மேலும் அறிய

18 நாளில் முடிந்த 100வது நாள் படம்.. சிகரெட் கேப்ல எல்லாம் யோசிப்பார்.. மணிவண்ணன் சீக்ரெட்!

இயக்குநர் விக்ரமன் என்றவுடனேயே நமக்கு லாலாலா லல்ல லாலாலா என்று ரோசாப்பூ பாடல் மூளையில் ரீங்காரிடும். இயக்குநர்கள் மணிவண்ணன், பார்த்திபனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்து திரையில் இயக்குநரானவர் தான் விக்ரமன்.

இயக்குநர் விக்ரமன் என்றவுடனேயே நமக்கு லாலாலா லல்ல லாலாலா என்று ரோசாப்பூ பாடல் மூளையில் புது வசந்தமாய் ரீங்காரிடும். இயக்குநர்கள் மணிவண்ணன், பார்த்திபனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்து திரையில் இயக்குநரானவர் தான் விக்ரமன்.

இவருடைய திரைப்படங்கள் இனிமையான பாடல்களுக்காகவும் குடும்பப் பாங்கான கதை மற்றும் காட்சி அமைப்புகளுக்காகவும் அறியப்படுகின்றன. அப்படிப்பட்ட இயக்குநர், மணிவண்ணனுடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

அவருடைய பேட்டியிலிருந்து..

மணிவண்ணன் சாரிடம் நான் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்தேன். 

குவா குவா வாத்துகள், நூறாவது நாள் என பல படங்களில் நான் மணிவண்ணன் சாரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருக்கிறேன். அவர் உண்மையிலேயே இந்தியா போற்றும் இயக்குநராக இருந்திருக்க வேண்டியவர். ஒரே நாளில் அசால்ட்டாக 7, 8 படங்களை சூட் செய்வார். எனக்கு பார்ப்பதற்கே பிரமிப்பாக இருக்கும். குறிப்பா நூறாவது நாள் திரைப்படத்தை வெறும் 18 நாட்களில் எடுத்து முடித்தார் என்றால் நம்ப முடிகிறதா? ஒவ்வொரு ஷாட்டும், லொக்கேஷனும் அவ்வளவு கிளாசிக்கா இருக்கும். 5 பாடல்கள் நிறைய கேரக்டர்ஸ், லொக்கேஷன் என வெரைட்டி காட்டியிருப்பார். அவர் ஒரு நல்ல நடிகரும் கூட. ஸ்பாட்டில் அவ்வளவு அழகாக நடித்துக் காட்டுவார். அசத்தலாக இருக்கும். அதுபோல் டயலாக்ஸ்ல அவரை அடிச்சிக்கவே முடியாது. நான் எல்லாம் யோசிச்சி யோசிச்சு டயலாக் எழுதுவேன். அவர் அப்படியல்ல. ஒரு சிகரெட் முடியறதுக்குள்ள பிரமாதமான டயலாக் சொல்வார். 

அதேபோல் எந்த ஷாட் எப்படி எடுக்கணும். எதுக்கு க்ளோஸ் அப், மிட் ஷாட், லாங் ஷாட், ட்ராலி, க்ரேன் என்றெல்லாம் மைண்ட் கால்குலேஷன்ல தான் வச்சிருப்பார். நான் சீன் பை சீன் எழுதி வச்சு அதை எடுப்பேன். அவர் ஆன் தி ஸ்பாட் முடிவு செய்வார். அந்த மைண்ட் கேல்குலேஷன் பிரம்மிப்பை தரும்.

இப்போதுதான் எடிட்டிங் செய்ய ஏவிட் போன்ற இயந்திரங்கள் உள்ளன. ஆனால் அப்போது மினிமம் டெக்னாலஜி வச்சிக்கிட்டு அவர் அதகளப்படுத்துவார். இது, அது என்பார். வெட்டி ஒட்டிப் பார்த்தால் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். மனசுக்குள்ள எடிட் செய்து அதை அப்புறம் எடிட்டரை செய்ய வைப்பார்.

18 நாளில் முடிந்த 100வது நாள் படம்.. சிகரெட் கேப்ல எல்லாம் யோசிப்பார்.. மணிவண்ணன் சீக்ரெட்!

அப்பேற்பட்ட கலைஞர் நான் எடுத்த சூரிய வம்சம், பிரியமான தோழி படங்களில் நடித்தார். என்னை ஸ்பாட்டில் சார் என அழைப்பார். நான் சார் நான் உங்க அசிஸ்டன்ட், என்னை மணின்னு கூப்பிடுங்க இல்ல விக்ரமன்னு கூப்பிடுங்க என்பேன். அதெல்லாம் இல்லைப்பா நான் மதித்தால் தான் மற்றவர்களும் மதிப்பார்கள் என்பார். அவர் அப்போதெல்லாம் பீக்கில் இருந்தார். உள்ளத்தை அள்ளித்தா வெற்றியால் அவர் இல்லாத படமே இல்லை என்றளவில் இருந்தார். இருந்தாலும் எனக்காக இரண்டு படங்கள் செய்தார். இரண்டிலும் மாஸ் காட்டியிருப்பார். எப்போது அவரது ஸ்டைலில் நடிப்பவர். எனக்காக என் படங்களில் என் பாணியில் நடித்துக் கொடுத்தார்.  அவர் கிட்ட உதவி இயக்குநராகப் பணியாற்றதிலும் சரி அவரை வைத்து படம் எடுத்ததிலும் சரி எனக்கு மகிழ்ச்சியும், பெருமையும் உண்டு.

இவ்வாறு விக்ரமன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget