பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை வீடியோ; உலா வரும் கலவை விமர்சனங்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸில் கடந்த சில வாரங்களாகவே ஐஸ்வர்யா–கண்ணன் காதல் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு வேறொரு பையனுடன் திருமணம் நடக்கப்போகும் கா்ட்சிகள் தான் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
அண்ணன் தம்பி மற்றும் குடும்ப பாசத்தினை மையமாகக்கொண்டு விஜய்டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் இல்லத்தரசிகள் மட்டுமில்லாது அனைத்து தரப்பட்டப் பெண்களும் விரும்பிப்பார்க்கும் சீரியலாகவும் விளங்கிவருகிறது. இந்த சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் சுஜாதா, பெரிய அண்ணனாக மூர்த்தி கதாபாத்திரத்தில் ஸ்டாலின், முதல் தம்பியான ஜூவா கதாபாத்திரத்தில் வெங்கட், இரண்டாவது தம்பியான கதிர் கதாபாத்திரத்தில் குமரன் மற்றும் கடைசி தம்பியாக கண்ணன் உள்பட ஹேமா, காவியா, கம்பம் மீனா, விக்ரம் போன்ற சின்னத்திரை பிரபலங்கள் நடித்து வருகின்றனர். அண்ணன் தம்பிகளுக்கிடையேயான பாசம் மற்றும் கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்துவருகிறது.
குறிப்பாக இந்த சீரியல் இவ்வளவு பெரிய வெற்றியினை அடைந்தற்கு கதிர் – முல்லை கதாபாத்திரம் என்று தான் சொல்ல வேண்டும். அத்தை மகனை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்திருந்தப் போதிலும், அவருடைய நற்குணங்களால் அவர் மீது காதல் வயப்படும் நாயகி என கதைக்களம் நகர்த்துக்கொண்டிருந்த போது தான் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா உயிரிழந்தார். இதனையடுத்து யார் இந்த கதாபாத்திரத்திற்கு வருவார்கள் என்று பல்வேறு எதிர்ப்பார்ப்புகள் எழும்பிய நிலையில் தான் பாரதிகண்ணம்மாவில் அறிவுமணியாக நடித்த காவ்யா களமிறங்கினர். இவரும் முல்லை அளவிற்கு தன்னுடைய நடிப்புத்திறனையினை வெளிப்படுத்தி வருகிறார். இதோடு 3 அண்ணன்களும் திருமணம் செய்த நிலையில் நான்காவது தம்பியான கண்ணன் கதாபாத்திரத்திற்கு பல நாட்களாக ஜோடி எதுவும் கிடைக்காமல் இருந்த நிலையில் தான் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரம் சீரியலுக்கு நுழைந்தது.
கடந்த சில வாரங்களாகவே பாண்டியன் ஸ்டோர்ஸில் ஐஸ்வர்யா – கண்ணன் காதல் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு வேறொரு பையனுடன் திருமணம் நடக்கப்போகும் கா்ட்சிகள் தான் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க ஐஸ்வர்யாவாக நடித்து வரும் நடிகை தீபிகா சமூக வலைத்தளங்களில் மேக்கப் இல்லாமல் ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவினைப் பார்த்த நெட்டிசன்கள், நடிகைக்கு எதிரான விமர்சனங்களை பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் கலாய்த்து எடுகின்றனர்.
View this post on Instagram
பாண்டியன் ஸ்டோர்ஸில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஐஸ்வர்யா, முன்னதாக சன் டிவியின் முக்கிய சீரியல் ஒன்றில் அறிமுகமானார். அதற்கு பிறகு விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரில் நடித்திருக்கும் தீபிகா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் தான் பிரபலமடைந்தார்.