விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சொல்லப்பட்ட வெந்து தணிந்தது காடு கதை ... வைரலாகும் வீடியோ..!
இந்த படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் போது அப்பாவி புலம்பெயர்ந்த தொழிலாளி எப்படி கேங்க்ஸ்டராக மாறினார் என்பதை சொல்லும் கதையாக இருக்கும் என கணிக்கப்பட்டது.
இயக்குநர் கௌதம் மேனனின் வெந்து தணிந்தது காடு படம் ரிலீசான நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வீடியோ ஒன்றை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதியான நேற்று தியேட்டர்களில் வெளியானது.
View this post on Instagram
முன்னதாக வெந்து தணிந்தது காடு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கு ஏற்றாற்போல் படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 2 பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் ரிலீசான நிலையில் 2 ஆம் பாகத்திற்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
View this post on Instagram
இந்த படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் போது அப்பாவி புலம்பெயர்ந்த தொழிலாளி எப்படி கேங்க்ஸ்டராக மாறினார் என்பதை சொல்லும் கதையாக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் இந்த கதையை கௌதம் மேனன் முன்னாடியே எழுதிவிட்டதாக சொல்லி ரசிகர்கள் வீடியோ ஒன்றை தெரிவித்து வருகின்றனர். கடந்த 2010 ஆம் ஆண்டு சிம்பு - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி முதல்முறையாக இணைந்த படம் “விண்ணைத் தாண்டி வருவாயா”. ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்தப் படத்தில் சினிமா இயக்குநராகும் ஆசையில் சிம்பு இருப்பார். அப்போது அவர் ஒளிப்பதிவாளர் விடிவி கணேஷூடன் நண்பராகி தன்னிடம் இருந்த கதை ஒன்றை சொல்வார்.
Appo Puriyala !! Ippo puriyuthu !!! Time travel. #SilambarasanTR #Silambarasan #Simbu #Atman #vendhuthanindhathukaadu #VTK #CultClassicVTK @menongautham #VTKFDFS #BBVTK @SilambarasanTR_ @VelsFilmIntl
— Hariharan Gajendran (@hariharannaidu) September 15, 2022
Digital rights is of the respective owners. Just for celebration. pic.twitter.com/g5ZDd6qqP8
அதன்படி, “அப்பாவியான ஒருத்தன் எப்படி இதுக்குள்ள வந்தான்..எப்படி ரவுடியானான்...டான் ஆனான்..பில்லா ஆனான்..இதுதான் சார் கதை” என சொல்வார். கிட்டதட்ட வெந்து தணிந்தது காடு படமும் அதே வரிசையில் தான் வருகிறது. ஆனால் இதன் அடிப்படை கதையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.