Vignesh Shivan: ‛கொஞ்சம் பேசினால் என்ன’ திரைப்படத்தின் டீசர்... விக்னேஷ் சிவன் வெளியிட்டார்!
கொஞ்சம் பேசினால் என்ன திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. இந்த டீசரை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிடுகிறார்.
நான் மகான் அல்ல புகழ் நடிகர் வினோத் கிஷன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'கொஞ்சம் பேசினால் என்ன'. நடிகை கீர்த்தி பாண்டியன் தும்பா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். கிரிமூர்த்தி என்னும் புதுமுக இயக்குநரால் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை சூப்பர் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
'கொஞ்சம் பேசினால் என்ன' டீசர் வெளியீடு!
சில மாதங்களுக்கு முன் படத்தின் பெயரை இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் பி.எஸ். மித்ரன் ஆகியோர் சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தனர். கொஞ்சம் பேசினால் என்ன திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. இந்த டீசரை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிடுகிறார்.
Happy to launch the teaser of #KonjamPesinaalYenna
— Vignesh Shivan (@VigneshShivN) September 1, 2022
Produced by @supertalkies @sameerbr *ing @vinoth_kishan @iKeerthiPandian
@GiriMurphy @Mrtmusicoff @konjampesinaal1 @onlynikil #KPYhttps://t.co/v2eXjOmlbQ
Heart wishes to the entire team for a grand success 😇💐❤️ pic.twitter.com/6YWDtzX89t
கொஞ்சம் பேசினால் என்ன திரைப்படத்தின் டீசரை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி என விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் படம் மாபெரும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
கொஞ்சம் பேசினால் என்ன என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் ஒரு ரொமான்டிக் காமெடி கதைக்களத்தை மையமாய் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இரண்டு பள்ளிக்கூட நண்பர்கள் வாழ்க்கையில் மீண்டும் சந்தித்து அவர்கள் காதல் வயப்படுவது தான் படத்தின் கதை. இந்த திரைப்படத்திற்கு ஹரி தபோசியா இசையமைக்கிறார். தனசேகரன் எடிட்டிங் மற்றும் லெனின் ஒளிப்பதிவில் உருவாகிறது இந்த படம்.. இந்த திரைப்படத்தில் ஆஷிக் செபாஸ்டின் போன்ற பல பிரபல யூடியூபர்கள் துணை நடிகர்களாக நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை தயாரித்துள்ள சூப்பர் டாக்கீஸ் நிறுவனம் இதற்கு முன் முதல் நீ முடிவும் நீ திரைப்படத்தை தயாரித்தது. தர்புகா சிவா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் ஜீ பைஃவில் வெளியாகி வரவேற்பை பெற்றது. புதுமுக நடிகர்கள் கிஷன் தாஸ் மற்றும் மீத்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இந்த திரைப்படமும் பள்ளி பருவ காதல் கதையை மையமாய் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான்.
Here is the teaser of #KonjamPesinaalYenna
— Keerthi Pandian (@iKeerthiPandian) September 1, 2022
Sharing screen space with dear friend @vinoth_kishan 🤗
Directed by @GiriMurphy
Produced by @supertalkies @sameerbr @Mrtmusicoff @konjampesinaal1 @onlynikil #KPYhttps://t.co/Mr73DVn7J8 pic.twitter.com/P2mXM60xGh
கொஞ்சம் பேசினால் என்ன திரைப்படமும் இரண்டு பள்ளிப்பருவ நண்பர்கள் பின் வாழ்வில் மீண்டும் சந்தித்து எப்படி காதலர்கள் ஆகிறார்கள் என்பதை மையமாகக் கொண்டு படமாக்கப்பட்ட திரைப்படம். முதல் நீ முடிவும் நீ திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பும் வெற்றியும் இந்த படத்திற்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.