உதயநிதி ஸ்டாலின் தன் மீது வைத்த நம்பிக்கையால் தான் மாமன்னன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளதாக இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “ மாமன்னன் படத்தின் தொடக்கத்தில் இருந்தே நீங்கள் எனது நல விரும்பிகளாக இருந்துள்ளீர்கள். நீங்கள் என் மீதும் என் கலை மீதும் வைத்த நம்பிக்கையால் தான் இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை. Love you sir". இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் கடந்த 29ஆம் தேதி திரைக்கு வந்தது. நடிகர் வடிவேலு, பகத் பாசில் ஆகியோரின் நடிப்பு இப்படத்தில் ஏராளமானோரால் பாரட்டப்பட்டது. அதிக பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற இத்திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ஜூலை 27ம் தேதி ஓடிடியில் மாமன்னனை காணலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் மாமன்னன் ரிலீசாகும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மாமன்னனை திரையங்கிற்கு சென்று பார்க்க முடியாதவர்கள் இன்னும் ஒரு வாரத்தில் நெட்பிளிக்சில் இப்படத்தை பார்க்கலாம்.
இப்படம் வெளியான முதல் நாளில் சுமார் ரூ.6 கோடி வரை வசூலித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் 20 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் வாசூல் ரூ.50 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க,