31 ஆண்டுகள் கழித்து வெளியான ராமாயணா அனிமேஷன் படம்..ரசிகர்கள் விமர்சனம்
ஜப்பானிய நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த அனிமேஷன் படம் 31 ஆண்டுகால தடைக்கு பின் மீண்டும் திரையரங்கில் வெளியாகியுள்ளது

ராமாயணம் மற்றும் மகாபாரதம் இரண்டும் இந்துக்களின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இரு புராணக் கதைகள். இந்த கதைகளை மையப்படுத்தி பல படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் வெளியாகியுள்ள, இனி வரும் காலங்களிலும் வெளியாக இருக்கின்றன. பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் , மற்றும் கல்கி இப்புராணங்களை மையப்படுத்தி உருவானவை. தற்போது பாலிவுட்டில் தங்கல் திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி ராமாயணத்தை திரைப்படமாக இயக்கி வருகிறார். இது தவிர்த்து பாகுபலி இயக்குநர் ராஜமெளலி மகாபாரதத்தை 10 பாகங்கள் கொண்ட படமாக எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கான திரைக்கதை பணிகளில் தற்போது அவர் ஈடுபட்டுள்ளார். எத்தனை படங்கள் வந்தாலும் 90 களில் வந்த ராமாயணம் மற்றும் மகாபாரத தொலைக்காட்சித் தொடர்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் ஒரு பெரிய மதிப்பு இருக்கிறது. அந்த வகையில் 90 கிட்ஸ் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அனிமேஷன் தொடர் Ramayana the legend of prince rama
ராமாயணம்
4K digitally remastered "Ramayana: The Legend of Prince Rama" is theatrically released in India on January 24th, 2025 in English, Hindi, Tamil and Telugu !
— Ramayana: The Legend of Prince Rama (Official) (@RamayanaAnime) January 23, 2025
🎫to book tickets - PVR Cinema https://t.co/ptinq5aIc9
🎫to book tickets - Book My Show https://t.co/0q3eAB5Lvw… pic.twitter.com/eb8YwA3RQD
1990 களில் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பான ராமாயணா தொடர் மிக புகழ்பெற்றது. அதே போல் குழந்தைகள் மத்தியில் பிரபலமாக இருந்த அனிமேஷ் படம் Ramayana the legend of prince rama. ஜப்பானிய தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இந்த படம் ராமர் வனவாசம் சென்றது முதல் ராவணனிடம் இருந்து சீதை மீட்டு மீண்டும் நாடு திரும்பும் கதையை சுவாரஸ்யமான அனிமேஷன் படமாக சொன்னது. ஆனால் ஜப்பான் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இப்படத்தில் இந்து கடவுள்கள் சித்தரிக்கப்பட்ட விதம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால் இந்தப் படத்தை இந்தியாவில் திரையிட தடை விதிக்கப்பட்டது. தற்போது கிட்டதட்ட 31 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் மீதான தடை நீக்கப்பட்டு தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதனை ரசிகர்கள் திரையரங்கில் சென்று பார்த்து கொண்டாடி வருகிறார்கள். மேலும் பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படத்தைவிட இந்த படம் எவ்வளவோ பரவாயில்லை என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.





















