மேலும் அறிய

சொல்லாமல் எஸ்கேப்பான வடிவேலு.. ஷாக்கான இயக்குநர்.. இப்படியெல்லாம் நடக்குமா?

கவுண்டமணி - செந்திலுக்கு காமெடி காட்சிகள் எழுதிய அனுபவம் இருந்தது. இந்த படத்துக்கு முதலில் விவேக்கிடம் தான் கதை சொன்னேன்.

வடிவேலுவின் மிகப்பெரிய காமெடி காட்சிகள் அமைந்த அரசு படத்தில் அவர் மிகப்பெரிய ஆர்வமே இல்லாமல் தான் நடித்தார் என அப்படத்தின் இயக்குநர் சுரேஷ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு சுரேஷ் இயக்கத்தில் சரத்குமார், ரோஜா, சிம்ரன், வடிவேலு, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் அரசு. ஆக்‌ஷன் கதையில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படியான நிலையில் அந்த படத்தின் ஷூட்டிங்கின்போது நடைபெற்ற மறக்க முடியாத சம்பவம் பற்றி இயக்குநர் சுரேஷ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதனைப் பற்றிக் காணலாம். 

அரசு படம் உருவாக காரணம்

நான் தாயுமானவன் என்ற பெயரில் ஒரு கதையை தயார் செய்து நிறைய தயாரிப்பாளர்களை சந்தித்து பேசினேன். எல்லாரும் கதை நல்லாருக்கு என சொன்னார்களே தவிர படம் தயாராக கால தாமதம் ஆனது. காரணம் நான் உதவி இயக்குநராக பணியாற்றிய இயக்குநர்கள் எல்லோரும் ஆக்‌ஷன் கதைகளை எடுப்பதில் சிறந்தவர்களாக இருந்தனர். அதனால் ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் ஆக்‌ஷன் கதை தயார் பண்ண சொன்னார். அப்படி உருவானது தான் அரசு தர்பார். 

சூப்பர்குட் பிலிம்ஸில் இருந்து என்னை முதன்முதலில் இருந்து சரத்குமாரிடம் தான் அழைத்து சென்றார்கள். அவர் என்னிடம் சூரியன் மாதிரி படம் இருந்தால் சொல்லுங்கள். கேட்டுப் பாருங்க என கூற மறுநாள் கதை கேட்டார். கதை கேட்டதும் அவருக்கு ரொம்ப பிடித்து விட்டது. சரத்குமாரின் பிறந்தநாளில் பூஜை போட்டு படப்பிடிப்பு தொடங்கலாம் என கூறி விட்டார். 

அதேபோல் முதலில் ஹீரோயினாக சினேகாவிடம் கேட்டோம். அவர் தேதியில்லை என மறுத்து விட்டார். அடுத்ததாக சிம்ரனிடம் கேட்டோம். அவரும் கதை கேட்க தொடங்கிய 2 நிமிடங்களிலேயே போதும் என நிறுத்தி விட்டு சூப்பர் குட் பிலிம்ஸூக்கு போன் செய்து ஓகே சொல்ல எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. 

ஆர்வம் இல்லாமல் நடித்த வடிவேலு

அரசு படத்தின் காமெடி இன்றளவும் பேசப்படுகிறது. ஏற்கனவே கவுண்டமணி - செந்திலுக்கு காமெடி காட்சிகள் எழுதிய அனுபவம் இருந்தது. இந்த படத்துக்கு முதலில் விவேக்கிடம் தான் கதை சொன்னேன். முதல் பாதி கேட்டதும் சூப்பர் என சொன்னார். 2ம் பாதி சொன்னதும் அதில் 2 காட்சிகள் தான் வருவீர்கள் என்றதும் முடியாது என சொல்லி விட்டார். அதன்பிறகு தான் உள்ளே வடிவேலு வந்தார். 

அப்போது அவருக்கு பெரிய அளவில் மார்க்கெட் இல்லாமல் இருந்தது. வடிவேலு என்னிடம் கதையே கேட்கவில்லை. கும்பகோணத்தில் ஷூட்டிங்கிற்கு வந்தார். டயலாக் பேப்பரை காட்டி படித்து பார்த்ததும் அவர் முகம் சுருங்கி விட்டது. இதில் எனக்கு காமெடியே வரவில்லை. நீங்க வேறு வசனம் எழுதிட்டு வாங்க என கூறினர். படத்தில் நடிக்கும்போது கூட விருப்பம் இல்லாமல் தான் நடித்தார்.ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார். 

இருந்தாலும் பிச்சுமணி என்ற அந்த கேரக்டருக்கு வடிவேலு முழு மூச்சாக நடித்தார். அந்த படத்தில் தனக்கு அரசு வேலை கிடைத்தவுடன் டெல்லி கணேஷிடம் சொல்லி விட்டு பைக்கில் பின்னால் அமர்ந்து செல்லும்படி ஒரு காட்சி இருக்கும். அப்படி ஏறி அமர்ந்தவர் நேராக செட்டை விட்டு வெளியே சென்று காரில் ஏறி ரூமுக்கு சென்று பின்னர் சென்னை திரும்பி விட்டார். எல்லாம் எடிட் செய்து டப்பிங் பண்ண வந்தவர் எல்லா காட்சியையும் பார்த்து விட்டு என்னை பாராட்டினார். 

தலைப்பு செய்திகள்

One Sun One Moon Lyrics : இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்..One Sun One Moon பாடல் லிரிக்ஸ் இதோ
One Sun One Moon Lyrics : இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்..One Sun One Moon பாடல் லிரிக்ஸ் இதோ
"நானும் தனுஷும் சேர்ந்து நடிக்காததற்கு இவர்கள்தான் காரணம்" - குண்டைத் தூக்கிப்போட்ட வடிவேலு
நினைவு நாளில் நடந்த அதிர்ச்சி! பூட்டப்பட்ட எஸ்பிபி நினைவிடம்... கண்ணீருடன் திரும்பிய ரசிகர்கள்!
நினைவு நாளில் நடந்த அதிர்ச்சி! பூட்டப்பட்ட எஸ்பிபி நினைவிடம்... கண்ணீருடன் திரும்பிய ரசிகர்கள்!
இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு
இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Slams CM Vijay: “மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
“மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
Masoud Pezeshkian on War: “எங்களுக்கு போர் வேண்டாம், அமெரிக்கா தான் முடிவு செய்யனும்“; ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கூறுவது என்ன.?
“எங்களுக்கு போர் வேண்டாம், அமெரிக்கா தான் முடிவு செய்யனும்“; ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கூறுவது என்ன.?
Tata Aeris on EMI: மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
Embed widget