Kafeel Khan: ‘உண்மை குற்றவாளிகள் வெளியே..ஆனால் நான்..” .. ஷாருக்கானுக்கு கடிதம் எழுதிய மருத்துவர் கஃபீல் கான்..!
நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தை பாராட்டி உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசால் பந்தாடப்பட்ட மருத்துவர் கபீல் கான் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தை பாராட்டி உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசால் பந்தாடப்பட்ட மருத்துவர் கபீல் கான் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மருத்துவர் கபீல் கான்
கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 63 குழந்தைகள் உட்பட 80 பேர் பலியாகினர். அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர் கபீல் கான் தனது சொந்த செலவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கி சிலரை காப்பாற்றினார். அரசின் அலட்சியப்போக்கை கடுமையாக விமர்சித்தார்.
ஆனால் தங்கள் மீதான குறைகளை களைய உத்தரப்பிரதேச அரசு மொத்த பழியையும் தூக்கி கபீல் கான் மீது போட்டதோடு மட்டுமல்லாமல் அவர் மீது தேச துரோக வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளை பதிவு செய்து பல மாதங்கள் சிறையில் அடைத்தது. இப்படியான நிலையில் சிறைவாசத்துக்குப் பின் வெளியே வந்த கபீல் கான் தற்போது சென்னையில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் கூட தான் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தமிழ்நாட்டு மக்களிடத்தில் வெறுப்புணர்வு என்பது இல்லை என கூறி நெகிழ வைத்தார். இப்படியான நிலையில் கபீல் கான் சமீபத்தில் ஜவான் படம் பார்த்துவிட்டு நடிகர் ஷாருக்கானுக்கு கடிதம் ஒன்றை எழுதிய நிலையில் அதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
கடிதம் எழுதிய கபீல்கான்
அந்த கடித்ததில், “துரதிர்ஷ்டவசமாக உங்கள் மின்னஞ்சல் முகவரியை என்னால் பெற முடியவில்லை. இதன் விளைவாக, நான் கடிதத்தை தபால் மூலம் அனுப்பினேன், ஆனால் அதுவும் பல நாட்களாக போக்குவரத்தில் இருப்பதாகவே காண்பிக்கப்படுகிறது. எனவே அந்த கடிதத்தை இங்கு பதிவிடுகிறேன்.
ஷாருக்கான் அவர்களே, நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும் இருப்பதாக நம்புகிறேன். சமீபத்தில் நீங்கள் நடித்த "ஜவான்" படத்தை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. முக்கியமான சமூக-அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சினிமாவைப் பயன்படுத்தும் உங்கள் அர்ப்பணிப்புக்கு எனது ஆழ்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காரணம் படத்தில் இடம்பெற்ற கோரக்பூர் மூளைக்காய்ச்சல் சம்பவத்தின் சித்தரிப்பு என் இதயத்தில் ஒரு அழியாத அடையாளத்தை பதித்துள்ளது.
Unfortunately, I wasn't able to obtain your email address, @iamsrk sir .
— Dr Kafeel Khan (@drkafeelkhan) October 5, 2023
Consequently, I sent the letter by post, but that also showing in transit even after many days .Therefore posting it here 🙏🏾
To
The Honourable Mr. Shah Rukh Khan
Indian actor and film producer
Mannat,… pic.twitter.com/9OxtzHQJ5M
இந்தச் சம்பவம் மற்றும் அதன் பின்விளைவுகளுடன் தனிப்பட்ட தொடர்பைக் கொண்ட ஒருவன் என்ற முறையில், இந்தக் கதையை திரைக்குக் கொண்டு வருவதற்கான உங்கள் முடிவு என்னை மிகவும் கவர்ந்தது. "ஜவான்" ஒரு கற்பனைப் படைப்பு என்பதை நான் புரிந்துகொண்டாலும், கோரக்பூர் சம்பவத்திற்கு இணையாக படத்தில் சொல்லப்பட்ட அமைப்பு ரீதியான தோல்விகள், அக்கறையின்மை மற்றும் மிக முக்கியமாக உயிரிழந்த அப்பாவி உயிர்களின் சக்திவாய்ந்த நினைவூட்டலாக இருக்கிறது. நமது சுகாதாரப் பாதுகாப்பில் இருக்கும் பொறுப்பின் தேவையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த படத்தில் என்னை நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும், நான் சந்தித்த அனுபவங்களைத் தொகுத்துள்ளேன். படத்தின் "கோரக்பூர் மருத்துவமனை சம்பவத்தின் உண்மையான குற்றவாளி பிடிபட்டது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் நிஜ வாழ்க்கையில் உண்மையான குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிவதால் எனது வேலையைத் திரும்பப் பெற நான் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறேன்.
மேலும் தங்கள் குழந்தைகளை இழந்த 63 பெற்றோர்கள் இன்னும் நீதிக்காக காத்திருக்கிறார்கள். நான் முதலில் "The Gorakhpur Hospital Tragedy" என்ற புத்தகத்தை எழுதியுள்ளேன் என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த புத்தகம் ஆறுக்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது. திரைப்படத்தின் கதைக்களத்தின் ஒரு பகுதி எனது புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை எதிரொலிக்கிறது என்று நான் நம்புகிறேன். வாய்ப்பு கிடைத்தால், உங்களையும் திறமையான இயக்குனரையும் சந்திப்பதில் பெருமை அடைவேன்
அதே போல் மற்ற படக்குழு உறுப்பினர்களுக்கும் தனிப்பட்ட முறையில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு மக்களுக்குச் சேவை செய்வதில் உள்ள எனது உறுதிப்பாடு தடையின்றி தொடரும் என்பதையும் நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருப்பதற்கு மீண்டும் ஒருமுறை நன்றி. உங்கள் அன்பான பதிலை எதிர்பார்க்கிறேன்.