மேலும் அறிய

Idly Kadai vs Kantara 1: இட்லி கடையை காலி பண்ணிடுமா காந்தாரா 1? வெல்லப்போவது யார்?

ஆயுத பூஜை கொண்டாட்டமாக ரிலீசாக உள்ள இட்லி கடை படத்திற்கு காந்தாரா கடும் சவாலாக மாறியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். நடிகர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் இட்லி கடை. 

இட்லி கடை - காந்தாரா:

தனுஷுடன் ராஜ்கிரண், நித்யாமேனன், அருண்விஜய், சத்யராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். சமையற் கலைஞர் நிபுணருக்கும், சமையல் தொழில் அதிபருக்கும் நடக்கும் மோதலே குடும்ப பின்னணியில் கதைக்களமாக உருவாக்கப்பட்டுள்ளது. 

இட்லி கடை படம் வரும் 1ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த படத்திற்கு போட்டியாக காந்தாரா பாகம் 1 படம் வெளியாக உள்ளது. காந்தாரா படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இந்தியா முழுவதும் திரும்பி பார்க்க வைத்தது. கன்னட திரையுலகை காட்டிலும் தமிழ் திரையுலகம் பெரிய திரையுலகமாக இருந்தாலும் காந்தாராவின் முந்தைய பாக வெற்றி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. 

தனுஷிற்கு தலைவலியாக மாறிய காந்தாரா:

இதனால், காந்தாரா பாகம் 1 மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சங்ககாலத்தில் நடப்பது போல கதைக்களம் உருவாகியுள்ள நிலையில், ரிஷப்ஷெட்டி இந்த படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படம் கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் வெளியாக உள்ளது.

தமிழ்நாட்டிலும் இட்லி கடை படத்தை காட்டிலும் காந்தாரா படத்தின் மீதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ளது. இது இட்லி கடைக்கு சற்று அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஏனென்றால், இயக்குனராக ராயன் படம் தனுஷிற்கு தோல்விப்படமாக அமைந்தது. இதனால், இட்லி கடை படத்தை வெற்றிப்படமாக மாற்ற அவர் முயற்சித்து வருகிறார். 

ஆயுத பூஜை, விஜயதசமி பூஜையை முன்னிட்டு தொடர் விடுமுறையால் படம் நல்ல வசூல் குவிக்கும் என்று கருதி படத்தை 1ம் தேதி வெளியிடுகின்றார் தனுஷ். அதேநாளில் பான் இந்தியா படமாக வெளியாகும் காந்தாரா படம் இட்லி கடை மிகப்பெரிய அளவில் போட்டியாக அமைந்துள்ளது. 

வெற்றி பெறப்போவது யார்?

இட்லி கடையை காந்தாரா காணாமல் போகச் செய்யுமா? காந்தாராவை வீழ்த்தி இட்லி கடை வெற்றிகரமாக ஓடுமா?என்ற போட்டி உருவாகியுள்ளது. காந்தாரா படத்தின் ட்ரெயிலரே ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ரிஷப் ஷெட்டி, ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவையா போன்ற நட்சத்திரங்கள் உள்ளனர்.  அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். அர்விந்த் காஷ்யப் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை ஹோம்பலே ப்லிம்ஸ் தயாரித்துள்ளது.

இட்லி கடை படத்தை தனுஷ் இயக்கியிருப்பதுடன் தனுஷின் உண்டர்பார் ப்லிம்ஸ்  மற்றும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் விநியோகிஸ்துள்ளது. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். கிரண் கெளசிக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 திரையிடல் நாளை முதல் நிறுத்தம்...திரையரங்க அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
ஜெயிலர் 2 திரையிடல் நாளை முதல் நிறுத்தம்...திரையரங்க அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
தசரா நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா ராமிடம் அத்துமீறிய நபர்!
தசரா நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா ராமிடம் அத்துமீறிய நபர்!
ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!
ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!
ரஜினியும் மோகன்லாலும் உறவினர்களா! இத்தன நாள் இது தெரியாம போச்சே
ரஜினியும் மோகன்லாலும் உறவினர்களா! இத்தன நாள் இது தெரியாம போச்சே

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
எதிர்பாராத ட்விஸ்ட்..! இதற்காக தான் சுள்ளான் மதனை போட்டு தள்ளினோம்! போலீஸ் பகீர் தகவல்!
எதிர்பாராத ட்விஸ்ட்..! இதற்காக தான் சுள்ளான் மதனை போட்டு தள்ளினோம்! போலீஸ் பகீர் தகவல்!
coimbatore power cut: கோவையில் நாளை (22-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (22-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
அப்படி என்ன அவசரம்.. டிரஸ் கூட மாத்த விடாமல் 5 மணிக்கு கைது செய்யும் அளவுக்கு.. கொதிக்கும் கனிமொழி!
அப்படி என்ன அவசரம்.. டிரஸ் கூட மாத்த விடாமல் 5 மணிக்கு கைது செய்யும் அளவுக்கு.. கொதிக்கும் கனிமொழி!
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
LocalBody Election: உள்ளாட்சி தேர்தலுக்கு நோ..! அதிகாரிகளை கொண்டு வேலையை முடிக்க அரசு திட்டம் -என்ன ஆச்சு?
உள்ளாட்சி தேர்தலுக்கு நோ..! அதிகாரிகளை கொண்டு வேலையை முடிக்க அரசு திட்டம் -என்ன ஆச்சு?
Chennai Airport: மீண்டும் தாமதமாகும் 3வது முனையம் திறப்பு..! சென்னை விமான நிலையத்திற்கு விடிவு காலம் எப்போது?
மீண்டும் தாமதமாகும் 3வது முனையம் திறப்பு..! சென்னை விமான நிலையத்திற்கு விடிவு காலம் எப்போது?
School Leave: விடாத கனமழை - சென்னை உள்ளிட்ட எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை?
விடாத கனமழை - சென்னை உள்ளிட்ட எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை?
Embed widget