gopichand's Bhimaa movie ott release in disney plus hotstar and getting condemn from netizens Bhimaa 2024: டீச்சர் போடுற டிரெஸ்ஸா இது? பீமா படத்தை விமர்சிக்கும் இணையவாசிகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/27bdf1e648ffc5633a98e4ad2296f8331714027482095572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தெலுங்கியில் நல்ல வரவேற்பை பெற்ற பீமா படத்தின் ஒரு காட்சி சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தைப் பெற்று வருகிறது.
பீமா:
கடந்த மார்ச் 8 ஆம் தேதி இயக்குநர் ஹர்ஷா இயக்கத்தில் கோபிசந்த் நடிப்பில் வெளியான படம் “பீமா”. இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர், மாளவிகா ஷர்மா, கிஷோர், நாசர், ரகுபாபு, முகேஷ் திவாரி, வெண்ணிலா கிஷோர், ரோகினி, ஷாம்னா காசிம் என பலரும் நடித்திருந்தனர். ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த பீமா படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
The Most Powerful #BHIMAA is Taking His Charge Again 😎 This Time in Small Screens 🔥
— 𝐆𝐨𝐩𝐢𝐜𝐡𝐚𝐧𝐝 𝐓𝐫𝐞𝐧𝐝𝐬™ (@TrendsGopiChand) April 25, 2024
Witness the High Action Packed - Intense Performances of Our Macho Hero #GopiChand with #BHIMAA Now, Streaming on @DisneyPlusHSTel
🔗: https://t.co/b5Bhx93YMQ@YoursGopichand #BHIMAAonHotstar pic.twitter.com/ZOeh6f0qYn
முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த கதையானது ரசிகர்களை கவர்ந்தது. சுமார் 14.5 கோடியில் தயாரான பீமா படம் ரூ.28 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படத்தில் கோபிசந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அண்ணன் இறந்து தம்பி உடம்புக்குள் அவரது ஆவி புகுந்து எதிரியை பழிவாங்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. பீமா படம் மகா சிவராத்திரி அன்று வெளியான இப்படம் விமர்சகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்நிலையில் இந்த் படம் ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் நேற்று நள்ளிரவில் வெளியானது.
தெலுங்கில் உருவான பீமா படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் டப் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தைப் பார்த்த தமிழ் ரசிகர்கள் கோபிசந்தை கழுவி ஊற்றி வருகின்றனர். குறிப்பாக மாளவிகா ஷர்மா பீமா படத்தில் பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளார். அவரை சுற்றி தான் கதை இருக்கிறது என்ற நிலையில் படத்திற்காக அவருக்கு வழங்கப்பட்ட ஆடைகள் பற்றி சரமாரியான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
🤦♂️🤦♂️#Bhimaa
— Christopher Kanagaraj (@Chrissuccess) April 25, 2024
pic.twitter.com/nVv9PSFUnB
பள்ளியில் வேலை பார்க்கும் பகுதி நேர ஆசிரியை கேரக்டருக்கு இப்படி கவர்ச்சியாக இருக்கும் ஆடையை கொடுக்கலாமா? என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
மேலும் படிக்க: Exclusive: ”எல்லோரையும் அடிச்சு பத்தனும்” – வடக்கன் டீசருக்கு புது விளக்கம் கொடுத்த இயக்குநர் பாஸ்கர் சக்தி..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)