மேலும் அறிய

தேவயானியை மன்னிப்பு கேட்கச்சொன்ன மணிவண்ணன்.. இயக்குநர் களஞ்சியம் பகிர்ந்த சுவாரஸ்யம்.. ஒரு ப்ளாஷ்பேக்

"அதற்கு தேவையானி நீ ஒரு சாதாரண ஸ்டில் ஃபோட்டோகிராஃபர், எப்படி என்னை பெயர் சொல்லி அழைக்கலாம்" என்றார்

பூமணி , கிழக்கும் மேற்கும் ,பூந்தோட்டம் , மிட்டா மிராசு ,முந்திரிக்காடு உள்ளிடா படங்களை இயக்கியவர் மு.களஞ்சியம் . இவர் ஒரு சில படங்களில் நடிகராகவும் களம் கண்டிருக்கிறார். இவர் தனக்கும் மணிவண்ணனுக்கும் இடையிலான நட்பு குறித்து நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.


தேவயானியை மன்னிப்பு கேட்கச்சொன்ன மணிவண்ணன்.. இயக்குநர் களஞ்சியம் பகிர்ந்த சுவாரஸ்யம்.. ஒரு ப்ளாஷ்பேக்


”அதில் எனக்கும் அவருக்கும் அடிப்படையில் அரசியல் ரீதியில் ஒரு பிணைப்பு உண்டு. மணிவண்ணன் ஒரு தீவிர பொதுவுடமை சிந்தனைவாதி . பார்வையாளர்களுக்கு புரியுற மாதிரி சொல்லணும்னா அவர் ஒரு நக்சலைட். கம்யூனிஸ்ட்காரர் அவர். மணிவண்ணன் சார் வெளியில் வாங்கிய சம்பளம் வேறு. என்னுடைய படத்திற்கு அவர் சம்பளமே பேசியது கிடையாது. அவர் நான் கொடுப்பதை வாங்கிக்கொள்வார். அவருடைய டப்பிங்கிற்காக காத்திருப்பேன்.

எல்லா இடத்துலையும் இயக்குநருக்காக நிப்பாரு. தேவையானிக்கு என் படமான பூமணியில் ஒரு பிரச்சனை. என்னவென்றே தெரியவில்லை  பூமணியில் எல்லாமே பிரச்சனையாகத்தான் இருந்தது. பூஞ்சோலையில் இருந்து போதையாறு அப்படிங்குற மலை உச்சியில ஒரு காட்சியை எடுக்கணும். அந்த இடத்துல ஒரே அட்டை, புலிகள் நடமாடும் இடம் வேறு. மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில அந்த ஷூட்டிங் எடுக்குறோம்.  மதியம் 1 மணிக்குதான் அந்த பகுதியையே சென்றடைகிறோம். அப்போ என்னுடைய ஸ்டில் ஃபோட்டோகிராஃபர் தேவயானி இந்த பக்கம் திரும்புங்க அப்படினு ஃபோட்டோ எடுக்க கூப்பிட்டிருக்கிறார். அதற்கு தேவயானி நீ ஒரு சாதாரண ஸ்டில் ஃபோட்டோகிராஃபர், எப்படி என்னை பெயர் சொல்லி அழைக்கலாம். இயக்குநர், கேமரா  மேனுக்குதான் அந்த உரிமை இருக்கிறது. மற்றவர்கள் யாருமே என்னை தேவயானி என கூப்பிடக்கூடாது அப்படின்னு சொல்லிட்டாங்க. அதுமட்டுமல்லாமல் மன்னிப்பு கேளு அப்படினு வேற சொன்னாங்க. அந்த பொண்ணுக்கு இந்தி , இங்கிலீஷ்தான் தெரியும். தமிழ் அவ்வளவா தெரியாது. இந்த சூழல்ல யாருமே மன்னிப்பு கேட்க கூடாதுனுதான் நினைக்குறாங்க. அங்க இருக்குற எல்லாமே என்னுடைய நண்பர்கள்தான்.

முரளி சார் அந்த பெண்ணை போய் சமாதானம் செய்யுறாரு. நேரம் வேற ஆகிட்டு இருக்கு. பத்திரிகையில் இந்த பிரச்சனை எல்லாமே பெரிய விஷயமா வெளியானது. 10 நாட்களுக்கு பிறகு மணிவண்ணன் சார் ஷூட்டிங்  வந்தாரு. வந்த உடனே எங்கே இருக்காங்க அந்த பெண் தேவயானி, வர சொல்லுங்கன்னு சொல்லி , வந்த உடனே ஏம்மா பேருன்னு ஒன்னு, ஏன் வைக்குறதுன்னு கேட்டார். கூப்பிடத்தானே வைக்குறது. இல்லை பேர் வைக்கும் பொழுது இவங்க எல்லாம் பேர் சொல்லி கூப்பிடலாம் , இவங்கெல்லாம் கூப்பிடக்கூடாதுன்னு சொல்லுறோமா?

பேர் வைக்குறது கூப்பிடுவதற்குதானே ...என்னையும்தானே பேர் வச்சு கூப்பிடுறான். மணிவண்ணன் வந்துருக்கான்னு சொல்லுறான். அதுக்காக கோவப்பட முடியுமா?  அதனால நீ நடந்துக்கிட்டதுக்கு நீதான் அவன்கிட்ட மன்னிப்பு கேட்கணும் அப்படினு சொன்னாரு. இது தேவயானிக்கு ஒரு தெளிவை ஏற்படுத்துச்சு. மணிவண்ணன் சார் மீது அவங்க கோவப்படல. அதன் பிறகு போட்டோகிராஃபர் காட்டிய ஆல்பத்தை பார்த்து மிரண்டு போய் , சாரி பூபதினு எல்லாருக்கும் முன்னால சொன்னார் தேவயானி. இயக்குநருக்கு பிரச்சனை என்றால் அவர் தீர்வு கண்டுபிடிப்பார்” என்றார் களஞ்சியம்.

தலைப்பு செய்திகள்

ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்
‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்
அப்பாவுடன் மோதும் மகன்...ஒரே நாளில் வெளியாகும் படங்கள்...
அப்பாவுடன் மோதும் மகன்...ஒரே நாளில் வெளியாகும் படங்கள்...
ரிஷிகாந்த் சனந்த் இருவருக்கும் மோதிரம் பரிசளித்த இயக்குநர் மிஷ்கின்
ரிஷிகாந்த் சனந்த் இருவருக்கும் மோதிரம் பரிசளித்த இயக்குநர் மிஷ்கின்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Embed widget