மேலும் அறிய

Mysskin: படிப்பேனோ இல்லையோ தினமும் 5 புத்தகம் வாங்குவேன்.. இயக்குநர் மிஷ்கின் பேச்சு

நான் படிக்கும் புத்தகங்களில் இருக்கும் விஷயத்தை என் படங்களில் அப்படியே நான் வைக்க மாட்டேன்.  அதிலிருந்து எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை டெவலப் செய்து வைப்பேன்.

நான் படிக்கும் புத்தகங்களில் இருக்கும் விஷயத்தை என் படங்களில் அப்படியே நான் வைக்க மாட்டேன் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில்  சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மிஷ்கின். தொடர்ந்து அஞ்சாதே, யுத்தம் செய், நந்தலாலா, முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ என படங்களை மிஷ்கின் இயக்கியுள்ளார். தற்போது பிசாசு 2 படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதனிடையே தன்னுடைய தம்பி ஹீரோவாக நடிக்கும் டெவில் படத்துக்கு மிஷ்கின் இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். 

நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சுட்டுப்பிடிக்க உத்தரவு, சவரக்கத்தி, மாவீரன், ஆர் யு ஓகே பேபி, லியோ உள்ளிட்ட படங்களிலும் மிஷ்கின் நடித்துள்ளார். இயக்குநர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட கலைஞராக வலம் வரும் மிஷ்கின் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நபராக உள்ளார். 

இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “நான் ஒருநாளைக்கு 5 புத்தகங்கள் வாங்குவேன். ஏன் வாங்கினேன் என்று எல்லாம் தெரியவில்லை. ஆனால் நான் வாங்குவேன். நான் ஒவ்வொரு நாளும் நடு இரவு 3 மணிக்கு தான் தூங்க போகிறேன். அதில் 2 மணி முதல் 3 மணி வரை என்னுடைய வேலை என்ன புத்தகம் புதிதாக இன்று வந்திருக்கிறது என்பதை பார்ப்பது தான். உடனடியாக அமேசான் தளத்தில் ஆர்டர் போட்டு விடுவேன். இதுதான் என்னுடைய வேலை. படிக்க நேரம் இருக்கோ இல்லையோ, வாங்கி போட்டு விடுவேன். குறைந்தப்பட்சம் அந்த புத்தகத்தில் கரு, முன்னுரை என எதையாவது படித்து வைத்து விடுவேன். பின் நேரம் கிடைக்கும்போது அந்த புத்தகம் படிப்பேன்.

ஆனால் நான் படிக்கும் புத்தகங்களில் இருக்கும் விஷயத்தை என் படங்களில் அப்படியே நான் வைக்க மாட்டேன்.  அதிலிருந்து எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை டெவலப் செய்து வைப்பேன். ஷேக்ஸ்பியர் கதைகளை எடுத்துக் கொண்டால் அது உருவாவதற்கு முன்னால் பல கதைகள் இருக்கிறது. ஒவ்வொன்றாக படித்து படித்து அதன் அடுத்த அத்தியாயம் என்பது உருவாகிறது. எடுத்துக்காட்டாக அரிசியை எடுத்துக் கொண்டால், அரிசி ஒன்று தான் ஆனால் அதை வெவ்வேறு விதமாக சமைக்கலாம் என்பதைப் போல நாங்கள் வெவ்வேறு விதமாக தர முயற்சிக்கிறோம். இதைத்தான் நாங்கள் எல்லாரும் பண்ணுகிறோன். இதில் ஒவ்வொருவரின் அடையாளம் என்பது இருக்கும்” என மிஷ்கின் கூறியுள்ளார். 


மேலும் படிக்க: Mysskin: “புத்தகம் படிக்கிறது தான் வேலையே” .. நண்பர்களின் சக்ஸஸ் சீக்ரெட் பற்றி பேசிய மிஷ்கின்!

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
Embed widget