Deepika Padukone Birthday| ‛மனநோயில் இருந்து மீண்டு வந்த ஃபீனிக்ஸ்’ : தீபிகா படுகோனின் பிறந்தநாள் இன்று..
Born with silver spoon என்பதாகத்தான் தீபிகாவின் வாழ்க்கை பார்க்கப்படுகிறது. ஆனாலும் 2014-ஆம் காலக்கட்டத்தில் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார்.
இளம்பருவம் :
இந்திய சினிமாவின் குயினாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன் . என்றும் மாற இளமையோடும் வசீகரத்தோடு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த தீபிகா படுகோன் அமெரிக்காவில் பிறந்தவர் . கடந்த 1986 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள டென்மார்க்கின் தலைநகரமான கோப்பென்ஹாகெனில் பிறந்தார். இவர் தாயார் பெயர் உஜ்ஜலா மற்றும் தந்தை பிரகாஷ் படுகோன். பிரகாஷ் படுகோன் மிகச்சிறந்த பூப்பந்தாட்ட வீரராகவும் இருந்திருக்கிறார். தீபிகா என்னதான் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக களமிறங்கியிருந்தாலும் அவர் தென்னிந்தியாவை சேர்ந்தவர். தீபிகா 11 மாத குழந்தையாக இருக்கும்பொழுது , குடும்பத்துடன் அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு குடியேறியுள்ளனர்.பெங்களூரில் உள்ள சோபியா உயர்நிலை பள்ளியிலும் , மவுண்ட் கார்மெல் கல்லூரியில் தனது கல்வியை முடித்தார்.
மாடலிங் ஆர்வம் :
தீபிகாவின் தந்தை சிறந்த பூப்பந்தாட்ட வீரராக இருந்ததாலோ என்னவோ ஆரம்ப நாட்களில் தந்தை போலவே பூப்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கியிருக்கிறார் தீபிகா படுகோன். நிறைய போட்டிகளில் பங்கேற்பது மட்டுமல்லாமல் அவர் பூப்பந்தாட்ட விளையாட்டின் குழுவில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். ஆனால் கல்லூரி படிக்கும் பொழுதே தனக்கு மாடலிங்கில் இருக்கும் ஆர்வத்தை அவ்வபோது வெளிப்படுத்தி வந்த தீபிகா, அப்போதே சிறந்த பிராண்டுகளுக்கான அம்பாசிட்டராகவும் இருந்திருக்கிறார்.
சினிமா எண்ட்ரி :
ஃபேஷன் ஷோ , விளம்பர படங்கள் என நடிக்க தொடங்கிவிட்டாலே நடிக்க வாய்ப்புகள் தேடி வருவது இயல்புதானே . அப்படித்தான் சில ஆல்பம் பாடகளில் நடிக்க தொடங்கியிருக்கிறார் தீபிகா . அதன் பின்னர் கடந்த 2006 ஆம் ஆண்டு தீபிகாவிற்கு கன்னட திரைப்படமான ஐஸ்வர்யாவில் உபேந்திராவிற்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்திய தீபிகாவை பாலிவுட் சிகப்பு கம்பள் விரித்து வரவேற்றது. 2007 ஆம் ஆண்டு வெளியான ஓம் ஷாந்தி ஓம் என்னும் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் இன்றளவும் பிரபலம். அதன் பிறகு அடுத்தடுத்து சினிமாவில் ஒப்பந்தமானார் தீபிகா. ஹாலிவுட் படங்களிலும் நடித்தார். அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த தீபிகா பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கிறார். ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.
மன உளைச்சல் :
Born with silver spoon என்பதாகத்தான் தீபிகாவின் வாழ்க்கை பார்க்கப்படுகிறது. ஆனாலும் 2014 ஆம் காலக்கட்டத்தில் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையா அல்லது தொழில்முறை போட்டியால் ஏற்பட்ட மன உளைச்சலா என கேட்டபொழுது, காரணம் எதுவுமே இல்லாத பொழுதும் நான் வெறுமையாகவும் , இருளில் இருப்பது போலவும் உணர்ந்தேன் . அதிலிருந்து மீள எனது குடும்பம் உதவியது. நான் மனநல மருத்துவரை அனுகி முழுமையாக குணமடைந்தேன் என பின்நாட்களில் தனது நேர்காணல்களில் தெரிவித்தார். மன உளைச்சல் என்பது ஒரு நோய் அது சிகிச்சை எடுத்தால் குணமாகிவிடும் , அவர்களை பைத்தியம் என முத்திரை குத்தாதீர்கள் என வெளிப்படையாக பேசிய தீபிகாவின் துணிவை பலரும் பாராட்டினர்.
காதல் :
ரன்பீர் கபூர், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் என சிலரின் காதல் வலையில் தீபிகா படுகோன் விழுந்ததாக செய்திகள் உண்டு . ஆனாலும் நீண்ட காலமாக தனது சக நடிகராக ரன்வீர் சிங்கினை காதலித்து வந்த தீபிகா கடந்த 2018 ஆம் ஆண்டு அவரை பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்டார். அவ்வபோது இந்த தம்பதிகளில் காதல் இன்ஸ்டாகிராமையே திக்குமுக்காட செய்துவிடும்.
விருதுகள் :
பாலிவுட் மட்டுமின்றி சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வருகிறார் நடிகை தீபிகா படுகோன். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதை பெற்றார். அடுத்தடுத்து தேசிய விருது போன்ற பல விருதுகளை பெற்ற தீபிகா சமீபத்தில் சிறந்த நடிகைக்கான உலக சாதனையாளர் விருதை வென்றார். குலோபல் அச்சீவர்ஸ் அவார்ட் என அழைக்கப்படும் அந்த விருதினை பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமை தீபிகா படுகோனையே சேரும்