மேலும் அறிய

Lakshmi Menon: பல ரசிகர்களின் தேவதை.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய லட்சுமி மேனன்!

2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த லட்சுமி மேனன், இப்போது பெரிய அளவில் பட வாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார் என சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமாக திகழ்ந்த லட்சுமி மேனன் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு தோற்றத்துடன் இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவை கலக்கிய லட்சுமி மேனன்

கடந்த 2012ம் ஆண்டு தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தர பாண்டியன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். அப்படத்தில் அவர் ஏற்று நடித்த அர்ச்சனா கேரக்டர் தமிழ் சினிமாவின் கடைக்கோடி ரசிகர்கள் வரை அவரை கொண்டு சேர்த்தது. அதே ஆண்டில் வெளியான கும்கி படம் லட்சுமி மேனன் கேரியரை உச்சத்திற்கு கொண்டு சென்றது என சொல்லலாம். டிவியில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்த மலையாள இயக்குநர் வினயன் ரகுவின்டே ஸ்வந்தம் ரஸியா என்ற மலையாள படம் மூலம் சினிமாவுக்கு லட்சுமி மேனனை அழைத்து வந்தார். 

அங்கிருந்து தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் குறுகிய காலக்கட்டத்திலேயே பிரபலமாக திகழ்ந்தார்.  தொடர்ந்து குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், மிருதன், ரெக்க  ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார். அதேசமயம் வேதாளம் படத்தில் அஜித்திற்கு தங்கை கேரக்டரில் நடித்தார். இதனிடையே படிப்புக்காக சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த லட்சுமி மேனன் மீண்டும் 2021ம் ஆண்டு புலிக்குத்தி பாண்டி என்ற படம் மூலம் நடிக்க வந்தார். இப்படம் நேரடியாக டிவியில் ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து 2023ம் ஆண்டு சந்திரமுகி 2 படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு ஆதி நடித்த சப்தம் படத்தில் நடித்திருந்தார். 

பட வாய்ப்புகள் இல்லாமல் தவிப்பு

2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த லட்சுமி மேனன், இப்போது பெரிய அளவில் பட வாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார் என சொல்லப்படுகிறது. கடந்தாண்டு டிசம்பரில் காமராஜ் என்பவரின் இயக்கத்தில் ஒரு படத்தில் லட்சுமி மேனன் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஷூட்டிங்கிற்கு சரியாக வராததால் அவர் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல் மதுபான பார் ஒன்றில் தோழிகளுடன் சேர்ந்து தொழிலதிபர் ஒருவரை தாக்கியதாக வழக்கும் அவர் மேல் பாய்ந்தது. 

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய வீடியோ

இந்த நிலையில் லட்சுமி மேனன் தற்போது உடல் எடை அதிகரித்து காணப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அது லட்சுமி மேனன் தான் என நம்பவே மறுக்கின்றனர். 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Bigg Boss: மக்கள் செல்வன் என்றும் பாராமல்..! விஜய் சேதுபதியை நக்கல் செய்த ஜேசன்! பிக்பாஸில் பரபரப்பு
Bigg Boss: மக்கள் செல்வன் என்றும் பாராமல்..! விஜய் சேதுபதியை நக்கல் செய்த ஜேசன்! பிக்பாஸில் பரபரப்பு
எங்க பாத்தாலும் கட்சிக்கொடி...இத மட்டும் பண்ணாதீங்க..தனுஷ் முகத்திற்கு நேராக சொன்ன சாய் பல்லவி
எங்க பாத்தாலும் கட்சிக்கொடி...இத மட்டும் பண்ணாதீங்க..தனுஷ் முகத்திற்கு நேராக சொன்ன சாய் பல்லவி
தனுஷைப் பார்த்து பொறாமை பட்டேன்...ஓம் படத்திற்கு மம்மூட்டி கொடுத்த மாஸ் பில்டப்
தனுஷைப் பார்த்து பொறாமை பட்டேன்...ஓம் படத்திற்கு மம்மூட்டி கொடுத்த மாஸ் பில்டப்
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 'அறிவு' திரைப்படம்
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 'அறிவு' திரைப்படம்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை, காஞ்சிக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை, காஞ்சிக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ICC Worldcup: மீண்டும் இந்தியாவில் ODI உலகக் கோப்பை..! பட்டியலை வெளியிட்ட ஐசிசி - சாம்பியன்ஸ் ட்ராபி எப்போது?
மீண்டும் இந்தியாவில் ODI உலகக் கோப்பை..! பட்டியலை வெளியிட்ட ஐசிசி - சாம்பியன்ஸ் ட்ராபி எப்போது?
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
லஞ்சம் பெற்று போலியாக போக்சோ வழக்குப்பதிவு! - பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்!
லஞ்சம் பெற்று போலியாக போக்சோ வழக்குப்பதிவு! - பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்!
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
Embed widget