மேலும் அறிய

இருமொழியில் உருவாகும் விஜய் மில்டனின் அடுத்த படம்...முக்கிய பாத்திரத்தில் ராஜ் தருண்

விஜய் மில்டன் இயக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழிப் படத்தில் ராஜ் தருண் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, ரஃப் நோட் புரொடக்‌ஷன் அடுத்த தயாரிப்பை அறிவிக்கிறது. 

விஜய் மில்டனின் அடுத்த படம் 

கதை உள்ளடக்கம் மிக்க சினிமாவை வழங்கி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ள ரஃப் நோட் புரொடக்‌ஷன், தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. தற்காலிகமாக படத்தின் தலைப்பாக "புரொடக்‌ஷன் நம்பர் 5" என வைக்கப்பட்டுள்ளது.  இந்த இருமொழிப் படத்தை புகழ்பெற்ற இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்குகிறார். இந்தப் படம், தெலுங்கு திரையுலகில் பெரும் கவனம் பெற்ற நடிகர் ராஜ் தருணின் கோலிவுட் அறிமுகமாகும்.

இந்த அறிவிப்பு, நடிகர் ராஜ் தருணின் பிறந்தநாளுக்கான சிறப்பு பரிசாக வெளியாகியுள்ளது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே இந்த வலுவான கூட்டணியை அறிமுகப்படுத்துவதில் ரஃப் நோட் புரொடக்‌ஷன் மகிழ்ச்சியடைகிறது.

உய்யாலா ஜம்பாலா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற ராஜ் தருண், குமாரி 21F, சினிமா சூப்பிஸ்த மாமா போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர். இப்போது, தமிழ் சினிமாவிற்கு ஒரு புது பரிமாணத்துடன் காலடி எடுத்து வைக்கிறார். இந்தப் படத்தில் அவர் புதிய தோற்றத்திலும், வித்தியாசமான கதாபாத்திரத்திலும் ரசிகர்களை கவரத் தயாராக இருக்கிறார்.

விஜய் மில்டன், வலுவான கதைகளுடன்  காணக் கூடிய காட்சிப்படிமங்களை இயக்குவதில் முன்னோடியாகத் திகழும் இயக்குநர். அவரது முந்தய படங்களான 10 எண்ணுறதுக்குள்ள, கோலி சோடா, கோலி சோடா 1.5, கடுகு, பைரகி உள்ளிட்ட படங்கள் விமர்சன மற்றும் வணிக ரீதியாக வெற்றியடைந்தன. ஒளிப்பதிவாளராகவும், சிவராஜ்குமார், விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் 40-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

படம் குறித்து விஜய் மில்டன் 

 “இந்த படம் எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு படம். கோலி சோடா பாணியை தொடர்ந்து- இது ஒரு சக்திவாய்ந்த, உணர்ச்சிமிக்க, உண்மையான கதையை கொண்டு வருகிறது  . ராஜ் தருண் மிகவும் புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும் தோன்றுகிறார்; தமிழ் ரசிகர்களை அவருடைய நடிப்பு ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என எனக்கு நம்பிக்கை உள்ளது.”

புரொடக்‌ஷன் நம்பர் 5 படமானது, கோலி சோடா திரைப்படங்கள் போலவே, நியாயமான ஆனால் தாக்கம்மிக்க காட்சிப்படுத்தலோடு தொடரும். தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்களை இணைக்கும் முயற்சியாகவும், வலுவான கதையம்சம் மற்றும் பிரதான கதாநாயகனின் அர்ப்பணிப்பு நிறைந்த நடிப்பை வழங்கும் நோக்கத்துடனும் உருவாக்கப்படுகிறது.

மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். ராஜ் தருண் போன்ற ஒரு சக்திவாய்ந்த, திறமைமிக்க நடிகரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்துவதில் ரஃப் நோட் புரொடக்‌ஷன் பெருமை கொள்கிறது. மேலும் இந்தப் படத்தைப் பற்றிய தகவல்களை  ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறது.

மேலும் தகவல்களுக்கு காத்திருங்கள்!

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Albert Theatre : ரஜினி ரசிகர்களின் கோட்டை...முடிவுக்கு வரும் ஆல்பர்ட் திரையரங்கத்தின் சகாப்தம்
Albert Theatre : ரஜினி ரசிகர்களின் கோட்டை...முடிவுக்கு வரும் ஆல்பர்ட் திரையரங்கத்தின் சகாப்தம்
6 முறை காதல் தோல்வி.. தற்கொலை எண்ணம் வரை சென்ற ஆல்யா மானசா! சஞ்சீவ் குறித்து உருக்கமான பேட்டி!
6 முறை காதல் தோல்வி.. தற்கொலை எண்ணம் வரை சென்ற ஆல்யா மானசா! சஞ்சீவ் குறித்து உருக்கமான பேட்டி!
போக்சோ வழக்கில் கும்கி பட நடிகருக்கு ஒராண்டு சிறை தண்டனை!
போக்சோ வழக்கில் கும்கி பட நடிகருக்கு ஒராண்டு சிறை தண்டனை!
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் மோகன்லால்.. சங்கத்தின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசியதால் சர்ச்சை
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் மோகன்லால்.. சங்கத்தின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசியதால் சர்ச்சை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆட்சியை நடத்த இத்தனை சவால்களா? விஜய் சந்திக்கும் 8 சவால்கள் - ஓர் அலசல்
CM Vijay: ஆட்சியை நடத்த இத்தனை சவால்களா? விஜய் சந்திக்கும் 8 சவால்கள் - ஓர் அலசல்
Kallakurichi MLA: மாவட்ட ஆட்சியர் விவகாரம் - பாலியல் தொல்லை பிரிவில் TVK MLA அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
மாவட்ட ஆட்சியர் விவகாரம் - பாலியல் தொல்லை பிரிவில் TVK MLA அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
WTC Final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குச் செல்லுமா இந்தியா? அப்போ இதெல்லாம் நடக்கனும் ப்ரோ!
WTC Final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குச் செல்லுமா இந்தியா? அப்போ இதெல்லாம் நடக்கனும் ப்ரோ!
Kallakurichi MLA: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., சர்ச்சை.. குற்றம் நிரூபணமானால் இவ்ளோ தண்டனை இருக்கா? சட்டம் சொல்வது என்ன?
கள்ளக்குறிச்சி MLA சர்ச்சை.. குற்றம் நிரூபணமானால் இவ்ளோ தண்டனை இருக்கா? சட்டம் சொல்வது என்ன?
6 முறை காதல் தோல்வி.. தற்கொலை எண்ணம் வரை சென்ற ஆல்யா மானசா! சஞ்சீவ் குறித்து உருக்கமான பேட்டி!
6 முறை காதல் தோல்வி.. தற்கொலை எண்ணம் வரை சென்ற ஆல்யா மானசா! சஞ்சீவ் குறித்து உருக்கமான பேட்டி!
Hyundai Ioniq P EV: மலிவு விலையில் புதிய மின்சார எஸ்யுவி..! எப்போது வரும்? விலை அப்படி? அம்சங்கள் ஈர்க்குமா?
மலிவு விலையில் புதிய மின்சார எஸ்யுவி..! எப்போது வரும்? விலை அப்படி? அம்சங்கள் ஈர்க்குமா?
Udhayanidhi:
Udhayanidhi: "பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்கத்தான் ஆட்சியா?" முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கேள்வி
UPSC படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிதியுதவி! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
UPSC படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிதியுதவி! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Embed widget