மேலும் அறிய

Vinayak Chandrasekaran : 'குட் நைட்' படம் தந்த 'குட் லைஃப்'.. இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் நெகிழ்ச்சி !

Vinayak chandrasekran : 'குட் நைட்' படத்தின் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் தன்னுடைய திருமணம் குறித்தும் காதலி குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

ஃபேமிலி சார்ந்த சென்டிமென்ட் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சோடை போனதாக வரலாறே கிடையாது. அதில் கொஞ்சம் காமெடி, கலாட்டா, காதல் கலந்து அனைவரும் ரசிக்கும் படியான ஒரு படத்தை கொடுத்தவர் தான் அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன். அவரின் இயக்கத்தில் வெளியான 'குட் நைட்' படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. சில தினங்களுக்கு முன்னர் தான் 'குட் நைட்' படத்தின் இயக்குநருக்கு மிகவும் எளிமையாக கோயிலில் திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட விநாயக் சந்திரசேகரன் தன்னுடைய திரைப்பயணம் பற்றியும் காதல் கைகூடியது பற்றியும் பேசி இருந்தார்.

Vinayak Chandrasekaran : 'குட் நைட்' படம் தந்த 'குட் லைஃப்'.. இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் நெகிழ்ச்சி !

கல்லூரியில் ஏற்பட்ட நட்பு காதலாக மாறி இருவரும் வெவ்வேறு துறையை தேர்ந்து எடுத்து பயணித்துள்ளனர். சினிமாவையே கனவாக கொண்டிருந்த விநாயக் சந்திரசேகரனின் கனவுக்கு உயிர் கொடுத்தவர் அவரது காதலியான பிரியா சங்கரிதான்.  தன்னுடைய பாக்கெட் மணியை எல்லாம் சேர்த்து வைத்து விநாயக் ஷார்ட் பிலிம் எடுக்க உதவி செய்து இருக்கிறார். உதவி இயக்குனராக இருக்கும் சமயத்தில் அவரின் பண தேவைகளை பூர்த்தி செய்து சினிமா கனவை நோக்கிய வேகமாக ஓட வைத்தவர் பிரியாதான். 

குட் நைட் படம் வெளியானதற்கு பிறகு அதன் இயக்குநர் யார் என்பதை சொல்லாமலேயே தன்னுடைய பெற்றோரை அழைத்து சென்று அவர்கள் வாயாலேயே பாராட்டுகளை கேட்டு அதன் பின்னர் தான் விநாயக் தான் படத்தின் இயக்குநர் என்பதை சொல்லி திருமணத்துக்கு கிரீன் சிக்னல் வாங்கியுள்ளார் பிரியா. அதே போல விநாயக் வீட்டிலும் சம்மதம் வாங்கிய பிறகு அவர்களின் 9 ஆண்டுகால காதல் திருமணத்தில் முடிந்தது.

Vinayak Chandrasekaran : 'குட் நைட்' படம் தந்த 'குட் லைஃப்'.. இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் நெகிழ்ச்சி !

'குட் நைட்' படம் தான் விநாயக் வாழ்க்கையில் 'குட் லைஃப்' ஆரம்பமாக உறுதுணையாய் இருந்துள்ளது. திரையரங்குகளில் பாராட்டை குவித்த குட் நைட் படம் இப்போது ஓடிடியிலும் வெளியாகி பாராட்டுகளை பெற்று வருகிறது. அதற்கு முக்கியமான காரணம் அப்படம் பலரது வாழ்க்கையுடன் பர்சனலாக எளிதில் கனெக்ட்டாவது தான். ரமேஷ் திலக், ரெபேக்கா, மணிகண்டன் இப்படி அனைவருமே அந்த கதாபாத்திரங்களாகவே மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்படுவது படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.  

மிகவும் எளிமையான முறையில் விநாயக் சந்திரசேகரன் - பிரியா சங்கரி திருமணம் கோயிலில் நடைபெற்றது. அதை தொடர்ந்து மிகவும் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. குட் நைட் படக்குழுவினர் அனைவரும் ஆஜராக நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் என பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை மனதார வாழ்த்தினார்கள்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னமும் சாதியை பத்திதான் பேசுறீங்க" ராகுல் காந்தி மீது பாஜக டைரக்ட் அட்டாக்!
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Weather: இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னமும் சாதியை பத்திதான் பேசுறீங்க" ராகுல் காந்தி மீது பாஜக டைரக்ட் அட்டாக்!
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Weather: இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
Embed widget