மேலும் அறிய

R Sundarrajan: ‘சிறகடிக்க ஆசை’ அண்ணாமலை நடிகராக இவர் தான் காரணம் தெரியுமா?

ரஜினி, இளையராஜா, மனோராமா போன்றவர்களும் என்னை நடிக்க சொல்லி சொன்னார்கள். சரி என திருமதி பழனிசாமி படத்தில் நடிக்க முடிவு செய்தேன். இதற்கிடையில் கவுண்டமணி ஹீரோவாக நடித்த படங்கள் சரியாக செல்லவில்லை

பிரபல இயக்குநரான ஆர்.சுந்தர்ராஜன், தான் நடிக்க வந்ததற்கு கவுண்டமணி தான் காரணம் என நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருப்பார். அதனைப் பற்றிக் காணலாம். 

வெற்றி இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன்

1982ம் ஆண்டு பயணங்கள் முடிவதில்லை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆர்.சுந்தர்ராஜன். ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், விஜய், பார்த்திபன், முரளி என பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கினார். அதன்பின்னர் நடிகராக இன்றளவும் சினிமாவில் இயங்கி வருகிறார். இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் அண்ணாமலை என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். 

ஒரு நேர்காணலில் பேசிய இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன், ‘நான் நடிக்க வந்தது எதிர்பாராமல் அமைந்த ஒன்றாகும். இப்போதும் நான் போன் எடுத்தால் இயக்குநர் சுந்தர்ராஜன் பேசுகிறேன் என சொல்கிறேன். ஒருபோதும் நடிகர் என குறிப்பிடமாட்டேன். சினிமாவில் கூட இயக்குநர் சங்கத்தில் நடைபெறும் நிகழ்வில் தான் கவனம் செலுத்துவேன். ஏனென்றால் இயக்குநர் என்பது என்னுடைய அடையாளம். எல்லா நடிகர்களுக்கும் ஒரு படம் இயக்கி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ஆசையால் நான் நடிகர் ஆகவில்லை.

எனினும் ஒரு இடத்தை நிரப்ப என்னுடைய நடிப்பு தேவைப்பட்டதால் அப்படி தொடங்கினேன். அதற்கு உண்மையான காரணம் கவுண்டமணி தான். என்னுடைய பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தாள் ஆகிய படங்களில் கவுண்டமணி நடித்திருப்பார். 

இதன்பிறகு அவர் ஹீரோவாக ‘பணம் பத்தும் செய்யும்’ என்ற படத்தில் நடித்தார். இதற்கிடையில் நான் குங்குமச்சிமிழ் படத்துக்காக குப்பிட்டபோது வர மறுத்து விட்டார். அதேபோல் அம்மன் கோயில் கிழக்காலே, மெல்ல திறந்தது கதவு  படத்துக்கும் முடியாது என கூறி விட்டார். அவர் என்ன சம்பளம் பெற்றார், எப்படி சினிமாவில் வளர்ந்தார், என்னுடைய படங்கள் அவருக்கு எப்படி பெயர் வாங்கி கொடுத்தது என்பது தெரியும். 

படங்களில் நடிக்க சொன்ன ரஜினி

அந்த நேரம் வாங்கிய சம்பளத்தை என்னிடம் கேட்டு பெற முடியாது என நினைத்திருக்கலாம். இல்லையென்றால் நாம் தான் ஹீரோவாகி விட்டோமே இனி ஏன் காமெடியனாக நடிக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கலாம். அதனால் 3 படங்களில் செந்திலை போட்டு நடிக்க வைத்தோம். ஆனால் எடுபடவில்லை. கவுண்டமணியின் பலம் இதில் வரவில்லை. அவர் இடத்தில் ஜனகராஜை போட்டு நடிக்க வைத்தாலும் அந்த திருப்தி வரல.. 

ரஜினி, இளையராஜா, மனோராமா போன்றவர்களும் என்னை நடிக்க சொல்லி சொன்னார்கள். சரி என திருமதி பழனிசாமி படத்தில் நடிக்க முடிவு செய்தேன். இதற்கிடையில் கவுண்டமணி ஹீரோவாக நடித்த படங்கள் சரியாக செல்லவில்லை என்பதால் அவர் மீண்டும் காமெடிக்குள் வந்தார். எனினும் திருமதி பழனிசாமி படத்தில் எனக்கென ஒரு காமெடி கேரக்டர் சொன்னேன். பின்னர் கவுண்டமணியும் அந்த படத்தில் நடித்தார். 

பின்னர் என் ஆசை மச்சான் படத்தில் நான் மட்டும் நடிக்க அதைப் பார்த்து தான் நடிக்க வாய்ப்பு வந்தது என ஆர்.சுந்தர்ராஜன் தெரிவித்தார்.  

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget