படிச்சிருக்கீங்களா இல்லையா..நாகரிகம் தெரியாதா...மிஸ்கின் பேச்சை கண்டித்து வாட்டர்மெலன் ஸ்டார் வீடியோ
பாட்டில் ராதா பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மிஸ்கின் ஆபாசமான வார்த்தைகளால் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் கண்டனம் தெரிவித்து வீடியோ தெரிவித்துள்ளார்

மிஸ்கின்
இயக்குநர் மிஸ்கின் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாட்டில் ராதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மிஸ்கின் தொடர்ச்சியாக பல ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தினார். மேலும் சமூக வலைதளங்களில் பெண்கள் பாடல்களுக்கு ஆபாசமாக நடனமாடி வீடியோ வெளியிடுவதாக கூறி விமர்சித்தார். இன்றைய சூழலில் பிறந்த குழந்தை கூட நடிகனாக தான் பிறக்கிறது. இவர்கள் செய்வதைப் பார்த்தால் மூஞ்சியில் குத்த வேண்டும் போல் இருக்கிறது என மிஸ்கின் பேசினார். இதே நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இயக்குநர் பா ரஞ்சித் ஆகியவர்களும் கலந்துகொண்டார்கள். பொது நிகழ்ச்சி ஒன்றில் அத்தனை பேர் முன்னால் மிஸ்கின் ஆபாசமாக பேசியதை கண்டித்து பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் இன்ஸ்டாகிராம் பிரபலமான வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் மிஸ்கின் பேச்சை கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
மிஸ்கினை கண்டித்து வாட்டர்மெலன் ஸ்டார் வீடியோ
View this post on Instagram
" டைரக்டர் மிஸ்கின் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் அநாகரீக வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம். இயக்குநர் மிஸ்கின் சமுதாய சீர் திருத்தத்திற்குரிய படங்களை எடுத்து வருகிறீகள் . நிறைய பேருக்கு நீங்க அட்வைஸ் பண்ணுவீங்க. உங்களுடைய வயதிற்கு நீங்கள் எல்லாருக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். உங்களுடைய வயதிற்கு நாங்கள் உங்களுக்கு அட்வைஸ் பண்ணக்கூடாது. நீங்கள் இப்படி பேசியது எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்து. நான் ஒரு ஃபிஸியோதெரபி மருத்துவர் . நாங்களே எங்கள் நோயாளியிடம் மரியாதையாக தான் பேசுவோம். ஆனால் நீங்க பத்திரிகையாளர் சந்திப்பில் மூஞ்சில குத்துவேன் என்று பேசியிருக்கிறீர்கள். இது எல்லாம் ஒரு பேச்சா. இயக்குநர் மிஸ்கின் கண்டிப்பாக பொதுமக்கள் முன்னாடி மன்னிப்பு கேட்டே ஆகனும். நடிக்க தெரியாதவர்களையும் நடிக்க வைப்பது தான் ஒரு சிறந்த இயக்குநர். நீங்க படிச்சிருக்கீங்கா இல்லையா? நாகரீகம் தெரியுமா தெரியாதா ? திரைப்பட இயக்குநர் என்கிற ஒரு காரணத்திற்காக ஒட்டுமொத்த தமிழ்நாடையும் விலைக்கு வாங்கிவிட்டதாக நினைக்காதீங்க. என் பின்னால் ஒட்டுமொத்த இந்தியாவே இருக்கிறது. அதனால் இந்த மாதிரி இனிமேல் பேசாதீங்க" என வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் தெரிவித்துள்ளார்





















