மேலும் அறிய

Madame Web: ஸ்பைடர் மேன் உலகில் இணையும் பிரபல ஹாலிவுட் நாயகி.. ‘மேடம் வெப்’ ட்ரெய்லர் எப்படி?

மார்வெல் படவரிசையில் டகோடா ஜான்சன் நடித்திருக்கும் மேடம் வெப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது

பெண் சூப்பர்ஹீரோக்களை கொண்டுவரும் மார்வெல்

சமீப காலங்களில் பெண் சூப்பர்ஹீரோக்கள் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பைப் பெற்று வருகிறார்கள். மார்வெலின் பிளாக் விடோ, டி சி யின் வண்டர் வுமன் உள்ளிட்ட கதாபாத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட தனிப் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. தற்போது மார்வெல் தன்னுடைய பெண் சூப்பர் ஹீரோக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது. சமீபத்தில் திரையரங்கில் வெளியான தி மார்வெல்ஸ் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில், தங்களுடைய அடுத்த சூப்பர் ஹீரோ டீமை வெளியிட்டுள்ளது மார்வெல். 

டகோடா ஜான்சன்

பிரபல புத்தகமான ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே (fifty shades of grey)  நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை டகோடா ஜான்சன்.  இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘லவ் மி லைக் யூ டு’ பாடல் உள்ளூர் தெருக்களில் திருவிழாவில் ஒளிப்பரப்பாகும் அளவுக்கு ரீச் ஆகியது. இதனைத் தொடர்ந்து ஒரு சில வெற்றிப் படங்களை கொடுத்து வந்த டகோடா ஜான்சன், தற்போது மேடம் வெப் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேடம் வெப்

சிட்னி ஸ்வீனி, எம்மா ராபர்ட்ஸ், டகோடா ஜான்சன், இசபெல்லா பர்ஸ்ட்  உள்ளிட்டவர்கள் நடித்துள்ள மேடம் வெப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகியது. தன்னுடைய வாழ்க்கையில் அடுத்து நடக்க இருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் சூப்பர் பவரை பெறுகிறார் கதாநாயகி.

நான்கு பெண்களை கொலை செய்ய அடையாளம் தெரியாத ஒருவன் வருவதை முன்கூட்டியே பார்க்கும் இவர் அவர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். விதி இவர்கள் ஐந்து நபர்களையும் ஏன் ஒன்று சேர்க்கிறது . இவர்களைக் கொள்ள வரும் அந்த நபர் யார் என்பதை எதிர்காலத்திற்கு சென்று தெரிந்துகொள்கிறார்.

எதிர்காலத்தில் தங்களது சூப்பர்பவர்களை அடைய இருக்கும் இந்தப் பெண்களை தன்னுடைய செயல்களுக்கு தடையாக கருதும் வில்லன் அவர்களை கொல்ல வருகிறார். அவனை எதிர்த்து இந்த பெண்கள் சண்டையிடுவதே இந்தப் படத்தின் கதையாக இருக்கிறது. மேடம் வெப் திரைப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக இந்தப் படத்தில் புகழ்பெற்ற பாப் பாடகரான பில்லி ஐலீஷின் பாடல் ஒன்றும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : Marvel What If Series: மார்வெல் ரசிகர்கள் காட்டில் மழை.. வாட் இஃப் சீரிஸ் சீசன் 2 - 9 நாட்களில் 9 எபிசோட்கள் : தரமான டிரெய்லர்

Dhruva Natchathiram : சூர்யா என்ன நம்பல.. துருவ நட்சத்திரம் படத்தை சூர்யா நிராகரித்த காரணம் சொன்ன கெளதம்..

தலைப்பு செய்திகள்

’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
JD Vance Vs Iran: “சும்மா வாக்குறுதி கொடுத்தா மட்டும் போதாது, முதல்ல...“ ஈரானுக்கு செக் வைத்த அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்
“சும்மா வாக்குறுதி கொடுத்தா மட்டும் போதாது, முதல்ல...“ ஈரானுக்கு செக் வைத்த அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்
Jaguar Type 01 EV Car: மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
Embed widget