Barathiraja: இயக்குநர் இமயத்தின் வீட்டில் 3ம் தலைமுறை இயக்குனர்! தாத்தாவை இயக்கிய பேத்தி!
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவின் மகள் தனது தாத்தா பாரதிராஜாவை வைத்து இறும்படம் ஒன்று இயக்கியுள்ளார்.
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பேத்தி மதிவதனி மனோஜ் தான் படிக்கும் பள்ளிக் கூடத்திற்காக ஒரு குறும்படத்தை தன் தாத்தா பாரதிராஜாவை வைத்து இயக்கி உள்ளார். சின்ன வயதிலேயே சிறப்பாக படப்பிடிப்பில் வேலை செய்வதை பார்த்து இயக்குனர் பாரதிராஜா, தனது பேத்தியும் இயக்குநருமான மதிவதனி மனோஜ்க்கு பொன்னாடை அணிவித்து பாராட்டியுள்ளார்.
இயக்குனர் இமயம்:
தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் என பெயர் அழைக்கப்படுபவர் பாரதிராஜா. தனக்கெனனவும் தனது திரைப்படத்திற்கெனவும் தனிபாணி திரைப்படத்தையும் அதன் மூலம் தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியவர் பாரதிராஜா. இவர் கடந்த 1977ஆம் ஆண்டு 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் சினிமாவின் இயக்குநராக அறிமுகமானார். அதன் பின்னர் பல க்ளாசிக் மற்றும் வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் என்ற பெயரைப் பெற்றுள்ளார். இவர் சமீபகாலமாக சினிமாவில் நடித்து வரும் கதாப்பாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பாரதிராஜா கடந்த 1999ஆம் ஆண்டு தனது மகன் மனோஜ் பாரதிராஜாவை தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்னர், பல படங்களில் அவர் நடித்துள்ளார். குறிப்பாக சமுத்திரம், அல்லு அர்ஜுனா போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படியான நிலையில், மனோஜ் பாரதிராஜா கடந்த ஆண்டு இயக்குநராக தமிழ் சினிமாவில் தனது முதல் படத்தை இயக்கியிருந்தார். மார்கழி திங்கள் என பெயரிடப்பட்ட இந்த படம் வெளியாக ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்சன்ஸ் தயாரித்தது. ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார். புதுமுகங்கள் நடித்த இந்த படத்தில் பாரதிராஜாவும் நடித்திருந்தார். நடிகராவதற்கு முன் அமெரிக்காவில் தியேட்டர் ஆர்ட்ஸ் படிப்பை படித்து முடித்த மனோஜ், இயக்குநர் மணிரத்னத்திடம் பம்பாய் படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்ததுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாரதி ராஜா பேத்தி இயக்கிய குறும்படம்:
இந்நிலையில் மனோஜ் பாரதிராஜாவின் மகள் மதிவதனி மனோஷ் தான் படிக்கும் பள்ளிக் கூடத்திற்கு ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். அதில் தனது தாத்தா பாரதிராஜாவை வைத்து இயக்கி உள்ளார். சின்ன வயதிலேயே சிறப்பாக படப்பிடிப்பில் வேலை செய்வதை பார்த்து இயக்குனர் பாரதிராஜா, தனது பேத்தியும் இயக்குநருமான மதிவதனி மனோஜ்க்கு பொன்னாடை அணிவித்து பாராட்டியுள்ளார்.
இதனால் தமிழ் சினிமாவின் இயக்குநர் இமையம் என்றால் அது பாரதிராஜா மட்டும்தான். இவரது இயக்கத்தில் நடித்த பல நடிகர்களும் நடிகைகளும் தமிழ் சினிமாவின் உச்சத்தில் வைத்து கொண்டாடப்பட்டுள்ளனர். இவரது குடும்பத்தில் இருந்து இயக்குநர் அவதாரம் அவரையடுத்து அவரது மகனும் பேத்தியும் எடுத்துள்ளதால், இயக்குநர் இமயத்தின் வீட்டில் இருந்து மூன்றாம் தலைமை இயக்குநர் என பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.