Ameer Mother Passes Away: இயக்குனர் அமீரின் தாயார் மறைவு; திரை பிரபலங்கள் அஞ்சலி..!
தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக முத்திரை பதித்தவர் அமீர். அவரது தாயார் இன்று வயது மூப்பின் காரணமாக காலமானார். இதனால் திரைப் பிரபலங்கள் அமீரின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Ameer Mother Passes Away: தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக முத்திரை பதித்தவர் அமீர். இவரது தாயார் இன்று, வயது மூப்பின் காரணமாக காலமானார். இதனால் திரைப் பிரபலங்கள் அமீரின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அருமை இயக்குனர்
— R.Seenu Ramasamy (@seenuramasamy) July 12, 2022
மண்ணின் மைந்தர்
திரு,அமீர் அவர்களின்
தாயார் மறைந்த செய்தியறிந்தேன்.
அம்மாவிற்கு இதய அஞ்சலி 🙏 @directorameer pic.twitter.com/EgEvAZAIwE
அமீருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக தனது டிவிட்டர் பக்கத்தில், இயக்குனர் சீனு ராமசாமி, ”அருமை இயக்குனர் மண்ணின் மைந்தர் திரு,அமீர் அவர்களின் தாயார் மறைந்த செய்தியறிந்தேன். அம்மாவிற்கு இதய அஞ்சலி” என, பகிந்துள்ளார்.
Iravin Nizhal Review: படமா இது? அதுக்கும் மேல... உலக பார்வையில் விழும் இரவின் நிழல்!
தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் மற்றும் நடிகர் அமீர். நடிகர் சூர்யா மற்றும் நடிகை த்ரிஷா நடித்த மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமானவர், இயக்குனர் அமீர். மதுரையை பூர்வீகமாகக் கொண்டவரான அமீர், மதுரையை மைய்யமாக வைத்து பருத்திவீரன் படத்தை இயக்கி நடிகர் கார்த்திக்கை நடிகராக அறிமுகம் செய்து வைத்தார்.
வடசென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் இவரது நடிப்பை பார்த்து சினிமா வட்டாரமே பாராட்டியது. மேலும், அவ்வப்போது தனது சமூக நல அக்கறையினை அரசியல் மேடையோ, சினிமா மேடையோ எதுவானாலும் துணிந்து பேசிவருபவர் அமீர்.
இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான அமீரின் தாயார் பாத்துமுத்து பீவி வயது முதிர் காரணமாக மதுரையில் அவரது வீட்டில் காலமானார். அவரது உடல் மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள அமீரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அமீரின் தாயாரின் மறைவினையொட்டி அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், சினிமா பிரபலங்கள் பலர் நேரிலும், தொலைபேசி வழியாகவும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்