Entertainment Headlines June 07: மாணவர்களை சந்திக்கும் விஜய்... குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட மறுத்த சின்மயி... இன்றைய டாப் சினிமா செய்திகள்!
Entertainment Headlines: சினிமாவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏ.பி.பி. நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம்.
- Adipurush : ஹாலிவுட் ஸ்டைலை ஃபாலோ செய்யும் ஆதிபுருஷ்... காலி சீட் ஒதுக்கப்பட்ட பிரபலம் யார்? விவரம் உள்ளே
ஓம் ராவத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், கிருத்தி சனோன், சைப் அலிகான் நடிப்பில் ராமாயண கதையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம் 'ஆதிபுருஷ்'. இப்படம் வரும் ஜூன் 16ம் தேதி ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என பான் இந்தியன் படமாக வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர்கள் வெளியாகி சில சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் கலவையான விமர்சனங்களை பெற்றது. படம் குறித்து படக்குழு புதிதாக ஒரு தகவல் வெளியிட்டது. அதாவது ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகும் அனைத்து திரையரங்குகளிலும் அனுமனுக்காக ஒரு சீட் காலியாக விடப்படும் என அறிவிப்பை வெளியிட்டது. மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/list-of-hollywood-movies-that-have-left-a-seat-unreserved-for-a-personality-in-recent-times-121792
- Actor Vijay: விஜயின் இலக்கு..! மாணவர்களை கொண்டு அரசியல் அடித்தளமா? 17-ஆம் தேதி நடக்கப்போவது என்ன?
நடிகர் விஜய் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திப்பதின் மூலம், தனது அரசியல் பிரவேசத்தை விரைவுபடுத்துவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாணவர்கள் உடனான சந்திப்பு தொடர்பாக விஜய் அறிவித்துள்ளார். தற்போது 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்தவர்கள் 2024ம் ஆண்டு தேர்தலில் இல்லாவிட்டாலும், 2026ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது வாக்களிக்க தகுதி பெற்றுவிடுவார்கள். இந்த நிலையில் அவர்களை சந்திப்பதன் மூலம் வருங்கால தலைமுறையினரை ஈர்த்து அவர்களது வாக்குகளை அறுவடை செய்யவே, இந்த சந்திப்பை விஜய் ஏற்பாடு செய்திருப்பதாகவும் அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/plan-behind-actor-vijays-school-students-meet-on-june-17-in-chennai-121778
- Actor S.Ve.Sekhar: சாதியை தூக்கி பிடிங்க.. ஆனால் அடுத்த சாதியை தப்பா பேசாதீங்க.. எஸ்.வி சேகர் குமுறல்
சாதி ரீதியிலான படங்களை எடுப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என நடிகர் எஸ்.வி.சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 80,90களின் காலக்கட்டத்தில் எல்லாம் படத்தின் தொடக்கத்தின் கடவுளை காட்டுவார்கள். ஆனால் இப்போது சியர்ஸ் என டாஸ்மாக்கில் குடிப்பதை காட்டுகிறார்கள். மதுபானத்திற்கு எதற்கு விளம்பரம் கொடுக்குறீங்க. பணத்துக்காக தரம் தாழ்ந்து சினிமா எடுத்து சமூகத்தை கெடுப்பேன் என்றால் முதலில் பாதிக்கப்படுவது அவர்கள் குடும்பம் தான்.சினிமாவில் சாதி ரீதியான படங்களை எடுப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/actor-s-ve-sekhar-requested-to-film-directors-reduce-caste-related-pictures-121786
- Chinmayi Sripaada : ”வைரமுத்துவைப்போல் ஏன் இல்லை என கேட்பார்கள்” தனது குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட மறுத்த சின்மயி
சின்மயியின் குழந்தைகளின் முகத்தை சமூக வலைதளத்தில் வெளியிடக் கேட்டுக்கொண்ட ரசிகருக்கு சின்மயி கொடுத்த பதில் என்னத் தெரியுமா?எனக்கு குழந்தை பிறந்த செய்தி வெளியானதிலிருந்து வைரமுத்துவின் ஆதரவாளர்கள் வைரமும் முத்தும் பிறந்திருக்கிறார்கள் என்று வசைபாடி வருகிறார்கள். வைரமுத்து என்னை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கியிருப்பது உண்மை என்றால் ஏன் எனது குழந்தைகள் வைரமுத்துவைப்போல் இல்லை என்று அவர்கள் கேட்கிறார்கள். இந்த கலாச்சார காவலர்கள் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்” என்று கூறியுள்ளார் சின்மயி. மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/singer-chinmayi-refuses-to-expose-her-chindren-to-public-121682