மேலும் அறிய

D. Imman: ஆதரவற்ற துணை நடிகருக்கு இறுதிச்சடங்கு...உதவிய டி.இமான்...ரசிகர்கள் நெகிழ்ச்சி!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த துணை நடிகர் பிரபுவின் இறுதிச்சடங்குகளை மேற்கொண்டு, அவருக்கு கொள்ளி வைத்துள்ளார் இசையமைப்பாளர் டி. இமான்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த பல நடிகர்களும் காணாமல் போய் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் திரையில் ஒரு சில காட்சிகளில் நடித்துவிட்டால் நாம் பெரிய ஆளாகி விடலாம் என்ற எண்ணத்தில் பலரும் பல நாட்கள் பாடுபட்டு சினிமாவில் நடிக்க வாய்ப்புகளுக்காக தேடித் திரிகிறார்கள்.

பிரபலமாக இருந்த பலருக்கும் அந்த நிலை என்றால் ஒரு சில படங்களில் மட்டுமே தலை கட்டிய துணை நடிகர்களின் நிலை பற்றி சொல்லவே தேவையில்லை. இது போல பல உதாரணங்களை பார்த்தாலும் சினிமா மீது இருக்கும் மோகம் மக்கள் மத்தியில் குறையவேயில்லை. 

 

D. Imman: ஆதரவற்ற துணை நடிகருக்கு இறுதிச்சடங்கு...உதவிய டி.இமான்...ரசிகர்கள் நெகிழ்ச்சி!

அப்படி ஏராளமான கனவுகளோடும் ஆசைகளோடும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடியவர் துணை நடிகர் பிரபு. 100க்கும் மேற்பட்ட படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் துணை நடிகராக நடித்துள்ளார் என்றாலும் தனுஷ் நடித்த 'படிக்காதவன்' படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார்.

கடந்த சில காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார் துணை நடிகர் பிரபு. சொந்த பந்தம் என யாருடைய ஆதரவும் இல்லாமல் மருத்துவ செலவிற்கு கூட சிரமப்பட்டு வந்த துணை நடிகர் பிரபுவுக்கு பலரும் மருத்துவ செலவுக்கான உதவிகளை செய்து வந்துள்ளார்கள். 

 

D. Imman: ஆதரவற்ற துணை நடிகருக்கு இறுதிச்சடங்கு...உதவிய டி.இமான்...ரசிகர்கள் நெகிழ்ச்சி!
அந்த வகையில் துணை நடிகர் பிரபுவின் பொருளாதார செலவுக்கு உதவி செய்து வந்துள்ளார் இசையமைப்பாளர் டி. இமான். இந்நிலையில், புற்றுநோய்க்கு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த பிரபு சிகிச்சைப்பலனின்றி ஜூன் 15ஆம் தேதியான நேற்று உயிரிழந்தார்.

உறவினர்கள் யாரும் இல்லாததால் பிரபுவின் இறுதிச்சடங்குகளை டி. இமான் செய்துள்ளார். மேலும் அவரின் உடல் தகனத்தின் போது கொள்ளியும் வைத்துள்ளார். டி. இமான் எவரது பாராட்டுகளையும் எதிர்பார்த்து இதை செய்யாவிட்டாலும், கோலிவுட் ரசிகர்களை இமானின் இந்த செயல் நெகிழ வைத்துள்ளது.

பொருளாதார செலவுகளை செய்யவே பலரும் தயங்கும் இந்தக் காலகட்டத்தில் பிரபு உயிருடன் இருக்கும் போது அவருக்கு உதவியதோடு, அவரின் மறைவுக்குப் பிறகு ஆதரவின்றி இருந்த அவரின் உடலுக்கு இறுதிச்சடங்குகளை முன்னின்று  செய்து வைத்தது பாராட்டுக்குரியது என நெகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.  

தலைப்பு செய்திகள்

விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்
‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Tata Avinya X Launch: லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
Embed widget