மேலும் அறிய

தீவிர விஜய் ரசிகர்கள்...ஆனால் இருவரும் வாக்களிக்கவில்லை..வெளுக்கும் ரசிகர்கள்

இயக்குநர் நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்காததை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் வாக்களித்தனர். ஒரு சிலரைத் தவிர. இயக்குநர் நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவர் மட்டும் வாக்குச்சாவடிகளில் காணப்படவில்லை. விஜயின் தீவிர ரசிகர்களான இருவரும் தேர்தலில் வாக்களிக்காததை தவெக ஆதரவாளர்கள் விமர்சித்து வருகிறார்கள். 

தமிழ்நாட்டில் நேற்று ஏப்ரல் 23 ஆம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. சுமார் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் 4 ஆயிரம் வேட்பாளர்களுக்காக கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்தனர். தமிழக தேர்தல் வரலாற்றில் அதிகப்படியாக  84.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. எஸ்ஐஆர் செயல்பாட்டிற்கு பிறகு தமிழ்நாட்டில் நடக்கும் முதல் தேர்தல் என்பதாலும், பொதுமக்கள் தன்னெழுச்சியாக வாக்களிக்க படையாக திரண்டு சென்றதாலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.

அதிகபட்சமாக தமிழ்நாட்டில் கரூரில்  92 சதவீதம் , சேலத்தில் 90 சதவீதம் , தர்மபுரியில் 90 சதவீதம் , ஈடோடில் 90 சதவீதம் , நாமக்கலில் 89 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

தவெகவுக்கு உற்சாகமாக வாக்களித்த இளைஞர்கள் 

இந்த தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இளைஞர்களிடம் பெரும் ஆதரவு இருப்பதை பார்க்க முடிந்தது. பேருந்து கிடைக்காத போதிலும் அடித்து பிடித்து தங்களுக்கு ஊருக்கு போய் இளைஞர்கள் தவெகவுக்கு வாக்களித்ததை சமூக வலைதளத்திக் பகிர்ந்துக்கொண்டார்கள். அதேபோல் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் விஜய்க்கு தங்களது நேரடியான ஆதரவைத் தெரிவித்து வாக்களித்தார்கள்.

வாக்களிக்காத நெல்சன் மற்றும் லோகேஷ் 

ஆனால்  நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ்  மட்டும் இந்த தேர்தலில் வாக்களிக்காதது குறித்து ரசிகர்கள் அதிருபதி வெளிப்படுத்தி வருகிறார்கள். விஜயின் பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கினார். மாஸ்டர் , லியோ என இரண்டு ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை இயக்கியவர் லோகேஷ். இருவரும் விஜயுடன் நெருக்கமாக நட்பு பாராட்டி வருபவர்கள். மேலும் விஜயின் ஜனநாயகன் படத்திலும் இருவரும் கேமியோ ரோலில் நடித்துள்ளார்கள். அப்படி இருக்கையில் ஏன் இருவரும் தேர்தலில் வாக்களிக்க வரவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பை அண்மையில் நிறைவு செய்தார் நெல்சன். அதேபோல் லோகேஷ் கனகராஜ் அருண் மாதேஸ்வரன் இயக்கிவரும் டிசி படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு காரணமாக இருவரும் வாக்களிக்க முடியாமல் போனதா அல்லது இருவரும் வாக்களிக்க விருப்பம் காட்டவில்லையா என்பது தெரியாத நிலையில் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளார்கள் .

தலைப்பு செய்திகள்

“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget