மேலும் அறிய

Deepika Padukone: இதுவரை எந்த இந்தியருக்கும் கிடைக்காத பெருமை..உலகக்கோப்பையில் தீபீகா படுகோனே செய்த காரியம்

கால்பந்தாட்ட உலகக்கோப்பையை அறிமுகப்படுத்திய முதல் இந்தியர் என்ற பெருமையை, நடிகை தீபிகா படுகோனே பெற்றுள்ளார்.

22வது உலகக்கோப்பை போட்டி கத்தாரில் லூசைல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.  இதில் கால்பந்து விளையாட்டின் மிரட்டல் நாயகன் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினாவும்,  நடப்புச் சாம்பியன் பிரான்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. பரபரப்புக்கு கொஞ்சமும் குறைவின்றி கடைசி நிமிடம் வரை விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், பெனால்டி ஷுட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் மூன்றாவது முறையாக, 36 ஆண்டுகளுக்குப் பிறகு  அர்ஜெண்டினா அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து அதகளப்படுத்தியதுடன், 8 கோல் அடித்து கோல்டன் பூட்டை கைப்பற்றினார் பிரான்சு வீரர் எம்பாப்வே. ஒட்டு மொத்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியதற்காக மெஸ்ஸிக்கு  கோல்டன் பந்து விருதும், சிறப்பான பங்களிப்பால் தனது அணியை வெற்றிபெறச் செய்ய கோல்களைத் தடுத்த அர்ஜெண்டினாவின் கோல் கீப்பர் மார்டினஸ்க்கு கோல்டன் கிளவ் விருதும் வழங்கப்பட்டது.

உலகக்கோப்பையை அறிமுகப்படுத்திய தீபிகா படுகோனே:

முன்னதாக உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு வழங்குவதற்கான கோப்பையை, இந்திய நடிகை தீபிகா படுகோனே மற்றும் ஸ்பெயின் அணியின் முன்னாள் கோல் கீப்பர் ஐகர் கேசிலாஸ் ஆகியோர் சேர்ந்து நேற்ரு மைதானத்திற்கு கொண்டு வந்தனர். இந்தியர் ஒருவர் ஃபிபா உலகக்கோப்பையை மைதானத்தில் அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையகும். 

View this post on Instagram
 
A post shared by Deepika Padukone (@deepikapadukone)

தீபிகா பெருமிதம்:

இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் தீபிகா படுகோனே வெளியிட்டுள்ள பதிவில், ஃபிபா உலகக்கோப்பையை அறிமுகப்படுத்தியதோடு, விளையாட்டு உலக வரலாற்றில் சிறப்பான ஒரு ஆட்டத்தை பார்த்தேன், இதைவிட வேறு என்ன கேட்க முடியும் என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சைக்குள்ளான தீபிகாவின் உடை:

இதனிடையே, கோப்பையை அறிமுகப்படுத்தும் போது தீபிகா அணிந்து வந்த உடை தொடர்பாக, நெட்டிசன்கள் பலரும் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் பங்கேற்கும்போது, ஏன் எதோ பையை போன்ற ஒரு உடையை அணிந்து வந்தீர்கள் என தீபிகா படுகோனேவை நோக்கில் கேள்வி எழுப்பியுள்ளனர். அண்மையில், ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் பதான் படத்திலிருந்து வெளியான பாடலில், தீபிகா படுகோனே அணிந்திருந்த ஆடையும் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

Embed widget