மேலும் அறிய

Doctor | வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தும் ‘டாக்டர்’ - விரைவில் 100 கோடியை எட்டும்?

அமெரிக்காவில் வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமை டாக்டர் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.

கோலமாபு கோகிலா என்னும் வெற்றி படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் படைப்பில் வெளியான திரைப்படம் ; டாக்டர்’ .சிவகார்த்திகேயன் தனது SK புரொடக்‌ஷன்  நிறுவனம் சார்பில் இந்த படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்து உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க யோகி பாபு, வினய் உள்ளிட்டோர் படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். மனித கடத்தலை மையமாக வைத்து டார்க் காமெடியாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படம் உலகம் முழுவதும் உள்ள திரையங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் இதுவரை 440000 டாலர் அளவில் வசூல் செய்து சாதனை  படைத்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பீட்டில் கிட்டத்தட்ட  33,126,148 ரூபாயாகும் . இதுவரையில் அமெரிக்காவில் வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமை டாக்டர் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. டாக்டர் படத்தின் வசூல் விரைவில் 100 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனை சிவ கார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 


Doctor | வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தும் ‘டாக்டர்’ - விரைவில் 100 கோடியை எட்டும்?
சிவகார்த்திகேயன் சில ஆண்டுகளுக்கு முன்னதாக தனது படத்தை வெளியிட முடியாமல் , இன்னலுக்கு உள்ளானார். பல மேடைகளில் தன்னை வாழ விடும்படி கண்ணீருடன் பேசியிருந்தார், இந்நிலையில் அவரே தயாரித்த டாக்டர் படம் வசூல் சாதனை படைத்திருப்பது, அவரின் இடைவிடாத முயற்சியின் பலனாக பார்க்கப்படுகிறது.  முன்னதாக படம் கொரோனா ஊரடங்கால் ஒடிடியில் வெளிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நெல்சன் மீது கொண்ட நம்பிக்கை காரணமான படத்தை திரையரங்கில் வெளியிட முடிவு செய்துவிட்டார் சிவகார்த்திகேயன். படம்  வெளியான நாளில் “நாளை என்றும் நம் கையில் இல்லை நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே என்றால் கூட போராடு நண்பா என்றைக்கும் தோற்காது உண்மைகளே..எதிர் நீச்சலடி வென்று ஏற்று கொடி" என குறிப்பிட்டிருந்தார். அவர் தன் மீது வைத்த நம்பிக்கை, இன்று வெற்றிக்கொடியை ஏற்ற வைத்துள்ளது.

 

இயக்குநர் நெல்சன் தற்போது விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். டாக்டர் படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி , பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. முன்னதாக பீஸ்ட் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் படம் தங்க கடத்தலை மையமாக வைத்து உருவாகியிருப்பதாக செய்திகள் வெளியானது. டாக்டர் படத்தின் புரமோஷனில் கலந்துக்கொண்ட இயக்குநர் நெல்சன் பீஸ்ட் அப்டேட் குறித்து கேட்ட கேள்விக்கு, டாக்டர் படம் வெளியானதும், பீஸ்ட் அப்டேட் கொடுப்போம் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kia Sorento Hybrid Diesel: ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
Hybrid Ceiling Fan: கார்ல தான இருந்துச்சு, இப்போ சீலிங் ஃபேன்லயும் ஹைப்ரிட் வந்துடுச்சா.?! என்ன ஸ்பெஷல் தெரியுமா.?
கார்ல தான இருந்துச்சு, இப்போ சீலிங் ஃபேன்லயும் ஹைப்ரிட் வந்துடுச்சா.?! என்ன ஸ்பெஷல் தெரியுமா.?
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
Embed widget