டைட்டானிக் போல் பிரமாண்ட படமாக எடுக்கப்படும் டைட்டன் கப்பல் விபத்து..? உண்மை என்ன?
டைட்டானிக் பட பாணியில் விபத்துக்குள்ளான டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கதையை படமாக்க ஹாலிவுட் வட்டாரத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
டைட்டானிக் பட பாணியில் விபத்துக்குள்ளான டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கதையை படமாக்க ஹாலிவுட் வட்டாரத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
உலகளவில் பேசப்படும் மிகப்பெரிய கப்பல் விபத்து டைட்டானிக் தான். 1912ம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் பயணிகளுடன் சென்ற பிரமாண்ட சொகுசு கப்பல் பனிப்பாறையில் மூழ்கியது. இதில், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கப்பலில் இருந்த ஊழியர்கள் உயிரிழந்தனர். இதுவரை டைட்டானிக் விபத்து குறித்த ஆய்வுகளும், அதன் அடுத்தடுத்த வதந்தி தகவல்களும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. டைட்டானிக் கப்பல் விபத்தை கதையாக கொண்டு 1997ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் எடுத்த டைட்டானிக் படம் உலகளவில் இன்றும் பேசக்கூடிய திரைப்படமாக உள்ளது.
கடலுக்கு அடையில் புதைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பல் பற்றிய ஆய்வுகள் இன்றளவும் நடந்து வரும் நிலையில், கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி ocean gate என்ற நிறுவனத்துக்கு சொந்தமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல், கடலுக்கு அடியில் உடைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலை சுற்றி பார்க்க 12,500 அடி ஆழத்தில் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் சென்றது. கனடாவின் நியூ ஃபவுண்ட்லேண்ட் கடற்கரையில் இருந்து புறப்பட்ட டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் சிக்னல் ஒரு மணி நேரத்தில் துண்டிக்கப்பட்டது. கப்பலில் பைலட் உட்பட 5 பேர் பயணித்த நிலையில் 96 மணி நேரத்துக்கு தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.
கப்பலின் சிக்னல் கிடைக்காததால் அதில் இருப்போரை தேடும் பணி தீவிரம் அடைந்தது. சில மணி நேரங்களில் அழுத்தம் தாங்காமல் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியதால் அதன் பாகங்களை அமெரிக்க கடலோர காவல் படை கண்டுபிடித்தது. இந்த விபத்துக்கு பாதுகாப்பு குறைபாடே காராணம் என கூறப்பட்டது. நீர்மூழ்கி கப்பலின் விபத்து குறித்து பல சர்ச்சைகள் இருந்தாலும், அட்லாண்டிக் கடல் பகுதியில் ஆய்வு செய்த ஸ்பெயினை சேர்ந்த ஆழ் கடல் ஆய்வாளர், டைட்டன் கப்பலில் பயணித்தவர்களுக்கு அவர்கள் இறக்க போகும் தகவல் முன் கூட்டியே தெரிந்து இருக்க வேண்டும் என்றார். டைட்டானிக் கப்பலை போல் டைட்டன் கப்பலும் விபத்துக்குள்ளானதால் பேசுபொருளாக மாறியது.
இந்த நிலையில் டைட்டானிக் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கதையை வைத்து படம் எடுக்க உள்ளதாக செய்திகள் பரவின. இதற்கு டிவிட்டர் பதிவு மூலம் மறுப்பு தெரிவித்த ஜேம்ஸ் கேமரூன், டைட்டன் கப்பல் விபத்தை படமாக எடுக்கும் முடிவில் தான் இல்லை என கூரியுள்ளார். எனினும், டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் கதையை படமாக எடுத்தே தீர்வோம் என்ற முடிவில் ஹாலிவுட் வட்டாரங்கள் இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.