மேலும் அறிய

மற்ற மொழியில் இருந்து நடிகர்களை கொண்டுவந்தால் பான் இந்தியா படம் ஆகிடாது..விஷ்ணு விஷால் யாரை சொல்கிறார்?

தமிழில் உருவாகும் பான் இந்திய படங்களின் தோல்விக்கான காரணம் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் பேசியிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர்  பிரவீன் K இயக்கத்தில்,  முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க,  இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”. இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது. பேட்டி ஒன்றில் பான் இந்திய நோக்கத்தோடு எடுக்கப்படும் தமிழ் படங்கள் குறித்து விஷ்ணு விஷால் பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது

அக்டோபர் 31 வெளியாகும் ஆர்யன் 

நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் இயக்குநர் செல்வராகவன்  மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து  நடித்துள்ளனர். புதுமையான திரைக்கதையில் பரபரப்பான ஆக்சன் இன்வடிகேடிவ் திரில்லராக  இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர்  பிரவீன் K.  விஷ்ணு விஷால் நடித்த “எஃப்.ஐ.ஆர்” படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்த படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். ஆர்யன் படத்தின் ப்ரோமோஷனின் போது மற்ற மொழியில் எடுக்கப்படும் படங்கள் பான் இந்திய அளவில் வெற்றிபெறும் போது ஏன் தமிழின் எடுக்கப்படும் பான் இந்திய படங்கள் குறித்து பேசினார். அவரது கருத்து கூலி இயக்குநர் லோகேஷ் கனகராஜை விமர்சிக்கும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். 

லோகேஷ் கனகராஜை விமர்சித்தாரா விஷ்ணு விஷால் ?

" பான் இந்திய அளவில் வெற்றிபெற்ற முதல் படம் தமிழில் ரஜினி நடித்த எந்திரன் திரைப்படம் தான். பான் இந்தியா என்கிற கலாச்சாரத்தையே நாம் தான் தொடங்கினோ. ஆனால் அந்த படத்திற்கு பின் அதே மாதிரியான வெற்றி நமக்கு அமையவில்லை. மற்ற மொழியில் பான் இந்திய வெற்றி பெற்ற படங்கள் அனைத்தும் அந்த நிலத்திற்கு நெருக்கமான கதைகள். ஆனால் நாம் எங்கேயோ நம்முடைய மண்சார்ந்த கதைகளில் இருந்து விலகியிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன்.  காந்தாரா , மஞ்சுமெல் பாய்ஸ் , புஷ்பா , கே.ஜி.எஃப் ஆகிய படங்கள் எல்லாம் அந்த மொழி ரசிகர்களின் உணர்வுகளுக்காக எடுக்கப்பட்ட படங்களே. ஆனால் தமிழ் படங்களைப் பொறுத்தவரை வெவ்வேறு மொழிகளில் இருந்து நடிகர்களை நடிக்கவைத்தால் அது பான் இந்தியா படம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நான் சொன்ன மற்ற படங்களில் பிற மொழி நடிகர்கள் நடிக்கவில்லை. நாம் நம் மண் சார்ந்த கதைகளை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். " என விஷ்ணு விஷால் பேசினார்

தலைப்பு செய்திகள்

Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
Rajinikanth: கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
Trump Vs China Russia: “ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
“ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
மைலேஜ் மன்னன் யார்? பட்ஜெட், சேஃப்டி; நாட்டின் பெஸ்ட் 100 சிசி பைக்குகள் லிஸ்ட், ஒப்பீடு!
மைலேஜ் மன்னன் யார்? பட்ஜெட், சேஃப்டி; நாட்டின் பெஸ்ட் 100 சிசி பைக்குகள் லிஸ்ட், ஒப்பீடு!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
Honda ZRV Price: BMW X1, Skoda Kodiaq-க்கு போட்டியாக வந்த ப்ரீமியம் ஹைப்ரிட் கார்; ஹோண்டா ZR-V-ன் விலை இவ்வளவா.?!
BMW X1, Skoda Kodiaq-க்கு போட்டியாக வந்த ப்ரீமியம் ஹைப்ரிட் கார்; ஹோண்டா ZR-V-ன் விலை இவ்வளவா.?!
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
Embed widget