முருங்கைக்காயின் உள்ளே இருக்கும் முருங்கை விதை கூந்தல் மற்றும் தோலுக்கு மிகவும் நல்லது ஆகும். ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது.
முருங்கைக்கீரை இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது. செரிமான பிரச்சினை, மலச்சிக்கலுக்கு தீர்வு காண்கிறது.
முருங்கையில் உள்ள குர்செடின் போன்ற ஆன்டி ஆக்சிடன்கள் கொழுப்பை குறைக்கிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது ஆகும்.
ரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது முருங்கை கீரைகள். இதனால், இதயமும் சீராக செயல்பட பக்கபலமாக உள்ளது.
முருங்கையில் பீட்டா கரோட்டின் இருப்பதால் இது கண் பார்வைக்கு பலமாக உள்ளது.
அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், ஆக்சிஜனேற்றிகள் இதில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை இது அதிகரிக்கிறது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் முருங்கையின் பங்கு முக்கியமானது.
கல்லீரல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை முருங்கை வகிக்கிறது. கொழுப்பை குறைப்பதால் கல்லீரல் நன்றாக செயல்படுகிறது.
முருங்கைக் கீரை சாப்பிடுவதால் எலும்பின் வலிமை அதிகரிக்கிறது. மூட்டு வலி, கீழ்வாதம் போன்றவற்றிற்கு நல்ல வலிநிவாரணியாக உள்ளது.
சுவாசத்திற்கு முருங்கை பக்கபலமாக உள்ளது. ஆஸ்துமா பிரச்சினைகளை இது குறைக்க உதவுகிறது.