மேலும் அறிய

THALA 61 | ”மூன்றாவது முறை கூட்டணி மக்களுக்கு அலுத்து போகாதா” - அஜித்தின் ஆன் தி ஸ்பாட் பதில்!

தொடர்ந்து மூன்றாவது படம் , ஒரே இயக்குநருடன் பயணித்தால் மக்களுக்கு அலுத்துவிடாதா என கேட்டாராம் வில்லன் கார்த்திகேயா.

தல அஜித் நடிப்பில் வருகிற பொங்கல் பண்டிகை அன்று வெளியாகவுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை ஹச்.வினோத் இயக்க , போனிகபூர் தயாரித்துள்ளார்.  ​இப்படத்தை போனி கபூர் மற்றும் ஜி ஸ்டியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்நிலையில் படம் குறித்த பல சுவாரஸ்ய விஷயங்களை இயக்குநர் ஹச்.வினோத் பகிர்ந்துள்ளார். வலிமை படத்தின் கதையை அஜித்திடன் சொல்லும் பொழுது ஒன் லைன் மட்டும்தான் கேட்டாராம், பின்னர்  ‘எப்போ பார்த்தாலும் யோசிச்சுக்கிட்டே இருக்குற நாம, யோசிக்கவே டைம் இல்லாம ஓடிட்டு இருக்குற மக்களுக்குப் படம் பண்றோம். அதை மைண்ட்ல வெச்சு பண்ணுங்க’ சார் என இயக்குநரிடம் கூறினாராம் அஜித்.


THALA 61 | ”மூன்றாவது முறை கூட்டணி மக்களுக்கு அலுத்து போகாதா” - அஜித்தின் ஆன் தி ஸ்பாட் பதில்!
வலிமை படம் முழுக்க முழுக்க அஜித்திற்கான படம் என்பதில் சந்தேகமே இல்லை என்றாலும் இயக்குநரின் டச்சும் இருக்கும் என ஹச்.வினோத் தெரிவித்துள்ளார். படம் அஜித் ரசிகர்களுக்காக மட்டுமல்லாமல் குடும்ப ரசிகர்களுக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளதாம். படத்தில் வில்லனாக நடிக்க அர்ஜுன் தாஸ் மற்றும் பிரசன்னா ஆகிய இருவரும் கதைக்கு பொருத்தமாக இருப்பார்கள் என்றாராம் அஜித். ஆனால் சில காரணங்களால் அவர்களை தவிர்த்து மலையாள நடிகர் டொவினோ தாமஸை அனுகியுள்ளனர். அவருக்கு கால் ஷீட் பிரச்சனை இருந்ததால் தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவை அனுகியுள்ளனர். கதாநாயகனாக நடித்து வந்தாலும், அஜித் சாருக்கு வில்லனாக நடிப்பதென்றால் ஓக்கே என அவரும் டிரையல் ஷூட்டிற்கு தயாராகிவிட்டாராம். ஷூட்டிங்கின் பொழுது கார்த்திகேயா முகத்தில் தெலுங்கு சாயல் தெரிகிறது அவரை மாற்றிவிடலாமா என அஜித்திடம் கேட்டுள்ளார் இயக்குநர், உடனே அஜித் அதை மட்டும் செய்யாதீர்கள். என் வாழ்க்கையில் இப்படி ஒரு படத்திலிருந்து பாதியிலேயே நீக்கப்பட்டேன். அதன் பிறகு எங்கு சென்றாலும் அதற்கான காரணங்கள் மட்டுமே கேட்கப்பட்டது. அது நம் கெரியரையே மாற்றிவிடும். தப்பான செய்திகளும் பரப்பப்படும் என அக்கறையுடன் பேசியுள்ளார் அஜித். மேலும் கார்த்திகேயாவிற்காக படப்பிடிப்பு தளத்தின் கடைசி நாளில் காரசாரமான பிரியாணியையும் ஆந்திரா ஸ்டைலில் செய்து அசத்தியுள்ளார் அஜித்.


THALA 61 | ”மூன்றாவது முறை கூட்டணி மக்களுக்கு அலுத்து போகாதா” - அஜித்தின் ஆன் தி ஸ்பாட் பதில்!

இதையெல்லாம் விட கூடுதல் சுவாரஸ்யம் இயக்குநர் ஹச்.வினோத்தான் அஜித்தின் 61 வது படத்தை இயக்கவுள்ளாராம். அதற்கான கதை விவாத பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறதாம். தொடர்ந்து மூன்றாவது படம் ஒரே இயக்குநருடன் பயணித்தால் மக்களுக்கு அலுத்துவிடாதா என கேட்டாராம் வில்லன் கார்த்திகேயா. அதற்கு அஜித் “எனக்கு வினோத் கூட வொர்க் பண்ண ரொம்ப பிடிச்சிருக்கு, அதனால பண்ணுறேன் !” என்றாராம்.  அதே போல ஹச்.வினோத் இளம் இயக்குநர்களுக்கும் என்னை போல வாய்ப்பு கொடுத்தா அவங்க வாழ்க்கையிலையும் மாற்றம் வரும்ல சார் என கேட்டாராம் . அதற்கு அஜித் ‘சார், எனக்கு கம்ஃபர்ட்டா வேலை செய்றது முக்கியம். யாரோட கம்ஃபர்ட்டா இருக்குன்னு ஃபீல் பண்றேனோ, 
அவங்களோட தொடர்ந்து வேலை செய்றேன்’ என பதிலளித்துள்ளார்.  அஜித் 61 படத்தை போனி கபூர்தான் தயாரிக்கவுள்ளார். உண்மையில் அஜித் குறித்து வரும் செய்திகள் வேறு, அஜித் உண்மையில் வேறு என அவர் குறித்த வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் ஹச்.வினோத். எது எப்படியோ வினோத், அஜித் ஹாட்ரிக் கூட்டணியின் அடுத்த பட அப்டேட்டிற்கு தயாராகுங்கள் தல ஃபேன்ஸ்!

 

 

 

 

தலைப்பு செய்திகள்

சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Results LIVE: தாராபுரத்தில் மீண்டும் தவெக முன்னிலை.! 2ஆம் இடத்திற்கு சென்ற அதிமுக
தாராபுரத்தில் மீண்டும் தவெக முன்னிலை.! 2ஆம் இடத்திற்கு சென்ற அதிமுக
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Upcomig Cars: மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
IAS Transfer: உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
Embed widget