வாவ்.. ஹாலிவுட் தரத்தில் ப்ராஜெக்ட் கே டீசர்.. பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி’ திரைப்படம், இந்தியாவின் அயர்ன் மேன்?


பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ள படக்குழு, படத்தின் தலைப்பையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரபாஸ், கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோனே என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள ப்ரஜெக்ட் கே திரைப்படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் படிக்க


பதைபதைக்க வைக்கும் காட்சிகள்... வசந்தபாலனின் அநீதி படம் சூப்பரா? ..சுமாரா? - முழு விமர்சனம் இதோ..!


‘ஜெயில்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வசந்தபாலனின் அடுத்தப்படைப்பாக ‘அநீதி’ திரைப்படம் வெளியாகியுள்ளது. அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், பரணி, அர்ஜூன் சிதம்பரம், சுரேஷ் சக்கரவர்த்தி, ஷா ரா, சாந்தா தனஞ்ஜெயன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை வசந்தபாலன் இயக்கியுள்ளார். இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தின் விமர்சனத்தை காணலாம். மேலும் படிக்க


இவ்வளவு அடக்கம் வேண்டாம் கமல்... நீங்க தான் சிறப்பானவர்... ஸ்ட்ரிக்டாக புகழ்ந்த அமிதாப் பச்சன்!


ப்ராஜக்ட் கே படத்தின் தலைப்பு மற்றும் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான கமல்ஹாசன் - அமிதாப் பச்சன் நீண்ட நாள்களுக்குப் பிறகு இணைந்துள்ள திரைப்படம்  ‘ப்ராஜக்ட் கே’ எனப்படும் ‘கல்கி 2898 ஏடி’. மேலும் படிக்க


நன்றி சொல்ல வார்த்தையே இல்லை... உதயநிதிக்காக மாரி செல்வராஜ் போட்ட டிவீட்...


உதயநிதி ஸ்டாலின் தன் மீது வைத்த நம்பிக்கையால் தான் மாமன்னன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளதாக இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “ மாமன்னன் படத்தின் தொடக்கத்தில் இருந்தே நீங்கள் எனது நல விரும்பிகளாக இருந்துள்ளீர்கள். நீங்கள் என் மீதும் என் கலை மீதும் வைத்த நம்பிக்கையால் தான் இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. மேலும் படிக்க


நொடிக்கு நொடி பதட்டம்... வரலாற்றை கண்முன் நிறுத்தும் காட்சிகள்... கிறிஸ்டோஃபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ ஒரு திரைக்காவியம்!


அணு ஆயுதத்தை கண்டுபிடித்த ராபர்ட் ஜே ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை மையமாக வைத்து கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கியிருக்கும் படம் ஒப்பன்ஹெய்மர் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. உலகமே எதிர்பார்த்து காத்திருந்த ஓப்பன்ஹெய்மர் படம், வரலாற்றின் ஒரு மிக முக்கியமான தருணத்தையும் அதை நிகழ்த்திய தனிநபர் ஒருவரின் உணர்வெழுச்சிகளையும் மிகச்சிறந்த திரை அனுபவமாக நமக்கு கொடுக்கிறது . மேலும் படிக்க


லா... லா... பார்பிலேண்டில் பெண்களின் ஆட்சி... எப்படி இருக்கு ‘பார்பி’ திரைப்படம்..? முழு விமர்சனம்!


இயக்குநர் கிரேட்டா கெர்விக், தனது ஆழமான பெண்ணியக் கருத்துகளை ப்ளாஸ்டிக் பொம்மைகளுள் புகுத்தி நம் நெஞ்சினுள் அழுத்தமாக பதிய வைத்திருக்கும் அற்புத முயற்சி தான் பார்பி! அவரது முயற்சி எந்த அளவுக்கு வெற்றி பெற்றது..? இதோ பார்பி திரைப்படத்தின் முழு விமர்சனம்! கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் மார்கோட் ராபி, ரியான் கோஸ்லிங், அமெரிக்கா ஃபெரெரா, இசா ரே, கேட் மெக்கின்னன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் பார்பி. மேலும் படிக்க


வித்தியாசமான மேக்கிங்... துப்பறியும் நிபுணராக விஜய் ஆண்டனி ஈர்த்தாரா... ‘கொலை’ படத்தின் முழு விமர்சனம் இதோ..!


பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், ஜான் விஜய், அர்ஜூன் சிதம்பரம், முரளி ஷர்மா, சித்தார்த் ஷங்கர் எனப் பலரும் நடித்துள்ள படம் ’கொலை’. கிரீஷ் கோபால கிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கும் கொலை படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம். மேலும் படிக்க