மேலும் அறிய

கேரளாவில் “கூலி” படத்தை கொண்டாடும் சேட்டன்கள்.. செண்டை மேளம் அடித்து தெறிக்க விட்ட ரசிகர்கள்

கேரள மாநிலம் பாலக்காட்டில் நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் செண்டை மேளதாளத்துடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் தான் வரவுள்ள நிலையில், ரஜினி ரசிகர்கள் இன்றைய தினமே பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் மேளதாளங்களோடு உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். 


கேரளாவில் “கூலி” படத்தை கொண்டாடும் சேட்டன்கள்.. செண்டை மேளம் அடித்து தெறிக்க விட்ட ரசிகர்கள்

ரஜினியின் 171வது திரைப்படமான இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அமிர் கான், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சவுபின் ஷாபிர், ஸ்ருதிஹாசன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற கூலி திரைப்படம் ஆக்‌ஷன் ரசிகர்களுக்காக செம மாஸாக படமானது வந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ரஜினிக்கு தமிழகத்தில் மட்டும் ரசிகர்கள் இல்லை. உலகம் முழுவதும் பல நாடுகளில் ரஜினி ரசிகர்கள் கூலி திரைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள், குறிப்பாக கேரள ரசிகர்கள் யாருடைய படத்தையும் பெரிய அளவில் கொண்டாட மாட்டார்கள். ஆனால் ரஜினியின் கூலி திரைப்படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். கேரள மாநிலம் பாலக்காட்டில் நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் செண்டை மேளதாளத்துடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாலக்காட்டில் மட்டும் 15க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தினசரி ஆறு காட்சிகள் வெளியிட கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது. 


கேரளாவில் “கூலி” படத்தை கொண்டாடும் சேட்டன்கள்.. செண்டை மேளம் அடித்து தெறிக்க விட்ட ரசிகர்கள்

கேரளாவில் 'கூலி' படத்தின் டிக்கெட் முன்பதிவு மட்டும் சுமார் ரூ.4.11 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் 'எம்புரான்' மற்றும் 'லியோ' ஆகிய படங்களுக்கு அடுத்த இடத்தில் டிக்கெட் முன்பதிவில் கூலி படம் இடம்பெற்றுள்ளது. 'சிவாஜி, எந்திரன்' போன்ற படங்களுக்கு பிறகு கேரளாவில் ரஜினி படங்களுக்கு டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைபெறுவது கூலி படத்திற்கு தான் நிகழ்ந்துள்ளது என விநியோகஸ்தர் தெரிவிக்கின்றனர். செளபின் ஷபிர் மலையாளத்தில் முக்கிய நடிகராக மாறி இருக்கிறார். 

பூஜா ஹெக்டோவோடு "மோனிகா" பாடலுக்கு நடனமாடி அசத்தியது கேரளாவில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காட்டிலுள்ள பிரியா திரையரங்கில் அதிகாலை 4 மணி முதலே காத்திருந்த ரசிகர்கள், தியேட்டர் கேட்டை எட்டிக்குதித்தும், திரையரங்கை நோக்கி, கூலிப்படத்தை பார்க்க வேகமாக ஓடிய காட்சிகளும் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Embed widget