மேலும் அறிய

Desingh Periyasamy: சிம்பு பட இயக்குனரிடம் பண மோசடி! உதவி இயக்குனரை வலைவீசி தேடும் போலீஸ் - என்ன நடந்தது?

நகைகளுடன் சென்ற இக்பால் அதை அடமானம் வைத்து பெற்ற தொகை ரூ.3 லட்சம் ரொக்கத்தை தேசிங்கு பெரியசாமியிடம் ஒப்படைக்காமல் கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது.

துல்கர் சல்மான் படத்தை இயக்கியவரும், நடிகர் சிம்புவின் அடுத்த பட இயக்குநருமான தேசிங்கு பெரியசாமியிடம் ரூ.3 லட்சம் கையாடல் செய்ததாக உதவி இயக்குநர் மீது அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி:

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: "பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. சென்னை, அண்ணா நகர் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர் தற்போது கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பில், சிலம்பரசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமாகி அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

தேசிங்கு பெரியசாமியிடம் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் உதவி இயக்குநராக முகமது இக்பால் என்பவர் இருந்துள்ளார். இவர், தேசிங்கு பெரியசாமியின் அனைத்து விதமான வரவு செலவு மற்றும் பணப் பரிவர்த்தனைகளையும் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் தேசிங்கு பெரியசாமி, தனது 150 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை அதே பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடமானம் வைத்து பணம் பெற்று வரும்படி முகமது இக்பாலிடம் கூறியுள்ளார்.

3 லட்சம் கையாடல்:

ஆனால், நகைகளுடன் சென்ற இக்பால் அதை அடமானம் வைத்து பெற்ற தொகை ரூ.3 லட்சம் ரொக்கத்தை தேசிங்கு பெரியசாமியிடம் ஒப்படைக்காமல் கையாடல் செய்துள்ளார். இதுபற்றி கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசியதோடு, தேசிங்கு பெரியசாமி மற்றும் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சி அடைந்த தேசிங்கு பெரியசாமி இந்த விவகாரம் குறித்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, காவல் துறையினர் மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து உதவி இயக்குநர் முகமது இக்பாலை தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
Embed widget