மேலும் அறிய

Agent Tina Lokesh : 'ஏஜெண்ட் டினாவின் இளமைக்காலம்.. தனிப்படமாக வருமா? - சுவாரஸ்ய பதில் கொடுத்த லோகேஷ்!

லோகேஷ் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட நிலையில் அங்கிருந்தவர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

விக்ரம் படம் வெளியான பிறகு ஒரு கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  கமல்ஹாசன் வீட்டு பணிப்பெண்ணாக நடித்து, பிற்பாதியில் ரா ஏஜெண்ட் கதாபாத்திரத்தில் அதிரடி காட்டியிருப்பார் நடன கலைஞர் வசந்தி. இவரது ஏஜெண்ட் டினா கதாபாத்திரம் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தோசை சுட்டுக்கொண்டு முதல்பாதியில் காட்டப்பட்ட ஒரு கதாபாத்திரம் திடீரென பாய்ந்து பாய்ந்து சண்டையிட்ட காட்சி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.

சிறிய காட்சியில் வந்தாலும் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார் ஏஜெண்ட் டினா. இந்நிலையில் தனது படத்தில் வரும் கதாபாத்திரங்களை வைத்து யுனிவர்ஸ் பாணியில் அடுத்தடுத்த படங்களை இயக்கும் இயக்குநர் லோகேஷ், ஏஜெண்ட் டினாவுக்கு ஏதும் சினிமா வைத்திருப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. அந்த எதிர்பார்ப்பை மாணவி ஒருவர் நேரடியாகவே லோகேஷிடம் கேட்டார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lokesh Kanagaraj (@lokesh.kanagaraj)

லோகேஷ் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட நிலையில் அங்கிருந்தவர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது ஏஜெண்ட் டினா குறித்து கேள்வி எழுப்பிய பெண்  ஒருவர், ஏஜெண்ட் டினா கதாபாத்திரத்தை வைத்து அவரது தொடக்ககாலம் மாதிரியான கதையை முன்னணி நாயகியை வைத்து இயக்குவீர்களா எனக் கேட்டார்.

அதற்கு பதிலளித்த லோகேஷ், 

 "அதே ஆசை எனக்கும் இருக்கு. பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரமாகவே எஜெண்ட் டினாவை வைத்தேன். எதிர்வரும் என்னுடைய படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கும் மேலும் முக்கியத்துவத்தை தருவேன். அதற்கான பொறுப்பும் எனக்கு வந்திருக்கிறது. ஏஜெண்ட் டினாவின் முன்கதைக்கு சரியான கதைக்களம் அமைந்தால் நிச்சயம் நான் திரைப்படம் இயக்குவேன்" என்றார்.

இந்நிலையில் ஏஜெண்ட் டினாவின் இளமை கதாபாத்திரத்துக்கு நடிகை ஆண்ட்ரியா சரியாக இருப்பார் என சோஷியல் மீடியாவில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். தற்போது விஜய் படத்துக்காக தன்னுடைய ஸ்கிரிப்ட் வேலையை தொடங்கியுள்ள லோகேஷ் , அனைத்துவிதமான சோஷியல் மீடியாவில் இருந்தும் தற்காலிகமாக கேப் எடுத்துள்ளார். படத்துக்கான வேலைகளை முடித்துவிட்டு படம் தொடர்பான தகவலோடுதான் மீண்டும் சோசியல் மீடியா பக்கம் வரப்போகிறார் லோகேஷ்.

 

 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget