மேலும் அறிய

Dhanush Next Movie: சத்தமில்லாமல் நடந்த தனுஷ் பட பூஜை... D50 படத்தின் தலைப்பு இதுதானா? பரபரக்கும் கோலிவுட்!

இப்படத்துக்கு ராயன் எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், வட சென்னையை மையப்படுத்திய பழிவாங்கல் கதையாக இப்படம் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்க உள்ள டி50 படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கேப்டன் மில்லர் படத்தில் தற்போது தனுஷ் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில்,  தனுஷ் அடுத்ததாக நடித்து இயக்கும் டி50 படம் குறித்த அப்டேட்கள் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து பகிரப்பட்டு வருகின்றன.

நட்சத்திரப் பட்டாளம்

அதன்படி, சன் பிச்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும், துஷாரா விஜயன் - காளிதாஸ் ஜோடி ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்குப் பிறகு இப்படத்தில் இணைவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் நடிகர்கர்கள் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா முரளி உள்ளிட்டோர் இப்படத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் ஏற்கெனவே வெளியாகின. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கும் நிலையில்,  வட சென்னையை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் இருக்கும் என்றும் தகவல்கள் முன்னதாக வெளியாகின.

சத்தமில்லாமல் பூஜை

இந்நிலையில் இன்று D50 படத்தின் பூஜை சத்தமில்லாமல் முடிந்து, படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக இணையத்தில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

கேப்டன் மில்லர் படத்துக்காக நீண்ட தலைமுடியுடன் வலம் வந்த நடிகர் தனுஷ், நேற்று முன் தினம் மொட்டை போட்ட கையுடன் திருப்பதியில் உலவிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் , தந்து D50 படத்துக்காக தனுஷ் மொட்டை போட்டுள்ளதாகவும் இன்று அதன்படி  பூஜை தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தின் தலைப்பு

மேலும் இப்படத்துக்கு ராயன் எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், வட சென்னையை மையப்படுத்திய ரிவெஞ் கதையாக இப்படம் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்துக்காக 500 வீடுகளைக் கொண்ட பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 90 நாள்கள் தொடர்ச்சியாக ஷூட்டிங் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், நாளை (ஜூன்.06) ஜெயிலர் பாடலான காவாலா பாடல் நாளை வெளியாகும் நிலையில், இந்த அப்டேட்டைத் தொடர்ந்து பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடங்கியது தொடர்பான அப்டேட்டை படக்குழு வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மானுடன் கூட்டணி

முன்னதாக இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலும் நடிப்பதாகத் தகவல் பரவிய நிலையில், இத்தகவலை விஷ்ணு விஷால் மறுத்திருந்தார். இந்நிலையில் இப்படத்தில் மேலும் சில நடிகர்கள் இணையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் மற்றொருபுறம் மரியான், கலாட்டா கல்யாணம் (இந்தியில் அத்ரங்கி ரே) திரைப்படத்துக்குப் பிறகு தனுஷ் - ஏ.ஆர்.ரஹ்மான் காம்போவில் இப்படம் வெளியாக உள்ள நிலையில், பாடல்கள் குறித்த எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

மேலும் படிக்க: Ethir Neechal July 5 promo: விருந்துக்கு வந்த கரிகாலனை ஓடவிட்ட நந்தினி... ஜனனி பற்றி அறியும் ஜீவானந்தம்... சூடுபிடிக்கும் இன்றைய எதிர்நீச்சல் ப்ரோமோ

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Embed widget