Director Shankar: ’எப்போதும் நினைவிருக்கும் தருணம்!’ ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த கமலுக்கு ஷங்கர் சொன்ன மெசேஜ்!
Director Shankar: இந்தியன் 2 திரைப்படத்தின் முக்கிய காட்சிகளை பார்த்த கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கரை வியந்து பாராட்டியுள்ளார்.
ரசிகர்கள் கொண்டாடும் இந்தியன் திரைப்படத்தின் 2-ம் பாகத்தின் காட்சிகளைப் பார்த்துவிட்டு வாட்ச் வழங்கிய நடிகர் கமல்ஹாசனுக்கு ட்வீட் மூலம் தனது அன்பையும் வாழ்த்துகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.
ஷங்கருக்கு வாட்ச் பரிசளித்த கமல்ஹாசன்
’இந்தியன் -2’ படத்தின் காட்சிகளைப் பார்த்த கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கருக்கு வாட்ச் ஒன்றையும் பரிசாக அளித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் கமல்ஹாசன். கமல்ஹாசன் டிவிட்டரில் தனது வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.
இயக்குநர் ஷங்கர் மகிழ்ச்சியுடன் ட்வீட்
கமல்ஹாசன் ஷங்கருக்கு வாட்ச் அணிவித்து விடுவது போன்ற ஃபோட்டோவுடன் டிவிட்டரில் வாழ்த்தியுள்ளார். இதற்கு ஷங்கர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,” உங்களின் பரிசு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது. மனமார்ந்த நன்றி. சிறப்பான திரைப்படங்களை வழங்குவதை எப்போதும் தொடர்வேன். உங்களுடைய நடிப்பும் ஸ்கிரீன் ப்ரசன்ஸும் திரைப்படத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. இந்தத் தருணம் மிகவும் அழகானது. எப்போதும் நினைவில் இருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் சங்கர் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் இந்தியன் 2. இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசன் கலக்கிய முதல் பாகம் அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்ததுடன், வசூல் வேட்டை நடத்தி தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ஹிட் படங்களில் ஒன்றாகவும் உருவெடுத்தது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் 2018ஆம் ஆண்டு தொடங்கி பல சிக்கல்கள், இடையூறுகளைக் கடந்து தற்போது கிட்டத்தட்ட நிறைவடையும் தறுவாயில் உள்ளது. ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா, தைவான் ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், தற்போது சென்னை விமான நிலையத்தில் நடந்து வருவதாக தெரிகிறது.
பனேரை (panerai) வாட்ச் சிறப்பம்சங்கள்
1860-ம் ஆண்டு இத்தாலியில் முதன்முதலில் பனேரை (panerai) வாட்ச் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த வாட்ச் நிறுவனம் பல நூற்றாண்டுகள் தாண்டியும் இன்று வரை மக்களின் மனதில் நிலைத்து முன்னணி பிராண்டாக இருந்து வருகிறது. 2001ஆம் ஆண்டு முதல் சர்வதேச பிராண்டாக இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் பெரும்பாலான வாட்ச்கள் ஸ்விஸ் டெக்னாலஜியை கொண்டு இத்தாலியன் டிசைனில் செய்யப்பட்டு வருகிறது. மேலும், Waterproof உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இதில் உள்ளது.
இந்த பனேரை பிராண்ட் ஏழு விதமான வாட்ச்களை இதுவரை அறிமுகப்படுத்தியுள்ளது. Panerai Luminor, Panerai Radiomir, Panerai Radiomir, Panerai Luminor Due, Panerai Ferrari, Panerai Luminor Submersible என ஏழு விதமான மாடல்கள் உள்ளன. இந்த வாட்சின் விலை 4,90,200 லட்ச ரூபாயிலிருந்து சுமார் 3 கோடி ரூபாய் வரை இருப்பதாக தெரிகிறது.
இந்த பனேரை வாட்ச் சுமார் 50 ஆண்டுகள் வாரண்டியை கொண்டது. மேலும், இருட்டிலும் ஒளிரும் தன்மையை கொண்டதாக தெரிகிறது. Panerai Luminor (PAM 001109) என்ற மாடலை ஷங்கருக்கு பரிசாக அளித்தார் கமல். இந்த வாட்சின் விலையானது இந்திய மதிப்பில் ரூ.8,77,100 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாட்ச் இத்தாலியன் டிசையில் செய்யப்பட்டிருப்பதாகவும், waterproof உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் கொண்டுள்ளது. ஷங்கருக்கு கமல்ஹாசன் விலையுர்ந்த வாட்ச் பரிசாக கொடுத்திருப்பது சமூக வலைதளத்தில் ரசிகர்களால் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.