மேலும் அறிய

Arjun Sarja Love Story: உருகி உருகி காதலித்த ஆக்ஷன் கிங் அர்ஜுன்! டாப் நடிகரோடு ஓட்டம் பிடித்த ஹீரோயின்!

ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது பிரபல நடிகையை காதலித்து, காதலை வெளிப்படுத்தும் முன்னரே அந்த நடிகை வேறு ஒரு நடிகருடன் ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது.

காதலர் தினம் நாளை பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களது முதல் காதல் அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர். காதல் ஜோடிகளுக்கு நாள்தோறும் காதலர் தினமாக இருந்தாலும் இந்த பிப்ரவரி 14 ஆம் தேதி பலர் தங்களின் முதல் காதல் அனுபவத்தையே, அல்லது முதல் காதலியை நினைத்து பார்ப்பது உண்டு.

சமீபத்தில் கூட நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய முதல் காதல் பற்றி பேசி இருந்த தகவல், சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதே போன்று தான் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனும், திருமணத்திற்கு முன்னதாக பிரபலம் ஒருவரை காதலித்திருக்கிறார். அவரும் ஒரு நடிகை தான். அந்த நடிகை யார் என்பதை அர்ஜுன் வெளியே சொல்லவில்லை என்றாலும், தமிழ் திரையுலகிற்கு இந்த காதல் கதை மிகவும் பரிச்சியம்.

கன்னட திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் என்று பெயர் எடுத்தவர் அர்ஜூன்.  ஒரு நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். 

Arjun Sarja Love Story: உருகி உருகி காதலித்த ஆக்ஷன் கிங் அர்ஜுன்! டாப் நடிகரோடு ஓட்டம் பிடித்த ஹீரோயின்!

சும்ஹாடா மரி சனியா என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் அர்ஜுன். அப்போது இவருக்கு வெறும் 19 வயது தான். அதன் பிறகு ஆஷா, பிரேமா யுத்தா, பூஜா பாலா, பிரேமா ஜோதி போன்ற பல படங்களில் நடித்தார்.

நன்றி என்ற படம் தமிழ் சினிமாவிலும் நுழைந்த அர்ஜுன், அடுத்தடுத்து கடமை, நாகம், இளமை, வேஷம், எங்கள் குரல், யார், அவன், ஜெய்ஹிந்த், சங்கர் குரு என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி மொழியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். நடிகை நளினியுடன் இணைந்து நன்றி, யார், எங்கள் குரல் ஆகிய படங்களில் அர்ஜுன் நடித்த போது, அவர் மீது காதல் வயப்பட்டுள்ளார். 

தனது காதலை வெளிப்படுத்த சரியான நேரம் பார்த்து அர்ஜுன் காத்திருந்த போது தான், ராமராஜனும், நளினி காதலிக்கும் விஷயம் இவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஒருதலை காதலால் அதிகளவில் பாதிக்கப்பட்ட அர்ஜூன் தனது காதலை வெளிப்படுத்தவும் முடியாமல், மறக்கவும் முடியாமல் தவித்துள்ளார். பின்னர் நளினி ராமராஜனுடன் ஓடி போய் திருமணம் செய்து கொண்டார்.

Arjun Sarja Love Story: உருகி உருகி காதலித்த ஆக்ஷன் கிங் அர்ஜுன்! டாப் நடிகரோடு ஓட்டம் பிடித்த ஹீரோயின்!

இதன் பின்னர், நளினியை மறந்து 1988 ஆம் ஆண்டு அர்ஜூன் பெங்களூருவைச் சேர்ந்த நடிகை நிவேதா என்பவரை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார். நிவேதாவும் அக்னி பரவா, ரத்த சப்தமி, டாக்டர் கார் அப்பாய் ஆகிய படங்களில் நடித்துள்ளார். நிவேதா ஒரு நடிகை மட்டுமின்றி டான்ஸராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார். மேலும், ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை அர்ஜூன் உடன் இணைந்து நடத்தி வருகிறார். அர்ஜூன் இயக்கும் படங்களுக்கு இந்த நிறுவனம் ஸ்டூடியோவாக இருந்து வருகிறது. இந்த ஸ்டூடியோவில் நிர்வாக தயாரிப்பாளராக நிவேதா இருக்கிறார். அவருடன் இணைந்து அவரது மகள்களான ஐஸ்வர்யா, அஞ்சனா ஆகியோர் தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.

Arjun Sarja Love Story: உருகி உருகி காதலித்த ஆக்ஷன் கிங் அர்ஜுன்! டாப் நடிகரோடு ஓட்டம் பிடித்த ஹீரோயின்!

அர்ஜூன் சமீப காலமாக திரைப்படங்களில், ஹீரோவாக நடிக்கவில்லையென்றாலும் கூட வில்லன், குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார். கடந்த 6ஆம் தேதி அஜித், ரெஜினா, த்ரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் வில்லன் ரோலில் நடித்து அசத்தியிருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அகத்தியா, சீதா பயணம், தீயவர் குலைகள் நடுங்க ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அகத்தியா படம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

One Sun One Moon Lyrics : இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்..One Sun One Moon பாடல் லிரிக்ஸ் இதோ
One Sun One Moon Lyrics : இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்..One Sun One Moon பாடல் லிரிக்ஸ் இதோ
"நானும் தனுஷும் சேர்ந்து நடிக்காததற்கு இவர்கள்தான் காரணம்" - குண்டைத் தூக்கிப்போட்ட வடிவேலு
நினைவு நாளில் நடந்த அதிர்ச்சி! பூட்டப்பட்ட எஸ்பிபி நினைவிடம்... கண்ணீருடன் திரும்பிய ரசிகர்கள்!
நினைவு நாளில் நடந்த அதிர்ச்சி! பூட்டப்பட்ட எஸ்பிபி நினைவிடம்... கண்ணீருடன் திரும்பிய ரசிகர்கள்!
இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு
இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Slams CM Vijay: “மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
“மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
Masoud Pezeshkian on War: “எங்களுக்கு போர் வேண்டாம், அமெரிக்கா தான் முடிவு செய்யனும்“; ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கூறுவது என்ன.?
“எங்களுக்கு போர் வேண்டாம், அமெரிக்கா தான் முடிவு செய்யனும்“; ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கூறுவது என்ன.?
Tata Aeris on EMI: மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
Embed widget