மேலும் அறிய

Vikram Thangalaan : சாமுராய் முதல் தங்கலான் வரை.. விக்ரம் குறித்து இயக்குநர் பாலாஜி சக்திவேல் சொன்ன சீக்ரெட்

சாமுராய் படத்தை இயக்கிய பாலாஜி சக்திவேல் தங்கலான் விக்ரமைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் தமிழ் சினிமாவில் நிறைய முக்கியமான திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அதில் நடிகர் விக்ரம் நடித்திருக்கும் தங்கலானும் ஒன்று. விக்ரமின் கரியரில் மிக முக்கியமான படமாக தங்கலான் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனை உயரங்களைத் தொட்டாலும் சில நடிகர்களின் குணங்கள் மாறுவதில்லை. தங்கலான் படத்திற்கு எந்த அளவிற்கு  ஈடுபாட்டோடு விக்ரம் இருக்கிறாரோ அதே அளவிற்கான ஈடுபாட்டை தனது தொடக்க காலத்தில் தான் நடித்தப் படங்களுக்கும் செலுத்தியிருக்கிறார் விக்ரம். சமீபத்தில் பாலாஜி சக்திவேல் விக்ரம் குறித்து பேசியது இதையே உறுதிப்படுத்துகிறது...

சாமுராய்

2002-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சாமுராய். இந்தப் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் பாலாஜி சக்திவேல். விக்ரமின் கரியரில் மிக முக்கியமான படமாக சாமுராய் படம் அமைந்தது. சமீபத்தில் இந்தப் படத்தின் 21 ஆண்டு நிறைவு நாள் ரசிகர்களாக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு படத்தின் படத்தின் இயக்குநர் பாலாஜி சக்திவேல் தனது பல நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அப்போது இந்த படத்திற்கு நடிகர் விக்ரம் செலுத்திய உழைப்பைப் பற்றி மிக உற்சாகமாக பேசினார் அவர்.

மூங்கில் காடுகளே

சாமுராய் படத்தில் இடம்பெற்ற மூங்கில் காடுகளே பாடல் இன்றுவரை அனைவரும் ரசிக்கும் பாடலாக இருந்து வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இந்தப் பாடலுக்கு எல்லாத் தலைமுறையைச் சேர்ந்த ரசிகர்களும் இருக்கிறார்கள். இந்தப் பாடலில் இடம்பெற்ற இயற்கை காட்சிகள் மனம் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததும் மற்றொரு காரணம். இந்தப் பாடல் குறித்து பாலாஜி சக்திவேல் பேசியபோது. ”நான் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக வேலை செய்திருந்ததால் என் முதல் படத்திற்கு எனக்கு வேண்டியதை எல்லாம் எனது தயாரிப்பு நிறுவனம் எனக்கு கொடுத்தது. பாடல் காட்சிகளுக்கு ஏற்ற வகையில் நிறைய லொகேஷன்கள் சென்றோம். இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளை மட்டும் மொத்தம் மூன்று ஸ்டண்ட் மாஸ்டர்களைக் கொண்டு இயக்கினேன். ஒவ்வொரு சண்டைக் காட்சியையும் ஒவ்வொருவர் வடிவமைத்தார்கள். எனக்கு தேவையான அத்தனையும் கிடைத்ததால்தான் இந்தப் படத்தை நான் நினைத்த மாதிரி எடுக்க முடிந்தது.” என்று அவர் கூறினார்.

விக்ரமின் ஈடுபாடு குறையவேயில்லை

தனது முதல் படத்தில் விக்ரமுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய பாலாஜி சக்திவேல் “சாமுராய் படத்தில் விக்ரம் தனது முழு ஈடுபாட்டுடன் நடித்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் முழுவதுமாக ஒன்றி நடித்தார் அவர். இப்போது தங்கலான் படத்தில் அவரது ஈடுபாட்டை நாம் அனைவரும் பார்க்கிறோம் இல்லையா?! அதை பார்க்கும்போது அதே ஈடுபாட்டுடன்தான் அவர் சாமுராய் படத்திலும் நடித்திருந்தார் என்பது வியப்பாக இருக்கிறது.

தங்கலான்

பா. ரஞ்சித் இயக்கியிருக்கும் தங்கலான் திரைப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகின்றன. விக்ரம், மாளவிகா மோகன், பார்வதி, உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது . அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தங்கலான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Parijatham Serial: கண்ணாமூச்சி ஆடிய காதலன்.. வர்ஷினியை கொல்ல முயற்சித்த ஸ்ரீஜா அப்பா
Parijatham Serial: கண்ணாமூச்சி ஆடிய காதலன்.. வர்ஷினியை கொல்ல முயற்சித்த ஸ்ரீஜா அப்பா
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
மீண்டும் எஞ்சாய் எஞ்சாமி பாடல் சர்ச்சை...ஓப்பனாக திட்டிக்கொள்ளும் சந்தோஷ் நாராயணன் மற்றும் அறிவு
மீண்டும் எஞ்சாய் எஞ்சாமி பாடல் சர்ச்சை...ஓப்பனாக திட்டிக்கொள்ளும் சந்தோஷ் நாராயணன் மற்றும் அறிவு
முதல் நாள் பார்த்தபோது பிடிக்கவேயில்லை...யூத் பட விழாவில் கென் பற்றி தனுஷ் கலகலப் பேச்சு
முதல் நாள் பார்த்தபோது பிடிக்கவேயில்லை...யூத் பட விழாவில் கென் பற்றி தனுஷ் கலகலப் பேச்சு
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Embed widget