மேலும் அறிய

11 Years Of Vignesh Shivan :போடா போடி முதல் காத்துவாக்குல ரெண்டு காதல் வரை... விக்னேஷ் சிவனின் 11 ஆண்டுகால இயக்குநர் பயணம்

போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் இன்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்

போடா போடி

கடந்த 2012 ஆம் ஆண்டு போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். சிலம்பரசன் வரலட்சுமி சரத்குமார், வி.டி.வி கனேஷ் இந்தப் படத்தில்  நடித்த இந்தப் படம் பெரிதளவில் வரவேற்பைப் பெறவில்லை. கூடுதலாக  ஆண்மைய பார்வை இந்தப் படத்தில் ஓங்கியிருந்ததாகவும்  விமர்சிக்கப்பட்டது. 

பாடலாசிரியர் விக்கி

இதனைத் தொடர்ந்து தனது அடுத்தப் படத்தை இயக்குவதற்கான இடைவெளியில் திரைப்படங்களில் தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தார் விக்னேஷ். அனிருத் இசையமைத்த சான்ஸே இல்ல, அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வரும் அதாரு அதாரு பாடல், மாரி படத்தில் தப்பாதான் தெரியும் முதலிய இவர் எழுதிய பாடல்கள் தனி ரூட்டில் சென்றன.

 நானும் ரவுடிதான்

பின் 2015-ஆம் வருடம் நானும் ரெளடிதான் படத்தை இயக்கினார். விஜய் சேதுபதி நயன்தாரா நடித்து வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதே நேரத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதுதான் விக்கி மற்றும் நயன்தாரா இடையில் காதலும் மலர்ந்தது. நானும் ரெளடிதான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக சூர்யா கீர்த்தி சுரேஷ் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்தப் படமும் ரசிகர்களின் எதிபார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

தொடர்ச்சியாக சினிமாவில் ஏதோ ஒரு வகையில் இயக்கிக் கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் இளைஞர்களை அதிகம் கவரக்கூடிய இயக்குநராக இருந்து வருகிறார்.  அதே நேரத்தில் இவரது படங்களின் மீதான எதிர்விமர்சனங்களும் தொடர்ந்து வருகின்றன.  விஜய் சேதுபதி நயன்தாரா சமந்தா ஆகியவர்களை வைத்து இவர் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் நெட்ஃப்ளிக்ஸின் வெளியான பாவக் கதைகளில் இவர் இயக்கிய பகுதி உட்பட படங்கள் பேச எடுத்துக் கொண்ட கதைக்களத்தில் போதுமான புரிதல் இல்லாததாக குறிப்பிடப்பட்டன. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் ஒரே ஹீரோ இரண்டு பெண்களை காதலிப்பதாக காட்சிப்படுத்தி இருப்பதும் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுகள் என்று விமர்சிக்கப்பட்டது.

விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியும் பெற்றது, தன்னுடைய ஓவ்வொரு படத்திலும் புதுமையாகவும் தன்னுடைய ஸ்டைல் என்று ஒன்றை உருவாக்க தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் விக்னேஷ் சிவன், தான் தேர்வு செய்யும் கதைகளைப் பற்றிய தெளிவான ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொண்டார் என்றால்  நிச்சயம் தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர்களில் ஒருவராக வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

ரவுடி பிக்சர்ஸ்

2021-ஆம் வருடம் நடிகை நயன்தாராவுடன் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த ஜூன் 2022-ஆம் வருடம் இருவருக்கும் திருமணமும் செய்துகொண்டனர். இயக்குநர், பாடலாசிரியராக மட்டுமில்லாமல் தனது மனைவியுடன் இணைந்து ரெளடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். தங்களது முதல் தயாரிப்பாக கூழாங்கல் என்கிற சுயாதீனப் படத்தைத் தயாரித்தது. இந்தப் படம் சர்வதேச மேடைகளில் அங்கீகாரம் பெற்றது. தொடர்ந்து நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல், ராக்கி உள்ளிட்ட படங்களைத் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Embed widget